search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிச்சயதார்த்தம்"

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரே பெண்ணுக்கு 3 பேருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்த புரோக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் கேரள மாநில பெண்களை ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் பலருக்கு திருமணம் செய்து வைக்கும் தரகர் வேலை செய்து வருகிறார். கண்ணனிடம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார்கள் சக்திவேல், விஸ்வநாதன், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே அணுகி தங்களுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூறியுள்ளனர்.

    அதற்கு அவர், தனக்கு புரோக்கர் கமி‌ஷன் ரூ.25 ஆயிரம் மற்றும் கேரளாவுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, நிச்சயதார்த்த பெண்ணுக்கு மோதிரம் என ஒவ்வொருவரிடமும் ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரையும் சமீபத்தில் கேரள மாநிலத்திற்கு தனித்தனியாக அழைத்து சென்று, அங்குள்ள ஒரே பெண்ணுக்கு 3 பேரையும் மோதிரம் போட்டு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். அப்போது அவர்கள் அந்த மணப்பெண்ணை தங்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

    இந்த புகைப்படம் தான், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் இந்த தரகரின் மோசடி வேலையை அடுத்த சில நாட்களிலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொத்தனார்கள் 3 பேரும் அவர்கள் நிச்சயம் செய்த பெண் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

    பேச்சுவாக்கில், தாங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் கேரள பெண்ணின் படத்தை அவர்கள் 3 பேரும் மற்றவர்களிடம் காண்பித்தனர். அப்போது தான் அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்ததையும், தாங்கள் ஏமாற்றபட்டதையும் அறிந்து ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமண தரகர் கண்ணனிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. #tamilnews
    பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கு மிமிக்ரி கலைஞர் அனூப்புக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. #VaikomVijayalakshmi
    கண் பார்வை இல்லாவிட்டாலும், தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சிறந்த வீணை இசைக்கலைஞரும் ஆவார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 35 ஆகிறது. 

    பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும் போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’, ‘வீரசிவாஜி’, ‘என்னமோ ஏதோ’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

    இவருக்கும், மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்கள் நிச்சயதார்த்தம் வைக்கத்தில் உள்ள விஜயலெட்சுமி வீட்டில் எளிமையாக நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். வைக்கம் விஜயலெட்சுமி - அனூப் திருமணம் அடுத்த மாதம் அக்டோபர் 22-ந் தேதி வைக்கம் மகாதேவர் கோவிலில் நடக்கிறது.



    வைக்கம் விஜயலெட்சுமியின் வாழ்க்கை கதை மலையாளத்தில் சினிமாவாக தயாராகிறது. இந்த படத்தில் கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் நடிக்கிறார். #VaikomVijayalakshmi

    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.

    ஆசிய விளையாட்டில் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார். அரியானாவை சேர்ந்த வினேஷ் போகத் நேற்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினர், பொதுமக்கள் வரவேற்றனர். அவருக்கு மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.



    அவரை காதலர் சோம்வீர் ரதியும் வரவேற்க வந்து இருந்தார். அப்போது விமான நிலையத்தில் வாசலில் வினேஷ் போகத்- சோம்வீர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அங்கு அப்போது கூடியிருந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆரவாரம் செய்தனர். இருவரும் கேக்கை வெட்டி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். #AsianGames2018
    ×