search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • சொந்த பணத்தை செலவு செய்து தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள்.
    • காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம்.

    பெரம்பூர்:

    சென்னை அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கற்பித்தல், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனிக்கவனத்துடன் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு மற்றும் மாலையில் டிபனுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவது அனைவரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

    கொடுங்கையூர், காமராஜர் சாலையில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 54 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

    இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தங்களது பள்ளி சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்குடன் பள்ளி ஆசியர்-ஆசிரியைகள் மாணவ-மாணவிகளுக்கு கற்பித்து வருகிறார்கள்.

    மேலும் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தினந்தோறும் மாணவ-மாணவிகளுக்கு காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களின் காலை உணவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்-ஆசிரியைகளே தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு வாங்கி கொடுத்து வருகிறார்கள்.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு காபி, டீ, மற்றும் ஒவ்வொரு நாளும் இட்லி, வடை, தோசை, சப்பாத்தி வழங்கப்படுகிறது. இதேபோல் மாலையில் டீ, பிஸ்கட், வாழைப்பழம், சுண்டல் வழங்கப்படுகிறது. இதற்கான செலவை பள்ளி ஆசிரியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சமாளித்து வருகிறார்கள்.

    இவ்வளவு செய்யும் ஆசிரியர்களின் கனவை நினைவாக்க மாணவ-மாணவிகளும் போட்டி,போட்டு படித்து வருகின்றனர். வருகிற பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி சாதனை படைப்போம் என்று பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முனிராமையா கூறியதாவது:-

    இந்த பள்ளியில் சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்து வருகிறோம். காலை 7.30 மணி முதல்9 மணிவரையும், மாலை 3.30 மணிமுதல் 7.30 மணி வரையும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்பிப்பதால் எந்த மாணவ-மாணவிகளும் சிறப்பு வகுப்பை தவற விடுவதில்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து வருகிறோம்.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம். மாலையிலும் டீ கொடுப்போம். இதற்கான செலவை ஆசிரியர், ஆசிரியைகள் அனைவரும் பகிர்ந்து அளித்து வருகிறோம். நண்பர்கள், சமூக ஆர்வலர்களும் உதவி வருகின்றனர்.

    இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் நிச்சயம் சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறோம். இதற்கு வகுப்பு ஆசிரியர் சுபாஷ் சந்திரன், கணித ஆசிரியர் தேவிகா ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெல்வது மற்றும் தோல்வி அடைவது எப்படி என்று குறித்து கற்றுக்கொள்வது.
    • மாணவ-மாணவிகள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ் வழங்கல்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சதுரங்கம் விளையாடும் போட்டியானது பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவி்களை ஒன்றிணைப்பதுடன் வெல்வது மற்றும் தோல்வி அடைவது எப்படி என்று கற்றுக் கொள்வது கற்றுக் கொடுக்கிறது குழந்தைகள் தங்கள் செயல்களின் விளைவுகளை உணர உதவுகிறது.

    கவனத் திறமையை அதிகரிக்க உதவுகிறது. இவ்வாறான போட்டியை ஏற்பாடு செய்திருந்த பள்ளி தாளாளர் கார்த்திகேயனுக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ்கள் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவி்களுக்கு பதக்கங்களை வழங்கி கலந்து கொண்டு அனைத்து குழந்தைகளும் வெற்றியாளர்களே என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.
    • விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    விழாவிற்கு சீர்காழி வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர் சங்க செயலாளர் எஸ்.பி.நெடுஞ்செழியன், மூத்த வக்கீல்கள் செல்வராஜ், சந்திரமோகன், பாலாஜி, சிங்காரவேலன், ராம்குமார், பாலசுப்பிரமணியன், கார்த்திக் ராஜன், கார்த்தி ராதிகா, சுதா, தியாகராஜன் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் எல்.எம்.சி பள்ளி மற்றும் பெஸ்ட் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி ஆகியோர் வழங்கினார்.

    விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்மு டிவில் வக்கீல்கள் சங்கத்தின் பொருளாளர் வக்கீல் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

    • பள்ளியில் தலைமை ஆசிரியை தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    சீர்காழி:

    74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிலையில் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகளை வழங்கினார்.

    அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.

    ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவு வரை தேசியக்கொடி பறந்தவாறு இருந்தது.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இடையே தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது குறித்து மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

    இரவு வரை தேசியக்கொடி இறக்கப்படாமல் பறந்த வாறு இருப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
    • விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா மற்றும் சாரணர் இயக்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு தாமரை குழுமத்தின் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினராக கும்பகோணம் கல்வி மாவட்ட சாரண இயக்க செயலாளர் சுவாமிநாதன் தமிழ் ஆசிரியர் நகர மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளி முதல்வர் விஜயா ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி மாணவிகள் அணியின் சுற்றுச்சூழல் துணை செயலாளர் மோகனப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் பள்ளி முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    சிறப்பு விருந்தினர் சாரணர் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்தனர்.

    விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி மாணவர்கள் அணியின் சுற்றுச்சூழல் செயலாளர் செல்வன் லோகித் நன்றி கூறினார்.

