search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 139734"

    உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவியில் இருந்தும் இன்றே விலக தயார் என்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #TNMinister #SPVelumani
    கோவை:

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கே : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், மின்துறை அமைச்சர் தங்கமணி மின்வெட்டு துறை அமைச்சராக இருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் கூறி உள்ளாரா?

    ப : தமிழகத்தை பொறுத்தவரை கடந்த தி.மு.க. ஆட்சியின் போது 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு பிரச்சனை இருந்தது. அப்போது நாங்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால் தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

    ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபடும் போது உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. மின்துறை அமைச்சர் வாரா வாரம் சிறப்புக்கூட்டம் நடத்தி வருகிறார். யார் கேட்டாலும் மின்இணைப்பு தரப்படுகிறது. மின்சாரத்துறையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இன்று டி.டி.வி.தினகரன் பேசுகிறார் என்றால் அவர் 10 ஆண்டுகள் அம்மாவால் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் இதுவும் பேசுவார். இதற்கு மேலும் பேசுவார். திகார் ஜெயில் உள்பட எல்லா ஜெயிலையும் பார்த்த அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல தயாராக உள்ளார்.

    கே : உள்ளாட்சி துறையில் ஊழல் குறித்து உரிய ஆதாரங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளாரே?


    ப : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்வதை கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலை பார்க்கிறார். ஆர்.எஸ். பாரதி பியூன் வேலை பார்க்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க எங்கள் கட்சியில் பலர் உள்ளனர்.

    உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவியில் இருந்தும் இன்றே விலக தயார். ஊழலை நிரூபித்தால் அரசியலை விட்டே செல்ல தயாராக இருக்கிறேன். அதே சமயம், ஊழலை நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் கட்சி தலைவர் பதவியையும், எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகி துரைமுருகன், அழகிரிக்கு பதவியை கொடுக்க தயாராக இருக்கிறாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SPVelumani
    ஊழலை ஒழிக்க டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கொண்டுவந்த அரசின் சேவைகளை வீடுகளுக்கு நேரடியாக வந்து வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் 369 பேர் பயன் அடைந்தனர். #DoorStepDelivery
    புதுடெல்லி:

    சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்கவும் டெல்லி அரசு முடிவு செய்தது.

    பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்க மாநில அரசு திட்டமிட்டது.


    இந்த திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு அரசு அலுவலகங்களில் திட்டம் தொடங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது டெல்லியில் சட்டசபை தொகுதிகள் தோறும் ஆம்ஆத்மி கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 58 இடங்களில் பொது மக்கள் பார்த்து அறிய வசதியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    முதல் நாளான நேற்று வீடு தேடி வரும் சேவை திட்டத்தில் பலன் பெற 21 ஆயிரம் பேர் டெலிபோன் செய்தனர். ஆனால் முகவரிகளால் 1286 பேரிடம் மட்டுமே பேச முடிந்தது.

    அவர்களில் 369 பேர் மட்டுமே சேவைகளை பெற அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ‘1076’ என்ற டெலிபோன் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காலை 8 மணி முதல் 10 மணி வரை பேசி தங்களது அரசு சேவை குறித்த தேவைகளை தெரிவிக்கலாம். #DoorStepDelivery #Kejriwal
    போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். #Congress
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சுமார் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னையில் 12-ந்தேதி நடக்கிறது.

    பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:-

    சென்னை-குமரிஅனந்தன், யசோதா, செல்வ பெருந்தகை.

    திருவள்ளூர்-டாக்டர் ஜெயக்குமார்.

