search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • கடந்த 1993-ம் ஆண்டு 46 மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்தனர்.
    • ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே ஆடுதுறை குமரகுருபரன் பள்ளியில் கடந்த 1993-ம் ஆண்டு 46 மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்தனர். தற்போது அவர்களில் 6 பேர் இறந்து விட்டனர்.

    இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே பள்ளியில் படித்தவர்கள் ஒன்று கூடினர்.

    அப்போது அவர்களுடன் படித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினர்.

    பின்பு, தாங்கள் படித்த போது இருந்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.

    மேலும், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

    அப்போது, தங்கள் பழைய நினைவுகளை கூறி அனைவரும் கலந்துரையாடியனர்.

    • போட்டியில் வெற்றி பெற்ற தொகையை மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வழங்கினர்.
    • மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    மையங்களுக்கு வரும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, பன்முகத் திறன் கொண்டவர்களாக திகழ வேண்டும் என்பதற்காக இந்த மையங்களில் பல்வேறு கற்றல் சார்ந்த செயல்பா டுகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 'குறும்படம் கொண்டாட்டம்' என்ற போட்டி இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் தாங்களே சிந்தித்து கதையை கூறி, அதனை மையத்தின் தன்னார்வலர் மற்றும் ஆர்வமுள்ள மாண வர்களின் துணையுடன் குறும்படமாக தயாரித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றி யத்தின் தன்னார்வலர்கள் மடவார்வளாகம் சிவகாமி, திருவண்ணாமலை முத்துச்செல்வி ஆகியோரது குறும்படங்கள் மாவட்ட அளவில் முறையே 2 மற்றும் 3-ம் இடம் பெற்று மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தற்காக தன்னார் வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி சார்பில் தலா ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி வழங்கினார்.

    தன்னார் வலர்கள் சிவகாமி, முத்துச் செல்வி ஆகியோர் தங்க ளுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மையத்திற்கு வரும் மாண வர்களுக்கு கற்றலுக்கு உதவியாக இருக்கும் வகையில் கற்றல் உப கரணங்களை வாங்கி கொடுத்தனர்.

    குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது.

    தன்னார்வலர் சூர்யா வர வேற்றார். தன்னார்வலர்கள் மகாலட்சுமி, கஸ்தூரி, சித்ரா, சிவரஞ்சினி, கவிதா ஆகியோர் பேசினர். கல்வியாண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட குறுவளமைய குழு தலைவர்களாக செயல்படும் 10 தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் சொந்த செலவில் ரொக்கப் பரிசு வழங்கினார்.

    மேலும் மாவட்ட அளவில் குறும்படம் தயாரிப்பில் வெற்றி பெற்று பரிசு பெற்ற தன்னார் வலர்களும் பாராட்டப் பட்டனர்.

    • நாலுகோட்டை அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது.
    • பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    மேற்பார்வையாளர் பிரபா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் மீனாட்சி, காளியம்மை, கனிமொழி, நேத்ரா, தமிழரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பெயர் ஒப்புதல் பெறப்பட்டது.

    இங்குள்ள அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது. வரவு-செலவு கணக்கு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    கழிவுநீர் செல்ல உறிஞ்சி குழி அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், மாசிலாமணி, பால்ரூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • பரிசு கிடைக்கவில்லை என்றாலும் மாணவர்கள் சோர்வடைய தேவையில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் புனித ஜோசப் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதனை கலெக்டர் வினீத் தலைமையில், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கான்ஸ்ட ன்டைன் ரவீந்திரன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-

    தலை நிமிரும் தமிழகம் என்றலட்சியத்தை தமிழகக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.பேச்சுப் போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தான். போட்டியில் கலந்து கொண்டு பரிசு கிடைக்கவில்லை என்றாலும்மாணவர்கள் சோர்வடைய தேவையி ல்லை. எனவே, அனைத்து மாணவர்களும்தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என்பது எனதுவேண்டுகோள். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்நிலையங்களுக்கு சென்றுஅறிவு சார்ந்த புத்தகங்களை படியுங்கள். நல்ல நூல்களை படிக்கும் போது தான்நமக்குரிய சிறந்த அனுபவங்கள் கிடைக்கும். பேரறிஞர் அண்ணா நல்லபுத்தகங்கள் தான் நல்ல நண்பன் என்பார்கள். அந்தளவிற்கு மாணவர்களாகிய நீங்கள்அ வசியம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

