என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருச்செங்கோடு"
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தனியார் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வங்கியில் திடீரென தீப்பிடித்து, கரும்புகை குபு, குபு வென வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே வங்கியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், வங்கியின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் உட்புறம் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.
இதனால் வங்கி மேலாளர் சமீர் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் தீ மளமளவென பரவி வங்கியில் இருந்த கணினி, ஏ.சி., மேசை, நாற்காலி, தளவாடச் சாமான்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்தது. இப்பொருட்களின் சேதமதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
தீ விபத்தில் வங்கியில் இருந்த சுமார் 20 லட்சம் பணம் தப்பியது. மேலும் அடமானத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பொருட்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தெரியவில்லை. இது குறித்து எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #BankFire
திருச்செங்கோடு:
ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.24 மணிமுதல் இன்று அதிகாலை 2.23 மணிவரை பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலை சுற்றி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவில் அடிவார படிகட்டில் விளக்கேற்றி பூஜை செய்த பக்தர்கள் அதன்பிறகு கிரிவலம் மேற்கொண்டனர்.
சுமார் 7 கி.மீட்டர் தூரம் சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் பக்தர்கள் குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர். மாலை கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நேரம் ஆகஆக பக்தர்கள் கூட்டம் அதிகமானது.
இதனால் திருச்செங்கோடு நகரில் கிரிவலம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
ஆடிமாத பவுர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் திருச்செங்கோட்டில் திரண்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் கிரிவல நாட்களில் திருச்செங்கோட்டிற்கு சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளில் இருந்து கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #temple
சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகளை, திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஷ்டி பிரைடு கிராம் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் சத்துணவு முட்டை வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு, இந்த தனியார் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடந்தது.
இதில் குமாரசாமியின் வீடு மற்றும் ஆடிட்டரின் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் சோதனை மற்றும் விசாரணையை முடித்துக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது. மேலும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையும் நடைபெற்றது.
இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதேபோல தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வந்த வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என தெரிகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே இதுகுறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் அந்த தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியை நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் சத்துணவு முட்டை முறைகேடு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
திருச்செங்கோடு பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவானதையொட்டி கட்சியின் ஒவ்வொரு நிர்வாகியும், சமுதாய தலைவர்கள், பல துறைகளின் முன்னோடிகள், பிரபலமானர்களை சந்தித்து 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை செயல்பாடுகள் குறித்து பேச வேண்டும் என்று தேசிய தலைமையால் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திருச்செங்கோட்டில் உள்ள அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவரும், குழுவின் உறுப்பினருமான காளியண்ண கவுண்டரை சந்திக்க பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் எச்.ராஜா திருச்செங்கோடு வந்தார்.
அப்போது எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக செயல்பட ஊக்கப்படுத்தபடுகிறார்கள்.பொதுவாக மக்கள் போராட்டம் என்றால் அரசு தீர்வு சொன்னவுடன் அடங்கி விடும்.
ஆனால் இவர்கள் ஊடுருவலால் முடிவுக்கு வர வேண்டிய ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள் பெரிதானது. காவல் துறை தலையிட வேண்டிய நிலை உருவானது.
நெடுவாசலை பொருத்த வரை உள்ளூர் மக்களும், மாநில அரசும் ஒப்புக் கொள்ளும் வரை திட்டம் அமல்படுத்தப்படாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. வட நாடு பகுதிகளில் இன்னும் இன்றும் பல இயக்கங்களை சேர்ந்த 30 பேர் போராட்டம் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை என்பது மிகவும் சீரியசான ஒன்று ஆகும். மணல் அடுத்த மாநிலத்துக்கு அனுமதிக்க கூடாது. இறக்குமதி மணல் கிடைப்பதால் மணல் அள்ள விட மாட்டோம் என்று சட்டம் கொண்டும் வர வேண்டும். 18 அடி வரை மணல் அள்ளினால் தண்ணீர் வந்தாலும் பள்ளத்தில் தேங்கி கடைமடை வரை வராது.
2004-ல் பெட்ரோல் விலை 34 ரூபாய், 10 ஆண்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 2014ன் படி லிட்டர் 74 ரூபாய் 10 ஆண்டில் 41 ரூபாய் விலை உயர்வு சராசரியாக ஆண்டுக்கு 4 ரூபாய் 4 பைசா உயர்ந்துள்ளது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு 9 ரூபாய் உயர்ந்துள்ளது. சராசரியாக 2 ரூபாய் 10 பைசாதான் உயர்ந்துள்ளது. விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
விலை உயர்வு என்பது பொய் பிரசாரம். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. அவ்வாறு வந்தால் டீசல் ரூ.45க்கும், பெட்ரோல் ரூ.55 க்கும் கிடைக்கும் ஆனால் அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறுகிறார்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
திருச்செங்கோடு:
நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. நகர செயலாளர் சின்னதம்பி வரவேற்றார். வடக்கு மாவட்ட பொருளார் ஈஸ்வரன், துணை செயலாளர்கள் பொங்கியண்ணன், விஜய கமல், ராஜா, தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் களாக கட்சியின் மாநில அவைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ், மாநில ஆலோசனைக் குழு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களையும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தே.மு.தி.க. கட்சியின் மாநில அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. அழகாபுரம் மோகன்ராஜ் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் 1974-ல் காவிரி ஒப்பந்தந்தை புதுப்பித்து இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
அ.தி.மு.க. பல துண்டுகளாக உடைந்துள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த தீர்ப்பு வந்தால் ஆட்சி இருக்காது என்ற நிலையில் மோடியின் தயவால் எடப்பாடி அரசு நீடிக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. நமது வாக்கு வங்கி அப்படியே தான் உள்ளது. அதனை ஒருங்கிணைக்க கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைப்பவர்கள் தே.மு.தி.க. தொண்டர்கள் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்