search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டன.
    • உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை தாலுகா, ஜாம்புவானோடை வடகாடு தொடக்கப்பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணன், உதவி ஆசிரியர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    தலைமையாசிரியர் மகாலட்சுமி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பயிற்சியில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள், காகித மடிப்புகலை, பாடல்கள், நடனம், மேஜிக், கைரேகை, ஓவியங்கள், உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல் போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.

    பயிற்சியின் முதன்மை கருத்தாளர்களாக வானவில் மன்ற லாவண்யா மற்றும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் மங்கை, கல்பனா ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.

    ஈரோடு, 

    பெருந்துறை அரசு தொழிற் நுட்பக் கல்லூரியில், 2023- 2024 -ம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இக்கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய 5 முழுநேரப் பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடி-பட்டியல்(எஸ்.சி.-எஸ்.டி) பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் இல்லை.

    முதலாமாண்டு டிப்ளமோ சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

    உடுமலை :

    உடுமலைஅடுத்த பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன வாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் அம்மாபட்டி, வடபூதிநத்தம் ,மொடக்குப்பட்டி, தீபாலபட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாண வர்கள் படித்து வருகிறார்கள்.

    நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. ஆனால் விளையாட்டில் பின்தங்கி உள்ளது. மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ளது இதற்கு காரணமாகும். இது குறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில்:- இந்தப் பள்ளி மைதானம் உடுமலை அளவில் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கோடை காலத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும். ஆனால் சமீப காலமாக பள்ளி மைதானத்தை பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மைதானத்தைச் சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இதனால் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாத சூழல் உள்ளது. செல்போன் விளையாட்டில் குழந்தைகள் மூழ்கி வரும் சூழலில் தரமான மைதானம் இருந்தும் அதை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள்ஓடியாடி வியர்க்கவிறுவிறுக்க விளையாட முடியாத சூழல் உள்ளது. மைதானம் சிறப்பாக இருந்து முறையான பயிற்சி கிடைத்தால் கிராமத்து மாணவர்கள் விளையா ட்டில் மாவட்ட மாநில அளவில் சாதிக்கலாம்.

    ஆனால்மைதானத்தை சீரமைக்கநிர்வாகம் அக்கறைகாட்டாதது வேதனை அளிக்கிறது. எனவே நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை சீரமை ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் படிப்பில்சாதித்த மாநிலமாணவர்கள் விளையாட்டிலும் சாதிக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பெரியேரிபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சஞ்சய் (வயது 17), அவரது தம்பி ஜெயகாந்தன் (13) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரிடம் மாணவர்கள் கூறுகையில், எனது தந்தை கோபால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக எனது தாயும் அங்கு இருந்து வருகிறார்.

    இந்த நிலையில், எங்கள் வீட்டுக்கு செல்லும் வழித்தடத்தை அருகில் வசிக்கும் முருகன், கோவிந்தன் ஆகியோர் அடைத்து முட்களை போட்டுள்ளனர். இதனால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.

    பால் விற்பனை செய்து தற்போது சாப்பிட்டு வருகிறோம். வீட்டுக்கு செல்ல முற்படும்போது அருகில் உள்ளவர்கள் எங்களை வரக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுகின்றனர்.

    வழித்தட பிரச்சனைக்காக 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு தாய் தந்தை ஆகியோர் வந்து மனு அளித்துள்ளனர். போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே வீட்டின் முன்பு முட்களை போட்டு வழித்தடத்தை மறைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது வீட்டுக்கு செல்ல முடியாமல் இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு தந்து காப்பகத்தில் இருக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 10, 11-ம் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தது
    • 400-க்கு மேல் 126 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

    பெரம்பலூர்,

    10 மற்றும் 11ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அதிக மார்க் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது. 2023 ஏப்ரல் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் விக்னேஸ்வரன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் அஜய் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவர் சைலாஸ் 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும் அறிவியலில் 9 பேரும், கணிதத்தில் 7 பேரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 480-க்கு மேல் 11 மாணவர்களும், 450-க்கு மேல் 57 மாணவர்களும், 400-க்கு மேல் 126 மாணவர்களும் பெற்றுள்ளனர்.இதே போல் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவி காமலி 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி சுவேதா 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி ஹர்சினி 579 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

    இயற்பியலில் 3 பேரும், உயிரியியல் மற்றும் கணக்குபதிவியில் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 570 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 550 மார்க்கு மேல் 63 பேரும், 500க்கு மேல் 222 பேரும் பெற்றுள்ளனர்.அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளையும், உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன குழும தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • பயிற்சி முடிந்து டாக்டர்களாக பணியாற்றும் போது நோயாளியுடன் கனிவாக பழகி வேண்டும்.
    • அவர்களின் நோய்களை தீர்ப்பதில் துணை நிற்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

    முகாமிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் (பொறுப்பு) அஸ்வினி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜீவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் பேசுகையில், 'பயிற்சி முடிந்து டாக்டர்களாக பணியாற்றும் போது நோயாளியுடன் கனிவாக பழகி அவர்களின் நோய்களை தீர்ப்பதில் துணை நிற்க வேண்டும். மேலும் அர்ப்பணிப்பு எண்ணத்துடன் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்' என்றார்.

