search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்தவரை சிறையில் அடைத்தனர்.
    • தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ரா (வயது 50).

    இவர் பெரம்பலூர் போலீஸ் நிலைத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் இந்திய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையத்தை சேர்ந்த பி.ஆர்.ஈஸ்வரன்(42) என்பவர் பணம் தேவை இருப்பதாககூறி கேட்டதால், நான் ரூ.8 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். மேலும் 8 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். மேலும் ஈஸ்வரனின் மகனிடம் ரூ.1 லட்சம் கொடுத்தேன். பணம் மற்றும் நகை கொடுத்து 3 ஆண்டுகள் ஆகியும் பலமுறை திருப்பி கேட்டு ஈஸ்வரன் தரவில்லை.

    இந்நிலையில் அண்மையில் பணத்தையும், நகையையும் திருப்பிதருமாறு கேட்டதற்கு என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அங்கம்மாள் காலனி அண்ணா நகர் பகுதியில் நெசவுத் தொழிலுக்கு உண்டான உதிரிபாகங்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
    • நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் அங்கம்மாள் காலனி அண்ணா நகர் பகுதியில் நெசவுத் தொழிலுக்கு உண்டான உதிரிபாகங்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூபாய் 80,000 ரொக்கப்பணம் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பிரபு உடனடியாக பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகி–றார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • சம்பவ த்தன்று இரவு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த பவானி ரோடு சோளிபாளையம் பகுதியை ேசர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மனைவி குஞ்சம்மாள். இவர் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    ராமசாமி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் விவசாய விளைபொருள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனி தனி யாக வசித்து வருகிறார்கள்.

    இதனால் ராமசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    அவர் ேவலை முடிந்து காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் காம்பவுண்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம், டி.வி., கியாஸ் சிலிண்டர் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். 

    • ஆட்டோவில் பெண் தவறவிட்ட பணத்தை டிரைவர் ஒப்படைத்தார்.
    • அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது.

    மதுரை

    மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி. இவர் குடும்பத்தினருடன் மதுரை வந்தார். அவர்கள் நேற்று இரவு ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்ேபாது சோனாலி நகை மற்றும் பணப்பையை ஞாபக மறதியாக ஆட்டோவில் வைத்து விட்டு இறங்கி விட்டார். அதன் பிறகு தான் இவருக்கு பணப்பை தொலைந்து போனது நினைவுக்கு வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சோனாலி, இதுகுறித்து போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த வழியாக வந்த மத்திய போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் சோனாலி நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோ குறித்து கண்காணிப்பு காமிரா உதவியுடன் தேடினர். இதற்கிடையே அந்த ஆட்டோ டிரைவர் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்து சோனாலியிடம் பணப்பையை திரும்ப ஒப்படைத்தார். அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது. வடக்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேசை போக்குவரத்து போலீசார் பணமுடிப்பு வழங்கி பாராட்டினர்.

    • நீட் தேர்வில் சிறப்பு பெற்ற மாணவருக்கு பாராட்டு.
    • ரெயில் நிலையத்தில் தவறவிட்ட பணத்தை அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை பாராட்டி பரிசளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    மாநில துணை தலைவர் ராஜாராமன், மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர் (கடலூர்) சண்முகம், தேவார ஆசிரியர் ரத்தினசபாபதி ஓதுவார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சீர்காழி கிளை தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார்.

    இதில் மாநில தலைவர் பண்ணை. சொக்கலிங்கம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி, 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் நீட் தேர்வில் சிறப்பு பெற்ற மாணவருக்கு பாராட்டு மற்றும் புகைவண்டி நிலையத்தில் தவறவிட்ட ரூ.62 ஆயிரத்து 500 பணத்தை நிலைய அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து 80 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு கவுரவிப்பு நிகழ்வு நடந்தது.

    இதில் சங்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், கார்த்தி, இளங்கோவன், சவுந்தரபாண்டியன் மற்றும் சீர்காழி, ஆச்சாள்புரம், குளத்தின்ங்கநல்லூர், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு கிளை சங்க நிர்வாகிகள், பொறு ப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    • ஓரின சேர்க்கையாளர்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் ‘மொபைல் செயலி’
    • வங்கி கணக்கிற்கு ரூ. 36,400 பணத்தை மிரட்டி அனுப்ப வைத்தனர்.

    கோவை

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 22 வயது வாலிபர்.

    இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓரின சேர்க்கையாளர்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் 'மொபைல் செயலி' மூலம் வாலிபர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், அந்த வாலிபர் கல்லூரி மாணவரிடம், நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம், ஜாலியாக இருக்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து சம்பவத்தன்று இரவு அந்த நபர் சொன்ன இடமான சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் உள்ள காலி மைதானத்திற்கு கல்லூரி மாணவர் சென்றார்.

    அப்போது அங்கு 5 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென கல்லூரி மாணவரை மிரட்டி செல்போனை பறித்தனர். தொடர்ந்து 'கூகுள் பே' மூலம் அவர்களது வங்கி கணக்கிற்கு ரூ. 36,400 பணத்தை மிரட்டி அனுப்ப வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்த 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர். மேலும் அந்த கும்பல் இதேபோல் வேறு யாரிடமாவது பணம் பறித்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.
    • மகன் ஹர்சனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை புதுநகரை சேர்ந்தவர் ஜான்ராஜ். கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மாலதி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஹர்சன் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் பல்வேறு சுயஉதவி குழுவிற்கு மாலதி பணம் செலுத்த வேண்டிய நிலையில் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் பலரிடமும் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

    கேட்ட பணம் கிடைக்காத காரணத்தினால் மனமுடைந்த மாலதி மகன் ஹர்சனுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்தவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதி

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணத்தை அடுத்த பனங்காலமுக்கு பகுதியை சேர்ந்த அல்போ ன்ஸ் மகன் பிரபு (வயது 36). கடல் தொழில் செய்து வரு கிறார்.

    இவரது மனைவி சுபலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களாக கருத்து வேறுபாடு காரண மாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அடிக்கடி சண்டைகள் நடப்பது உண்டு.

    சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்ப்பட்டது. பிரபு குறைவாக பணம் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபலதா வெட்டுக்கதியால் வெட்டியுள்ளார்.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி பெற்று, ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குடிக்க பணம்தர மறுத்த தந்தைக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.
    • மகன் கைது செய்யபட்டார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதன குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 60). இவர் பருத்தி விற்ற பணத்தை முதல் மனைவியின் மகன் பழனிசாமி (28) குடிப்பதற்காக கேட்டார். ராமர் கொடுக்க மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, பெற்ற தந்தை என்றும் பாராமல் ராமரை அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மனைவி வள்ளி (45) கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.
    • பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சுப்பிரமணி (58) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து வைத்திருந்த 14பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விவசாயி சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு தகவல்.
    • போலீஸார் சூதாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூர் பொதுக் கழிப்பிடம் அருகே நேற்று காலை காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    அப்போது காசு வைத்து சூதாடி கொண்டிருந்த முத்தூர் அருகே உள்ள மோளக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன்(வயது 65). சண்முகம்(50), சந்திரன் (46), ராஜேஷ் (42), ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×