search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைக்குழந்தை"

    ஐதராபாத் அரசு மருத்துவமனை அருகே பசி தாங்காமல் துடித்து கொண்டிருந்த அனாதை கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ் பிரியங்காவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #HyderabadwomanPolice #WomanPolice
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர் நின்றிருந்தபோது, மிதமிஞ்சிய போதையில் அவ்வழியாக வந்த ஒரு பெண் தன் கையில் இருந்த குழந்தையை இர்பான் கையில் திணித்தார்.

    சற்று நேரம் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், இதோ வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்ற அந்தப் பெண் சிலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதற்குள் இர்பான் கையில் இருந்த அந்த இரண்டுமாத பெண் குழந்தை பசி தாங்காமல் அழ ஆரம்பித்தது.

    குழந்தையின் அழுகை அதிகரிக்கவே அருகாமையில் உள்ள தனது வீட்டுக்கு அதை தூக்கிச் சென்ற இர்பான், புட்டிப்பால் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அதை குடிக்க மறுத்த குழந்தையின் கதறல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதற்குள் இரவு நெருங்கி விட்டதால், என்ன செய்வது? என்று புரியாமல் தவித்த இர்பான் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

    குழந்தையை தூக்கிக்கொண்டு அருகாமையில் இருக்கும் அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இரவுநேரப் பணியில் இருந்த தலைமை காவலர் ரவீந்திரனிடம் நிலைமையை கூறி, பசியால் துடித்து அழும் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார்.

    அழுதழுது சோர்ந்து பலவீனமாக காணப்பட்ட அந்த குழந்தையின் தவிப்பையும் பசியையும் உணர்ந்த ரவீந்திரன், மகப்பேறு முடிந்து பிரசவ விடுமுறையில் வீட்டில் இருக்கும் தனது மனைவி பிரியங்காவை கைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

    பேகம்பேட் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றும் பிரியங்காவிடம் விபரத்தை கூறினார். கணவன் கூறிய தகவல்களின் இடையே பசியால் துடித்து கதறும் குழந்தையின் அழுகுரல் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த பிரியங்காவின் இதயத்தை பிழிந்தது.

    சற்றும் தாமதிக்காமல் வாடகை கார் பிடித்து அப்சல்கஞ்ச் காவல் நிலையம் வந்துசேர்ந்தார், பிரியங்கா. அங்கு கணவர் ரவீந்திரன் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்ததை கண்ட அவர், உடனடியாக குழந்தையை வாரி அணைத்து, தாய்ப்பால் புகட்ட தொடங்கினார்.



    இந்த தகவலை அறிந்த ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார், தலைமை காவலர் ரவீந்திரனின் கடமை உணர்வையும், பெண் காவலர் பிரியங்காவின் தாய்மை உணர்வையும் பெரிதும் பாராட்டினார். பெற்றோர் தேடிவரும் வரை அந்த பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும் பிரியங்காவிடம் ஒப்படைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உரிய நேரத்தில் அரியதொரு உதவியை செய்த பெண் போலீஸ் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரவீந்திரனுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

    இதற்கிடையில் தெருக்களில் குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் அந்த குழந்தையின் தாயாரை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர். #HyderabadwomanPolice #WomanPolice #WomanPolicePriyanka
    குடும்பத்தகராறு காரணமாக கைக்குழந்தையுடன் ரெயில் முன்பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சின்னதடாகத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 27). இவருக்கும் சின்னியம்பாளையம் அருகே உள்ள கருப்பராயன்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனபால் (32) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யுவன் (1½) என்ற ஆண் குழந்தை இருந்தது. மகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. மேலும் தனபால் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவை புலியகுளத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் கணவன்-மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதைதொடர்ந்து மகேஸ்வரியின் பெற்றோர், சின்னதடாகம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து மகளையும், மருமகனையும் குடியமர்த்தினார்கள். போலீசில் புகார் செய்த சம்பவத்தை தொடர்ந்து தனபால், தன்னுடைய மாமனார் வீட்டுக்கு வருவதில்லை. மகேஸ்வரி மட்டும் கைக்குழந்தையுடன் அடிக்கடி வந்து சென்றார். கணவன்-மனைவி தகராறு தொடர்ந்து நீடித்தது.

    இந்தநிலையில், கர்ப்பிணியான மகேஸ்வரியை தகாத வார்த்தையால் தனபால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரி மனவேதனை அடைந்தார். பிரசவத்துக்கு இன்னும் 15 நாட்களே இருந்தநிலையில், கணவனுடன் வாழ்வதை விட உயிரைவிடுவதே மேல் என்று தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கோவை ரத்தினபுரி பகுதிக்கு மகேஸ்வரி, தன்னுடைய கைக்குழந்தை யுவனுடன் வந்துள்ளார். ரத்தினபுரி தில்லை நகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்தார். அப்போது பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. அப்போது ரெயில் முன் கைக்குழந்தையுடன் அவர் பாய்ந்தார். இதில் உடல் துண்டாகி மகேஸ்வரி, யுவன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    பிரசவம் ஆக 15 நாட்களே இருந்தநிலையில் மகேஸ்வரி ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதால், வயிற்றில் இருந்த சிசுவும் தண்டவாளத்தில் இறந்தநிலையில் விழுந்தது. அந்த சிசுவும் ஆண் குழந்தையாகும். ரத்தவெள்ளத்தில் 3 உடல்களும் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

    மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் உடல்களை பார்த்து மகேஸ்வரியின் தாய் ஜோதிமணி, தந்தை செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் கதறிதுடித்தனர். மகேஸ்வரியின் தாய் ஜோதிமணி கூறும்போது, என்னுடைய மகள் தற்கொலைக்கு மருமகன் தனபால்தான் காரணம். அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஸ்வரியின் கணவர் தனபாலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Monkey #Women #UP
    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது.

    இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை சேர்ந்தவர் பூரான்தேவி(59). இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக தாக்கி கடித்தது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து குரங்குகள் கடித்து குதறின.

    படுகாயம் அடைந்த அவரால் எழுந்து ஓட முடியவில்லை. இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்துவிட்டு பூரான் தேவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை திடீரென்று பாய்ந்து தாக்குகின்றன. தற்போது உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் பீதி நிலவுகிறது. #Monkey #Women #UP
    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த 12 நாள் குழந்தை குரங்கிடம் சிக்கி கடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Monkey #Kills #Baby
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள மொஹல்லா கச்சேரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அமர்ந்தவாறு பிறந்து பன்னிரெண்டே நாளான தனது ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு பாய்ந்தோடி வந்த ஒரு குரங்கு அந்தப் பெண்ணின் அரவணைப்பில் இருந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறித்துச் சென்றது. இதனால் பதறிப்போன அந்த தாயின் கூக்குரலை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடிவந்து, குரங்கை விரட்டிச் சென்றனர்.

    அவர்களிடம் பிடிபடாமல் மரங்களின்மீதும் வீடுகளின்மீதும் குழந்தையுடன் தாவியேறிச் சென்ற குரங்கு மறைந்து விட்டது.



    இந்நிலையில், அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அந்த குழந்தை கடிபட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட உறவினர்கள் அதை மீட்டெடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  #Monkey #Kills #Baby
    ×