    திருவண்ணாமலை- தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி

    நாமக்கல்-எச்.வசந்த குமார்

    திருப்பூர்-முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

    சிவகங்கை-ப.சிதம்பரம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress
    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான ஊழல்கள் குறித்து வருமான வரித்துறை எழுதிய கடிதம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Vijayabaskar
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து தமிழக அரசுக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதிய வருமான வரித்துறை, அவற்றின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

    அக்கடிதத்தின் நகலையும், அக்கடிதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இல்லத்தில் நடத்தப்பட்ட மொத்தம் ரூ.20 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.12.96 லட்சம் பழுப்பு நிற உறைகளில் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் கடிதம், செவிலியர் இடமாற்ற ஆணை ஆகியவற்றுடன் வைக்கப்பட்டிருந்தாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    உறைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் கையூட்டாக பெறப்பட்டதாக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதுதவிர, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட 9 பக்க வரவுசெலவு ஆவணத்தில் சுகாதாரத்துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்காக 2016-ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஆகிய 5 மாதங்களில் மட்டும் கையூட்டாக ரூ.20.76 கோடி வசூல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் விதிகளை மீறி 72 மீட்டர் ஆழத்திற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவை விட 850 சதவீதம் கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது.

    இந்தக் கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் மூலம் சேர்த்ததாக வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட தொகை கடலில் மூழ்கியிருக்கும் பனிக்கட்டியின் முனை அளவு தான். அதுவே இந்த அளவுக்கு என்றால் விஜயபாஸ்கர் செய்த ஊழல்கள், அடித்த இயற்கை வளக் கொள்ளைகள் ஆகியவற்றின் உண்மையான மதிப்புகளை கணக்கிட்டால், அதைக் கொண்டு தமிழகத்தில் பாதியை வாங்கி விட முடியும்.


    அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குட்கா ஆலைகளில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதுகுறித்து தமிழக அரசு வருமான வரித்துறை எழுதிய கடிதத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அது குறித்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

    விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக வாக்களிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த போதிலும் அதன் மீது எந்த மேல்நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் நடப்பது மக்களைக் காப்பதற்கான அரசு அல்ல.... ஊழல்வாதிகளை காப்பதற்கான ஜனநாயக விரோத அரசு.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vijayabaskar
    தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில் ஊழல் என பல்வேறு துறைகளில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுகுவோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். #Anbumani #EdappadiPalaniswami
    சேலம்:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று சேலத்துக்கு வந்தார். அவரை சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் ராமலிங்கபுரம், பாரப்பட்டி, பூலாவாரி, பருத்திக்காடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் சந்தித்தனர்.

    அப்போது அவர்கள் நிலம் கையகப்படுத்த கோர்ட்டில் இடைக்கால தடை பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார்.

    சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலைகளும், 2 ரெயில் பாதைகளும், ஒரு விமான சேவையும் உள்ளது. இதனால் 8 வழிச்சாலை திட்டம் தேவையில்லை. தனிப்பட்ட நபர்களுக்காகவும், இயற்கை வளங்களை அழிக்கவும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்கிறது. இது வளர்ச்சி திட்டம் இல்லை. நிலம் பறிபோய் விடுமோ என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் அந்த திட்டத்தை எதிர்த்து நான் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். நீதிபதிகள் சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    எங்களது நோக்கம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சட்ட ரீதியாக மட்டுமின்றி தேவைப்பட்டால் 8 வழிச்சாலைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும் பா.ம.க. போராட்டம் நடத்தும். இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி நிதியில் தமிழகம் முழுவதும் 33 ஆறுகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

    கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த 6 வாரமாக 287 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையும் 3 முறை நிரம்பி காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. பாசனத்திற்கு 50 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், 150 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. கால்வாய்களை சரியாக தூர்வாராததால் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உபரிநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    கே- கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து உங்கள் கருத்து

    பதில்- கருணாநிதி தி.மு.க-வுக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழகத்திற்கும் தலைவர் அவர். இந்தியாவிற்கே வழி காட்டியாக இருந்தவர். அவரின் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அதை அரசியலாக பார்க்க கூடாது.

    கே- முதல் அமைச்சர் மீது ஊழல் புகார் தி.மு.க கொடுத்துள்ளது.

    பதில்- பொதுப்பணித்துறையில் 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார். அப்போது 5 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. அது மட்டும் அல்ல தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில் ஊழல் என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுக உள்ளோம்.

