search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்"

    சென்னையில் வெப்பம் 67 டிகிரி ஆக குறைந்ததால் கடும் குளிர் நலவுகிறது. இன்னும் 3 நாட்கள் நீடிக்கும் என்று தனியார் வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. வானம் அடிக்கடி மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இரவில் கடும் குளிர் நிலவுகிறது.

    நேற்று முன்தினம் குறைந்தபட்சமாக 71.24 டிகிரி வெப்பம் நிலவியது. நேற்று வெப்பநிலை 67 டிகிரி ஆக குறைந்தது. இன்னும் 2 நாட்களுக்கு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்னும் 2 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என தனியார் வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    வட இந்தியாவில் இருந்து கடுமையான குளிர்ந்த காற்று வீசுகிறது. அதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு வெப்பம் குறைந்து கடும் குளிர் நிலவும். பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    திருப்பதியில் கடும் குளிர் நிலவுவதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Tirupati
    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் வாகனங்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக மின்வயர், கேபிள், பக்திசேனல் வயர், கண்காணிப்பு கேமரா வயர்கள் செல்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக தரைவழியாக வயர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான்கு மாட வீதிகளில் இரும்பு கேட்டுகளை சீரமைத்து அமைக்க வேண்டும். அதுமட்டுமல்ல திருப்பதியில் உள்ள தெப்பகுளத்தை சுற்றியுள்ள இரும்பு தடுப்புகளை பித்தளை தடுப்புகளாக மாற்றப்படும்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள மரத்தேர் புதுப்பிக்க வேண்டும். மேலும் ரிங்ரோட்டில் மரக்கன்று, செடிகள் நடப்படும். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தை சீரமைத்து பொதுமக்களின் வருகையை அதிகரிக்க வேண்டும்.

    இந்த மாதம் குளிர்காலம் என்பதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க வேண்டும். மேலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் வசதி மேற்கொள்ள வேண்டும்.

    கபிலேஸ்வரசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து முடித்து உட்கார்ந்து செல்வதற்கு இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Tirupati
    வெள்ளையர் ஆட்சிக்காலத்து மரபான தர்பார் மாற்றத்தின்படி காஷ்மீர் மாநிலத்தின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் நாளை முதல் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat
    ஸ்ரீநகர்:

    தமிழக அரசின் தலைமை செயலகம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதைப் போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில தலைமை செயலகமும் அந்த மாநிலத்தின் தலைநகரில் இயங்கி வருகின்றன.

    ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கோடை மற்றும் கடுங்குளிர் காலங்களில் தலைமை செயலகம் முறையே ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் என இரு இடங்களில் இயங்கி வருகிறது.

    இப்படி தலைமைச் செயலகத்தை மாற்றும் இந்த மாற்றமானது, தர்பார் மாற்றம் என்றழைக்கப்படும் இந்த வழக்கம் காஷ்மீரை குலாப் சிங் என்ற மன்னர் ஆட்சி செய்த 1872 முதல் கடந்த 146 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தலைமை செயலகம் மட்டுமின்றி அம்மாநில கவர்னர் மாளிகையும் குளிர் மற்றும் கோடைக் காலங்களில் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் இயங்கும்.

    குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மற்றும் முக்கிய கோப்புகளை ஜம்முவுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

    இதற்கு வசதியாக ஸ்ரீநகரில் இயங்கி வந்த மாநில தலைமை செயலகம் கடந்த மாதம் 26-ம் தேதி மூடப்பட்டது. ஸ்ரீநகரில் தங்கியிருந்த அரசுப் பணியாளர்களும் ஜம்முவுக்கு திரும்பத் தொடங்கினார்கள். 

    இந்நிலையில், நாளை முதல் அம்மாநிலத்தின் தலைமைச் செயலகம் ஜம்முவில் இயங்கத் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இன்னும் 6 மாதத்திற்கு காஷ்மீரின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat 
    ×