search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூடுபனி"

    அரியானாவில் கடுமையான மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற சுமார் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். #DenseFog #HaryanaAccident
    புதுடெல்லி:

    டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர் சீசனில் இந்த காலக்கட்டத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, மிகவும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக காலை வேளையில் அருகில் இருப்பவர்கள்கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் மீறி சில இடங்களில் விபத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தில் ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் சென்றபோது மூடுபனி காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. சுமார் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



    இந்த விபத்து காரணமாக அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  இதற்காக ஏராளமான ஜேசிபி வாகனங்கள்  வரவழைக்கப்பட்டன. #DenseFog #HaryanaAccident
    டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். #DeltaDistricts #Fog
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால் சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலமான தற்போது மழை பொழியாததால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

    கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் இந்த பனிப்பொழிவு ஏற்படும். அதிலும் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு, மூடுபனி காணப்படும். நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவுகள் ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காட்சியளித்தது.

    இதற்கிடையே மாலை நேரம் ஆக ஆக பனிப்பொழிவு அதிகமானது. நள்ளிரவில் கடுமையாக பனி தாக்கியது. மேலும் இன்று அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பெருமாள் கோவில்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல முடிந்தது. குறிப்பாக 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தது. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

    பெரும்பாலான விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவு குளிர் அதிகமாக இருந்தது. அதிகாலையிலே வயலுக்கு சென்று தங்களது அன்றாட பணிகளை செய்யும் விவசாயிகள் முடங்கினர். பின்னர் சூரிய உதயம் தொடங்கிய பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர்.

    மேலும் அதிகாலையில் காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைகளுக்கு அனுப்பி வரும் விவசாயிகள் பயிர்களை பறிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். அதனையும் மீறி உரிய நேரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்த விவசாயிகள் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் செல்வதில் கடும் பிரச்சினைகளை சந்தித்தனர்.

    இந்த மூடு பனி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் அதிகம் காணப்பட்டது.  #DeltaDistricts #Fog

    உத்தர பிரதேசத்தில் சாலையில் மூடுபனி கண்ணை மறைக்கும் அளவுக்கு படர்ந்திருந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #UPAccident #DenseFog
    சம்பால்:

    வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.



    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் மூடுபனி படர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குன்னார் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். #UPAccident #DenseFog
    ×