search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 140445"

    • சாப்பிட்டுவிட்டு செல்லும்போது ஆலத்துரை சேர்ந்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
    • மங்களூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஆலத்தூர் வீரனார் கோவிலில் கடந்த ஜூலை மாதம் கிடாவெட்டி மனை போடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது அவர்களுக்கும் ஆலத்துரை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது மங்களூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆலத்தூர் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). மணிகண்டன் (22), தேவேந்திரன் (32), கருப்பையன் (19), ராஜதுரை (27), சுரேஷ் (21), சத்தியராஜ் (28), வீரக்குமார் (25), செல்வா என்ற செல்வராஜ் (27), பாரதி (19) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இவர்கள் 10 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் 10 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    • வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது
    • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

    அரியலூர்:

    அரியலூர் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 23ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அரியலூர் அடுத்த கல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் அஜித்(வயது19). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தில் அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் மாணவியை கடத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், குழந்தை திருமண வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இதனை ஏக காலதத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

    • தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தால் குண்டர் சட்டத்தில் சிறை
    • மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை

    நாகர்கோவில்:

    கல்குளம் குமாரபுரம் புத்தன் காலனியை சேர்ந்தவர் சிபு (வயது 33).

    இவர் மீது பூதப்பாண்டி, இரணியல், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து சிபு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார்.

    இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த், அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதைதொடர்ந்து போலீசார் சிபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    குற்ற நிகழ்வுகளில் குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாராய வியாபாரியான ஹரிகிருஷ்ணன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கலெக்டர் உத்தரவுபடி, ஹரிகிருஷ்ணனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை மேலக்காட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 43) சாராய வியா பாரி.

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதனால் இவரி ன்குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் கலெக்டர் உத்தரவுபடி, ஹரிகிருஷ்ணனை போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்களை கொள்ளையடித்தனர்.
    • போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை சிவன் வடக்கு வீதியை சேர்ந்த சாகுல் அமீது, ஜின்னா, தேத்தாகுடி பகுதியை சேர்ந்த முருகானந்தம், நீர் மூளையை சேர்ந்த கலைமணி ஆகியோரின் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்நிலையில், தோப்புத்துறை சோதனை ச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது, அந்த காரில் 20 பவுன் நகை மற்றும் 2 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த காரில் இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் மற்றும் திருவாரூரை சேர்ந்த குரு சக்தி ஆகியோரிடம் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக வேதாரண்யம் பகுதியில் நடந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.

    • சமூகவலை தளங்களில் மாணவி ஒருவர் தான் மது விருந்தில் பங்கேற்று தவறு செய்து விட்டதாக கண்ணீர் மல்க வெளியிட்ட ஆடியோ
    • பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை தாக்கிய அவரது முன்னாள் காதலனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் குளச்சல் அருகே பங்களா வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அங்கு கேளிக்கை என்ற பெயரில் மது விருந்து, காதல் ஜோடிகள் களியா ட்டம் போன்ற கலா சார சீரழிவுகள் இடம் பெற்றது தான்.

    பிறந்த நாள் கொண்டா ட்டத்தின் போது மாணவி அவரது பள்ளித் தோழனால் தாக்கப்பட்டதாக வந்த புகாரை விசாரித்தபோது தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் சமூகவலை தளங்களில் மாணவி ஒருவர் தான் மது விருந்தில் பங்கேற்று தவறு செய்து விட்டதாக கண்ணீர் மல்க வெளியிட்ட ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கும் விதமாக செல்போனில் கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் என குறுந்தகவல் அடிக்கடி வருவதாகவும் அந்த மாணவி ஆடியோவில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை கள்அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் விருந்து நடைபெற்ற பங்களாவை பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    மது விருந்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை தாக்கிய அவரது முன்னாள் காதலனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலை மறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் காதலரான அஸ்வின் அபினேஷ் (வயது 24) என்பவரை குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, பார்வதிபுரத்தில் கைது செய்தார். அவரை குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.
    • அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    மகாராஸ்திர மாநிலம் அவ்ரங்காபாத்தில் கடந்த ஜூலை 30-ந்தேதி வெங்காயம் லோடு ஏற்ற சென்ற சங்ககிரியை சேர்ந்த லாரியை அங்குள்ள விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.

    இதுபற்றி லாரி உரிமையாளர் திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் சி.ஆர்.சங்கரிடம் தெரிவித்தார். அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.

    இதையடுத்து லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி புக்கிங் ஏஜெண்ட்டுகள் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு வந்து தலைவர் மூர்த்தி, செயலாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் துணை தலைவர் சி.ஆர்.சங்கருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

    • மாதுளம் பேட்டை வினோத் என்பவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்தார்.
    • அவர்களிடமிருந்து 2 அரிவாள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்விரோதம் காரணமாக மாதுளம் பேட்டை வினோத் என்பவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.