    முகாமில் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நடராஜ் முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் அப்துல் ஹமீது அன்சாரி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை வல்லத்தில் நடைபெற உள்ளது.
    • மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகஅரசு வனத்துறை சார்பில் உலகில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், தமிழகத்தில் தஞ்சை கடற்பகுதியில் இவ்வுயிரினம் கண்டறியப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும், உலக கடற்பசு தினத்தை வருகிற 28-ந் தேதி கொண்டாடும் வகையிலும் மாவட்ட அளவி லான ஓவியப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கான போட்டியானது நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் பயிலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் முதல் பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 2-ம் பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 3-ம் பிரிவாகவும் வகைப்படுத்தப்ப ட்டுள்ளனர்.

    ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 3 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 3 பிரிவிற்கும் சேர்த்து மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    போட்டியில் பங்குபெறும் மாணவர்க ளுக்கு ஓவியம் வரைவதற்குரிய அட்டைகள் துறை மூலம் வழங்கப்படும்.

    இதர வரைவு உபகரணங்கள் பென்சில், வண்ணக்க லவைகள் போன்றவற்றை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு விழா, இடம் முதலிய விவரங்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

    தனித்திறமைகள் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மேற்கொண்டு வருகிறார்.

    அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு தொடர்பான ஓவியங்களை தீட்டி பரிசுகளை வெல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்து கொண்டு ஒளிர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகளை கற்றுக்கொடுத்தனர்.
    • மூளைக்கு வேலை, மந்திரமா?தந்திரமா? போன்றவற்றை குறித்தும் கற்றுக்கொடுத்தனர்.

    சீர்காழி:

    எடமணலில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா அரசினர் உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர் கார்த்திக் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக ப.தமிழ்ச்செல்வன், பஞ்சாயத்தார் க.அறிவழகன் மற்றும் வார்டு உறுப்பினர் லெட்சுமி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ப.பவஸ்ரீ,ர.ரஞ்சிதா,வி.ரேகா,மு.அலமேலு, கு.கலைவாணி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வானவில் மன்ற கருத்தாளர் மீனாட்சி குழந்தைகளுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகள், மூளைக்கு வேலை, மந்திரமா? தந்திரமா? போன்றவற்றை மிகவும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்தார்கள்.

    முடிவில் தன்னார்வலர் பவஸ்ரீ நன்றி கூறினார்.

    • கல்லூரியில் நடப்பாண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்படுகிறது.
    • 6-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

    கோவை,

    தமிழகத் தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்ப டிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் கடந்த 8-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், இயற்பி யல், தாவரவியல், பிகாம் உள்ளிட்ட 23 படிப்பு கள் வழங்கப்படுகிறது. நடப்பா ண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்ப டுகிறது. இதற்கு www. tngasa.in என்ற இணை யதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்ட ணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

    இதனை தொடர்ந்து வருகிற 26-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. மேலும், தமிழக அளவில் சென்னை மாநில கல்லூரி மற்றும் கோவை அரசு கலைக்கலூரிக்கு அதிக ளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    சிறப்பு பாடமான பாதுகாப்பு துறை பாடத்திற்கும் நீலகிரி, கோவை அரசு கலைக்கல்லூரிக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பி த்துள்ளனர். தவிர, பிகாம், பிகாம் சிஏ. பிஎஸ்சி கணினி அறிவியல் பாடத்திற்கு மாணவர்கள் மத்தியில் அதிகளவில் ஆர்வம் உள்ளது.

    இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் விண்ணப்பிக்க ஊழியர்கள் உதவி களை செய்தனர்.

    • பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர்.
    • முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள மதுக்கூர் கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவி–க்கும் வகையில் பேச்சு மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

    போட்டிகான ஏற்பாடுகளை நூலகர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார், இதில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர்.

    இதில் வர்த்தக சங்க கவுரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.பி.பிரகாசம், சரவணன் வர்த்தக சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் மெட்ரோ.சேகர், வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் சமூக ஆர்வலர்கள் முஜிபுர் ரஹ்மான், நவமணி, சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி–களுக்கு பரிசளித்தனர்.

    இறுதியாக முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் மதுக்கூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் துணைத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் துரையரசன் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள்.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் புனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, ஆசிரியை பூங்கொடி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்றத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பள்ளி செயலரின் வகுப்புத் தோழர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவி லட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட, ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களும், இந்நாள் ஆசிரியர்களும் பங்கேற்று பேசினர்.

    முன்னாள் மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வருகை புரிந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணிப்பொறி வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் இளையபெருமாள் மற்றும் 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×