search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
    • மாணவர்கள் அனைவரும் தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் பயணித்து வருகிறார்கள்.

    நீலாம்பூர்,

    கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் எண்ணற்ற தனியார் கல்லுரிகள் உண்ணன.

    இங்கு திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். இதுதவிர தனியார் ஊழியர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் காலை நேரத்தில் பஸ்கள் மூலம் வேலைக்கு சென்று, மாலை நேரத்தில் வீடு திரும்புகின்றனர்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் கோவை மாநகர பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதும். கூட்டம் எவ்வளவு தான் அதிகமாக காணப்பட்டாலும் அரசு பஸ்கள் மிகவும் குறைந்த அளவு இயக்கப்படுகிறது. இதனால் அனைத்து பஸ்களிலுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் பயணித்து வருகிறார்கள்.

    ஒருசில வழித்தடங்களில் தனியார் பஸ்களும் குறைந்த அளவே இயங்கி வருகிறது. எனவே பஸ்களில் கூட்டத்தை தவிர்க்க முடிவில்லை. இதனால் மாணவர்கள் வேறுவழியின்றி படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செல்ல வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு தனி யார் பஸ் சென்றது. அதில் கல்லூரி மாணவர்கள் கடைசி படிக்கட்டில் ஒற்றைக்காலை படியில் வைத்த படி பயணம் செய்தன.

    கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்பவே அவர்களின் பயணமானது இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    அரசு மற்றும் தனியார் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால், சாலையில் ெசல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஒரு அச்சத்துடனேயே செல்கின்றனர்.

    எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பள்ளி-கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பஸ் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இப்பள்ளி 10-ம், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பள்ளிக்கு எழுவன் கோட்டை, தெண்ணீர்வயல், உடப்பன்பட்டி, நாச்சியா புரம் கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பெரியகாரையில் இருந்து தேவகோட்டை நகர் பஸ் நிலையம் வரை பஸ் வழித்தடத்தில் செல்லும் நகர பஸ்சை முன்னாள் மாணவர் பூமிநாதன் முன்னிலையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடி யசைத்து தொடங்கி வைத்தார் மேலும் பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கவுரவித்து பள்ளி மாணவ- மாணவிகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் சிங்காரவேலன், டிவிஷனல் மேனேஜர் தங்கபாண்டியன், தேவகோட்டை கிளை மேலாளர் சொக்கலிங்கம், பச்சைமால், பொறியாளர் மோகன், பேருந்து நிலைய பொறுப்பாளர் சந்தியாகு, ஊராட்சி மன்ற தலைவர் திருமணவயல் ராமையா, கண்ணங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிலவிழிநாதன், அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், சாமிநாதன், இளங்குடி முத்துக்குமார் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முதடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் வனத்துறை அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் தலைமை தாங்கினார். உதவி வன அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து ஜூன் 1-ந்தேதி முதல் 4 வரை மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், கவிதை, வினாடி-வினா போட்டிகள் நடந்தது. இதில் மீனவ கிராமங்களை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    • ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
    • மாணவ-மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    2023-2024-ம் கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவம் மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10 சதவீதம்) பிற வகுப்பினர்கள் (5 சதவீதம்) என்ற விகிதத்தில் விடுதிகளில் சேர்ப்பதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். (மாணவிகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).

    பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இணை சீருடைகளும், 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் இலவசமாக வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை 2023-2024-ம் கல்வியாண்டு முதல் விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகள் http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • 5-8, 9-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும்.
    • குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமிய நடனப்போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டக்கலைப்போட்டிகள் திருப்பூர் மாவட்டம் மண்ணரை கிராமம் சத்யா காலனி (கிழக்கு) ல்உள்ள நைருதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில்வருகிற 17 -ந்ேததி( சனிக்கிழமை) அன்றுநடைபெற உள்ளது.இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம்மற்றும்ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12, 13-16 என்ற வயதுவரம்பில்போட்டிகள் நடைபெறும்.ஜுன் 17-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமியநடனப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்குபெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள்பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப்போட்டியில் அதிகபட்சம் 3நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமாபாடல்களுக்கான நடனம்மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப்போட்டியில் நமதுபாரம்பரிய கரகம், காவடி , பொய்க்கால்குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப்பெறவேண்டும்.

    மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள்தூரிகைகள்உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும்.தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

    பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புசான்றிதழ் வழங்கப்படும். 9-12, 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின்செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர்கோயம்புத்தூர் மண்டலக் கலைபண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290, 94422 13864 ஆகியஎண்களில்தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
    • தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.

    ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

    முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
    • மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.

    திருவாரூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு குளிக்கரை ஊராட்சித் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியை அட்சரசுந்தரி வரவேற்றுப் பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, பூமியை வருங்கால சந்த்தியினர் ஆரோக்கியமாக உயிர்வாழ வழிவகை செய்யும் கடமை நம் ஒவ்வொருக்கும் உள்ளது.

    மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.

    மரங்களின் ஆக்சிஜனை நாம் சுவாசிக்கிறோம்.

    நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் சுவாசிக்கின்றன.

    மாணவர்களிடம் நீங்கள் நடுவது மரம் மட்டுமல்ல.

    ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலையும் கூட என சொல்லி, மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.

    இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும்.
    • மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர்.

    மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும். அதை நிரூபிப்பது போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர்.

    அதனை ஒருவர் ஸ்கிரிஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அதில், இது நல்ல பகுதி நேர சிறைச்சாலை. இதில் இருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்சினை இருக்கிறது. ஆனால் இங்கு நல்ல சமையல் அறை, உணவருந்தும் அறை உட்பட தனியாக கூடைப்பந்து அரங்கும் இருக்கிறது. இங்கு உங்களின் சொந்தக்காரர்களான எலிகள், பூச்சிகள் உங்களை அலறவைக்கும் என கூறியுள்ளனர்.

    மேலும் இதன் விலை 42,069 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயலை பார்த்து இணைய தள வாசிகள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந் தேதி முதல் துவங்குகிறது.
    • வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    உடுமலை :

    புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந்தேதி முதல் துவங்குகிறது. மாணவர்களை வரவேற்க வழக்கமாக முதல் சில நாட்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு மாற்றாக விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதும், கதைகள் கூறுவதுமாக துவக்கப்பள்ளிகளில் செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:- கல்வியாண்டு துவங்கியதும் முதல் 2 வாரங்கள் வரையிலும் அவர்களின் முந்தைய வகுப்பு பாடங்களை நினைவு கூர்ந்து அதற்கான செயல்முறைகளை எளிமையாக நடத்துவதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிய பாடங்களை திடீரென நடத்தினால் மாணவர்களுக்கு கடினமாக இருப்பதால் இவ்வாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது என்றனர். 

    • தேர்வு செய்ய உருவாக்க விடுதி மேலாண்மை அமைப்பு என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக் குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்படும்.

    திருப்பூர் :

    2023 -– 2024ம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய உருவாக்க விடுதிமேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள்,வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மாணவர் சேர்க்கைவிதிமுறைகளை பின்பற்றி புதிய மாணவர் சேர்க்கை நடத்திட ஏதுவாக திருப்பூர்மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி-கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும்மாணவ- மாணவிகள் 30.6.2023 வரையிலும் https://tnadw.hms.in என்கிறஇணையதளத்தில் நேரடியாகவோ சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இணைய வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மாவட்டஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

    ஊட்டி,

    ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை கமாண்டா் பிரிகேடியா் எஸ்.கே.யாதவ் தொடங்கி வைத்தாா்.இதில் ராணுவ வீரா்கள், பள்ளி மாணவ-மாணவிகள், தேசிய மாணவா் படை உள்பட பலர் கலந்து கொண்டனா். இதைத் தொடர்ந்து ராணுவ மையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள போக்குவரத்து சாலைகள் மற்றும் ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இங்கு ஒருவார காலத்துக்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும், அதன்பிறகு இந்த பகுதியில் சுமாா் 700 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்தனர்.

    விழுப்புரம்:

    தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று நினைவிடங் களை ஆய்வு மேற்கொண்டனர்.

    செஞ்சி அருகே உள்ள ஜெயினர்களின் நிறை விடமான திருநாதங்குன்று, நெகனூர், பட்டி, ஆகிய இடங்களில் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் செஞ்சிக்கோட்டை செஞ்சி அருகே உள்ள வெடால், தொண்டூர், சீயமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்த னர். இடங்களை பேரா சிரியர்கள் வசந்தி, ஜீவா, தமிழரசு ஆகியோர் மாண வர்களுக்கு விளக்கி கூறி னார்கள். அப்போது அகிம்சை நடை ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதரன், சேட்டு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×