    69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. இதனால் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும். இதனால் ஒட்டு மொத்த தமிழக மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #TamilnaduHighWays #Thirunavukkarasar

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையால் தான் திருச்சி முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன.

    இதேபோன்று மேலும் பல அணைகள், மணல் கொள்ளையால் சேதமாகி உறுதிதன்மையை இழந்துள்ளது. அணைகளை சரிசெய்ய தலை சிறந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.

    மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும். முக்கொம்பு அணையில் ஏற்பட்டதை போல் எதிர் காலத்தில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்லாததற்கு சரியான பராமரிப்பு இல்லாதது தான் காரணம். இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கமி‌ஷன் வாங்குவதிலேயே குறியாக உள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள நெடுஞ்சாலையைத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர போவதாக ஸ்டாலின் கூறி இருக்கிறார். நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது.

    மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காவல்துறை பணி சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கவனிப்பது தான்.

    அதைவிடுத்து, அமைச்சர்கள் எங்கு சென்றாலும் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பாக குவிக்கப்படுவது சரியில்லை. உதாரணத்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி, கருணாநிதி இறுதி நிகழ்ச்சியில் வந்த போது, காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #IndependenceDayIndia #PMModi
    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ஊழல்வாதிகளுக்கும் கருப்புப் பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். ஊழல்வாதிகள் மற்றும் கறுப்பு பணம் வைத்திருப்போரை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு உதவியை சட்டப்புறம்பாக பெற்று வந்த 6 கோடி பேர் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். நலத்திட்ட உதவிக்கான ரூ.90,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

    REFORM, PERFORM, TRANSFORM (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) இதுவே மத்திய அரசின் தாரக மந்திரம். நேர்மையாக வரி செலுத்துவோரால்தான் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களின் வரிப்பணம் மக்கள் நலனுக்கே செலவிடப்படும். வாரிசு அரசியலை மத்திய அரசு ஒழித்துள்ளது. வரி செலுத்தும் ஒவ்வொரு வரும் ஏழைக் குடும்பங்கள் வயிறார சாப்பிட உதவுகிறார்கள்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #IndependenceDayIndia #Modi #PMModi
    சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெறமுடியவில்லை, மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஷெனாய்நகர் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளையும், விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வக்கீல் எடுத்துக்கூறினார்.

    இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர், விதிமீறல் கட்டிடங்களை தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடைய செய்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

    விதிமீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, மாநகராட்சி எல்லைக்குள் கட்டிட பணிகளை மேற்கொள்ள விதிகளை பின்பற்றி ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா?, விதிமீறல் கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பதில் அளிக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

    சென்னை மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, லஞ்சம் கொடுக்காமல் சென்னை மாநகராட்சியில் கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழும் பெறமுடியாத நிலை இருந்து வருவதாகவும், இதன் காரணமாக மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ஊழலில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்கள், ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) ஆய்வு கூட்டத்தில் உத்தரவாதம் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    தொழிலதிபர் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற ‘மக்களின் குரல்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ரஃபேல் போர் விமானம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது 526 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட போர் விமானம், தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக இந்த துறையில் சிறிதும் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தில் பங்கு அளிக்கப்பட்டதில் இருந்து இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிகிறது என்றும், மக்களின் வரிப்பணத்தை தொழிலதிபர்களுக்கு மோடி வழங்கி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய அவர், மோடி இந்திய மக்களுக்கு பிரதமராக பணியாற்றாமல், தொழிலதிபர்களுக்கு பிரதமராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் கிடைக்கும் லாபம் எதுவும் ஏழைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவுவதிலேயே மும்முரமாக செயல்படுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal 
    கோவில்களில் கோடிக்கணக்கில் ஊழல், சிலை கடத்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #LaGanesan #idolsmuggling
    சென்னை:

    இந்து அறநிலையத்துறையில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் கோவில்களுக்கு வழங்கிய காணிக்கையில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து இல.கணேசன் எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ரூ.500 கோடிதான் ஊழல் நடந்திருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் நடந்தது இன்னும் எவ்வளவோ? அறநிலையத்துறையில் ஊழல் நடப்பது புதிது அல்ல. கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

    அறநிலைய துறையில் பொறுப்புக்கு வருபவர்களுக்கு தெய்வ நம்பிக்கை கட்டாயம் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளுக்கு அளிக்கும் காணிக்கைகள் உரிய முறையில் செலவிடப்படுவது இல்லை. வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே கோவில்களுக்கு செலவிடப்படுகிறது. மீதம் உள்ள 80 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக எடுக்கப்படுகிறது.

    ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை வலுவடைந்து வருகிறது. கோவிலையும் அதன் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களே அதை சூறையாடி வருவது வேதனைக்குரியது.


    திருட்டு போன சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், உண்மையான உணர்வோடு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அறநிலையத்துறையின் முக்கிய நிர்வாகிகளே ஒத்துழைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது தெய்வத்துக்குத் தான் வெளிச்சம்.

    காணாமல் போன சிலைகள் மீட்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆண்டவன் தண்டனை ஒரு புறம் இருக்கட்டும், குற்றவாளிகளை கோர்ட்டு மூலம், ஆள்பவர்கள் தண்டிக்க வேண்டும்.

    இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். தெய்வ நம்பிக்கை கொண்டவர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு இல.கணேசன் எம்.பி. கூறினார். #BJP #LaGanesan #idolsmuggling
    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க பொருளாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், வக்கீல்கள் பிரிவு செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி ,தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

    முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியை எதிர்த்து தி.மு.க. ஆட்சியை அகற்ற 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே சரித்திரம் திரும்பி உள்ளது. தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கு அநீதியை உருவாக்கி உள்ளது.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த அந்த இயக்கம் இன்று துரோகிகளிடம் உள்ளது. அதை நாம் மீட்டெடுப்போம். தேர்தல் எப்போது வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுவது இல்லை.

    முட்டை ஊழல், பருப்பு ஊழல், ரோடு ஒப்பந்த ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர் வார ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியில் 10 கோடி கூட செலவழிக்கவில்லை. அதிலும் மெகா ஊழல் நடந்துள்ளது.

    இதற்கு காரணமான அனைவரும் பதில் சொல்லும் காலம் நெருங்கி விட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது சட்டசபையில் எங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி.

    ஜெயலலிதா ஆட்சி நடைபெறுவதாக கூறுகிறார்கள். அவர் கொண்டுவந்த திட்டங்களை இன்று பல மாநிலங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால் ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் 90 சதவீத தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 41 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஆனால் நான் 20 ரூபாய் நோட்டை காட்டி ஓட்டு வாங்கியதாக கூறுகிறார்கள். அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.

    நீங்கள் ரூ.10 ஆயிரம் ஓட்டுக்கு கொடுத்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெறும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அதை இந்த மாத இறுதிக்குள் எட்டி விடுவோம்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மக்கள் இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. தமிழக மக்கள் விரும்பாத ஆட்சியை தூக்கி எறிந்து, தலைநிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க அடிமை ஆட்சியை ஒழிப்போம். கம்பீரமாக இருந்த அ.தி.மு.க. அடிமை தி.மு.க.வாகி விட்டது. அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழக அரசை மத்திய அரசின் கீழ் உள்ள அடிமை அரசு என விமர்சிக்கும் நிலையை உருவாக்கிவிட்டனர்.

    விரைவில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. அப்போது நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, விவசாய பிரிவு செயலாளர் துரை.கோவிந்தராஜன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #TTVDhinakaran
    டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மோடி அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Congresscampaign #Modigovt
    புதுடெல்லி:

    புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

    மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அசோக்கெலாட் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி  பங்கேற்கவில்லை.

    இந்த கூட்டத்துகு பின்னர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தவறியது, பெருகிவரும் ஊழல் ஆகிய அவலங்களை  முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக மக்களிடையே பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். #Congresscampaign #Modigovt  
    ×