search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்காலம்"

    • குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி.
    • சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏைழ, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, 10-ம் ஆண்டாக இந்த ஆண்டும் தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு குளிர்கால கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குனர் காமினி குருசங்கர் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.

    இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

    உடல் நலப்பிரச்சனை வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சனை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
    வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சனை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பனிக்காலத்தில் நமது உடலை நோயின்றி பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

    1. குளிர்காலத்தில் உடலுக்குக் கதகதப்பு அளிக்கும் சில உடற்பயிற்சிகள், நிமிர்வது, குனிவது போன்ற அசைவுகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால், குளிரினால் ஏற்படும் உடல் மற்றும் தசை பனிவலி நீங்கும்.

    2. குளிர் காலத்தில் உணவை மிதமானச் சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும்.  எளிதில் செரிக்கக் கூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம்.  அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    3. குளிக்கச் செல்லும்முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழையைக் கூழாக அரைத்து முகம் மற்றும் உடலில் தேய்த்தாலும் சருமம் மிருதுவாக இருக்கும். ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள் கற்றாழை க்ரீம் பயன்படுத்தலாம்.

    4. குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் நல்லது. அதிக சூடான தண்ணீரில், அதிக நேரம் குளித்தால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். அதனால் வெதுவெதுப்பான சூட்டில் குளிக்க வேண்டும்.

    5. பனிக்காலத்தில் தாகம் குறைவாக ஏற்படும். அதனால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, வேறு பிரச்சனைகளை உருவாக்கும். எனவே, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும்.

    6. அதிக குளிர் காணப்படும் நேரத்தில்  உடலுக்குக் கதகதப்பு தரும் கம்பளி ஆடைகளை உடுத்த வேண்டும்.  இந்த ஆடைகள் குளிர்காலத்தில் வரும் நடுக்கத்தைக் குறைக்கும். கை, கால்கள், மூக்கு, காது பகுதியையும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    7. மாத்திரைகள் - ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களுக்கான மாத்திரை மருந்துகளை எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

    கற்றாழை ஜெல்லில் இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்த்து முதுமையையும் தள்ளிப்போடும்.
    குளிர்காலத்தில் வழக்கத்தை விட சரும பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோர்வான முகம், வறண்ட உதடுகள், உலர்ந்த சருமம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தண்ணீர் குறைவாக பருகுவதே அதற்கு முக்கிய காரணம். அது சருமத்தின் உள்புறமும், வெளிப்புறமும் உலர்தன்மை அடைவதற்கு வழிவகுத்துவிடும். ஆல்கஹால் சேர்க்கப்படாத கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.



    குளிப்பதற்கும், முகம் கழுகுவதற்கும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். அதிக சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடலில் எண்ணெய் சிறிதளவு தேய்த்துவிட்டு குளிக்க செல்லலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை சீராக பராமரிக்க வழிவகை செய்யும்.

    குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்துவிடும். குளிர்காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும்.

    சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது. யோகா செய்து வருவதும் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கும் வழிவகை செய்யும்.

    ×