என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 138536
நீங்கள் தேடியது "slug 138536"
கரூர் மாவட்டத்தில் பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MRVijayabaskar
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவு ஆணை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சாபநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் கலந்து கொண்டு பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவுகளை வழங்கினர்.
அப்போது இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காலனி வீடுகளை பழுது நீக்கித் தர அதிகளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பழைய வீடுகளை பழுது நீக்க சட்டமன்ற மேம்பாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நிதி பெற்று ஒரு வீட்டிற்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 350 வீடுகளும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 150 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 250 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 314 வீடுகளும் என மொத்தம் 2094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்காக ரூ.10 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 994 வீடுகளுக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பிலான வேலை உத்தரவுகள் வழங்கப்படுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, மனோகரன், தவமணி, ராஜேந்திரன், வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.#MRVijayabaskar

வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் பழுதாகி நின்ற குடிநீர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதான லாரி அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck
பெரம்பூர்:
சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் லாரி ஒன்று, இன்று காலை வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தது.
காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள கணேசபுரம் ரெயில்வே பாலத்தில் குடிநீர் லாரி சென்றபோது பழுதாகி நின்றது. உடனே பழுதை சரிசெய்ய முடியவில்லை.
12 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் பாலத்தில் நின்ற அந்த லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் ரெயில்வே பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.
இதுபற்றி குடிநீர் வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மற்றொரு குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மாற்றப்பட்டது.
மீதம் உள்ள 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாலத்தில் திறந்து விடப்பட்டது. அது வெள்ளம்போல் ரோட்டில் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வேறு ஒரு வாகனம் மூலம் பழுதான லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
குடிநீர் லாரி ரெயில்வே பாலத்தில் நின்று போனதால் வியாசர்பாடி பகுதியில் மதியம் 12 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழுதான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck

ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் புகளூர், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து குழாய்கள் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தவுட்டுப்பாளையம் -பாலத்துறை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே செல்லும் குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தி வரும் நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏர்வால்வில் ஏற்பட்ட பழுதினை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.
இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமானநிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

×

X