    • மாணவர்கள் சிலர் கோ-கோ விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மாணவி ஒருவருடன் சேர்ந்து சென்று கொண்டிருந்தார்.
    • இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 (11) ஐபிசி ஆகிய 3 பிரிவு களில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், ஜன.26-

    நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் அகில் (வயது 44). இவர், நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் உடற்கல்வி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அகில் கல்லூரியில் உள்ள மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் சிலர் கோ-கோ விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மாணவி ஒருவருடன் சேர்ந்து சென்று கொண்டிருந்தார்.

    இதை பார்த்து கோ-கோ விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் கேலி கிண்டல் செய்தனர். இதனால் கோபமடைந்த மாணவன் அபினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோ-கோ விளையாடிக் கொண்டிருந்த மாண வர்களை தாக்கியதாக தெரிகிறது. இரு தரப்பு மாணவர்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    அப்போது அங்கு நின்ற உடற்கல்வி பேராசிரியர் அகில் அதை தடுத்தார். அப்போது அவரையும் தாக்கினார்கள்.இதில் அகில் படுகாயம் அடைந்தார்.மேலும் மாணவன் ஜான் கிறிஸ்டோபருக்கும் காயம் ஏற்பட்டது. இதை யடுத்து பேராசிரியர் அகில், மா ணவன் ஜான் கிறிஸ்டோபர் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேசமணி நகர் போலீசில் அகில் புகார் செய்தார். புகாரின் பேரில் அபி னேஷ், ஆன்றனி செல்வின், கிறிஸ்டின் ஆபிஸ், ஜான் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 (11) ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • போதை பொருளால் ஏற்படும் உடல்நலம், மனநலம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை அரசு பல் தொழில் நுட்ப கல்லூரியில் நேற்று போதை பொருளுக்கு எதிரான இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடங்ப்பட்டு மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விழாவில் கல்லூரி எந்திரவியல் துறை தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    கல்லூரி முதல்வர் காசி தலைமை தாங்கினார்.

    போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தொடங்கி வைத்து, போதை பொருளால் ஏற்படும் உடல்நலம், மனநலம், சமூக, பொருளாதார இழப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை இல்லம் தேடி கல்வி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.

    விழாவில் முதலாம் ஆண்டு விரிவுரையா ளர்களும், கட்டிட பொறியியல் துறை விரிவுரையாளர்களும், 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்களுக்கான தகுதி பட்டைய தேர்வு, திறனாய்வு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகில இந்திய தலைமை பயிற்சியாளர் குப்பன் தலைமை தாங்கினார்.

    கராத்தே பள்ளியின் பெற்றோர்கள் சங்க தலைவர் முருகையன், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜசேகரன், ரென்சி எம். சிவசாமி, சிகான் பி.மணிசங்கர், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ரென்சி கே.பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கராத்தே மற்றும் சிலம்ப மாணவர்களை உருவாக்கி சேவைகளை செய்துவரும் ரென்சி கே.பாண்டியனை, முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். முடிவில் சென்சாய்

    ஆர்.அரவிந்த் நன்றி கூறினார்.

    • கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.
    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    நாகப்பட்டினம்:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் சார்பாக தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், கண் தானம் செய்ய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தொடக்கி வைத்தார். பேரணி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றது.

    இறுதியில் பேரணியை திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முடித்து வைத்தார்.

    பேரணியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மாகாந்தி, பண்டிதர் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தேச தலைவர்கள் வேடமிட்டு சென்றனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.

    முன்னதாக தேசிய கொடி ஏற்றியும், தேசபக்தி பாடல்கள் பாடியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கல்வி குழுமத்தின் இயக்குநர் விஜயசுந்தாரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்தரா மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஆண்களுக்கு 7 கி.மீ. தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ழ பவுண்டேஷன் சார்பில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டி தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் இருந்து தொடங்கி கொன்றைக்காடு ரெயில்வே கேட் வரை 7 கி.மீ. தூரம் நடைபெற்றது. போட்டியானது ஆண்கள், பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது.

    சிறுவர்களுக்கு 3 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் மற்றும் ஆண்களுக்கு 7 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பட்டுக்கோட்டை அண்ணாதுரை எம்.எல்.ஏ. மற்றும் பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ., கல்வியாளர் ஜீவகன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் காதல் கோட்டை அகத்தியன் உள்பட 11 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ழ பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ழ பவுண்டேஷன் நிறுவனர் கார்க்கி அசோக்குமார் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.

    இதில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம், மணமேல்குடி ஒன்றிய தலைவர் பரணி கார்த்திகேயன், மருத்துவர்கள் நீலகண்டன், சந்திரசேகரன், சவுந்தரராஜன், ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மணி நேரம் யோகா செய்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நாடார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயம் மற்றும் புதிய சோழன் அமைப்பு சார்பில் உடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் யோகா பயிலும் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் ஆனந்த பத்மாசனம் யோகா செய்து சாதனை படைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் தலைவர் ராஜா மகேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவயோகி சிவசண்முகம் குருஜி மற்றும் மேலூர் டாக்டர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், பொதுச்செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டல தலைவர் சுந்தர், மண்டல தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவண பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
    • 24 வது பட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.

    உடுமலை :

    உடுமலை தளி ரோடு பள்ளபாளையம் அருகே செங்குளம் கரையில் உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த பூஜையில் 24 வது பட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள்கலந்துகொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார். இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை உடுமலை பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×