    இந்த வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் அசோகன் மற்றும் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோரின் மேற்பா ர்வையில் தனிப்படை சப்இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன், ராஜா,செல்வகுமார், பாலசுப்பி ரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன்.

    மேற்கு காவல் நிலைய போலீசார் ஆகியோர்துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான, கும்பகோணம்பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், கார்த்தி, ஆல்பாகுமார் ஆகியோரை பிடித்து விசாரித்து அவர்களி டமிருந்து 2 அரிவாள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர்நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 நபர்களை தேடி வருகி ன்றனர்.

    • பஸ் நிலைய பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • போலீசார் மனோஜ் பிரபாகரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோவில் தெரு மாத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் மனோஜ் பிரபாகர் (23). இவர் வேளாங்கண்ணி பேருந்து நிலையப் பகுதிகளில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் மனோஜ் பிரபாகரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • 6 மாதத்துக்குள் கடனை திருப்பி செலுத்துமாறு அழகிரியிடம் போலீசார் எழுதி வாங்கினர்.
    • சிவஞானத்திடம் வாங்கிய ரூ.15 லட்சத்தை 2 மாதத்துக்குள் திருப்பி செலுத்த அழகிரிக்கு உத்தரட்டு, ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 50) விவசாயி. இவர் நாஞ்சிக்கோட்டை சாலை காத்ததூண் நகரை சேர்ந்த வியாபாரியான அழகிரி என்ற பரமானந்தழகன் (47) என்பவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் கொடுத்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. இது குறித்து சிவஞானம் பலமுறை அழகிரியிடம் கேட்டு பார்த்தும் பயன் இல்லை. இதனால் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சிவஞானம் புகார் செய்தார். அதன்பேரில் 6 மாதத்துக்குள் கடனை திருப்பி செலுத்துமாறு அழகிரியிடம் போலீசார் எழுதி வாங்கினர். அப்படியும் அவர் கடனை திருப்பி கொடுக்காததால் 2018-ம் ஆண்டு தஞ்சை விரைவு நீதிமன்றத்தில் சிவஞானம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவஞானத்திடம் வாங்கிய ரூ.15 லட்சத்தை 2 மாதத்துக்குள் திருப்பி செலுத்த அழகிரிக்கு உத்தரவிட்டது. மேலும் அழகிரிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    • பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரமத்தியை மையமாகக்கொண்டு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றனர்.
    • இந்நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பரமத்தி நகருக்குள் வருவதில்லை என நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய நகரங்களில் பரமத்தியும் ஒன்றாகும். பரமத்தியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், சார்நிலைக் கருவூலம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    மேலும் பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரமத்தியை மையமாகக்கொண்டு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பரமத்தி நகருக்குள் வருவதில்லை என நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் பயணிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என அனைவரையும் (பைபாஸ்) புறவழிச்சாலையில் இறக்கி செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் புறவழிச்சாலையில் இறக்கி விடப்படும் பயணிகள் அங்கிருந்து நகருக்குள் வர அச்சம் அடைகின்றனர்.

    பரமத்தி பகுதி மக்கள் இதுகுறித்து பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் உள்ளது.

    இந்நிலையில் பரமத்தி நகருக்குள் வராமல் சென்ற தனியார் பஸ்சை இப்பகுதி பொதுமக்கள், பேரூராட்சி தலைவர் மணி ,துணைத்தலைவர் ரமேஷ்பாபு மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அழைத்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் 1 மணி நேரத்திற்கு மேல் அந்த வழியாக வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    • தமிழக சிறைகளில் உள்ள முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
    • மாவட்ட பொருளாளர் முஹம்மது கான் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் உமர் பாரூக் தலைமையில் ராமநாதபுரம் தனியார் அரங்கில் மாவட்ட பொதுக்குழு நடந்தது. மாவட்ட பேச்சாளர் பரக்கத் அலி தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத்தலைவர் ஆல்பா நசீர், மாநிலச் செயலாளர் முஹம்மது பரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2023 ஜனவரி 8-ந்தேதி திருச்சியில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக நடைபெறவுள்ள மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற சிறப்பு மாநில மாநாட்டின் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலத் துணை தலைவர் ஆல்பா நசீர் நபிகளின் வரலாறு குறித்து தமிழக மக்களுக்கு விளக்குவது நமது கடமை என்று பேசினார்.

    தமிழக சிறைகளில் 20 வருடங்களுக்கு மேலாக வாடு ம் ஆயுள் சிறைவாசிகளை நல்லெண்ண அடி ப்படையில் விடுவிப்பதை போல, 20 வருடத்திற்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசி களையும் விடுவிக்க ஆவணம் செய்ய தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் முஹம்மது கான் நன்றி கூறினார்.

    ×