    புத்தகம் வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. மாணவ,மாணவிகள் எந்த தேர்வாக இருந்தாலும் சரி அல்லது இது போன்ற போட்டியாகஇருந்தாலும் சரி வாய்ப்பை இழக்கும் பொழுது சோர்வடைந்து விடாமல் எந்தசூழ்நிலைக்கும் ஆட்படாமல் இலட்சியத்தை அடையும் வரையிலும் முயற்சி செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சியுடன் நீங்கள் போட்டி தேர்வை எதிர் கொண்டுவாழ்வில் மேன்மையடைய வாழ்த்துகிறேன் என்றார். மாநில சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்ததாவது:-

    இந்திய மொழிகளில் 114நாடுகளில் தமிழ்மொழி பேச்சு மொழியாக இருக்கிறது. மாணவர்கள் ஆகிய உங்களுக்குகொடுக்கப்பட்ட தலைப்புகளில் மற்றவர்கள் சிந்தித்து பார்கின்ற அளவிற்குஉங்களுடைய பேச்சுக்கள் இருக்க வேண்டும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ் பற்றுடன் இருத்தல் வேண்டும். மாணவர்கள் பேச்சுப்போட்டிகளில் சிறந்து விளங்கவேண்டும் என்றால் அதிகளவில் நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை யெல்லாம்சேகரித்து படிக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், துணை மேயர் பாலசுப்பிரமணியன் , திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், 3-ம் மண்டலத்த லைவர்கோவி ந்தசாமி, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி செயலர் குழந்தைதெரஸ் ,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மற்றும்கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,
    • எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில் திருவாருர் மாவட்ட கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி ராபியம்மாள் அகமது மொய்தீன் கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ராபியம்மாள் கல்லூரி செயலாளர் பெரோஷா முன்னிலை வகித்தார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றும் போது:-

    அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மாணவர்கள் அதை பயன்படுத்தி மேல்படிப்புகள் படிக்க வேண்டும் என்றார்.

    தாட்கோ தலைவர் மதிவா ணன் வாழ்த்துரையாற்றும் போது:-

    பேச்சுதிறன் என்பது சிறுவயது முதலே தொடங்க வேண்டும், எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    பேச்சுப்போட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஹாஜாகனி போட்டியின் நோக்கம் குறித்து பேசினார்.

    ராபியம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், போட்டி நடுவர்களாக கோமல் தமிழமுதன், அறிவழகன், அமானுல்லா, அஸ்வின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.

    தமிழ் வழி பேச்சுப்போட்டியில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவியும், ஆங்கில வழி பேச்சு போட்டியில் ராபியம்மாள் கல்லூரி மாணவியும் முதல் இடத்தை பிடித்து ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகை வென்றனர் .

    முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.

    • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் பேரணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல், வேதார ண்யம் பஸ் நிலையம், ஆயக்காரன்புலம், குரவப்புலம் தாணிக்கோட்டகம், கோடியக்கரை, கோடிய க்காடு மூலக்கரை, கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    • ஊராட்சி செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
    • முடிவில் பள்ளி ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஹாஜா நிஜாமுதீன் தலைமை வகித்தார்.

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்தியபாமா,ஊராட்சி செயலர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் மாலா வரவேற்றார்.

    பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்
    • பஸ் வரவழைத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்துள்ள இடிகரை பேரூராட்சியில் இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.

    அதுவும் அத்திப்பா ளையம் தொடக்கப்பள்ளி, இடிகரை தொடக்கப்பள்ளி, இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் அவர்கள் படிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் இங்கிருந்து படிக்க வரும் மாணவ, மாணவிகள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை நடத்து வந்து அங்கு நிற்கும் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு வருகின்றனர்.

    மேலும் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர இயலவில்லை. இதனால் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நின்று விடுகிறார்கள்.

    மேலும் பள்ளி குழந்தைகள் நடந்து வரும் பகுதி காட்டு பகுதியாக உள்ளது.

    ஏற்கனவே இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இடிகரை பள்ளி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காலை நேரத்தில் அரசு பஸ் ஒன்று ரங்கநாதர் பாலிடெக்னிக் அருகே வந்து நின்று செல்கிறது. அதுவும் சுமார் 20 நிமிடம் நிற்பதால் அந்த பஸ் எம்.ஜி.ஆர் நகருக்கு வரவழைத்தால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன் அடைவார்கள். மேலும் இது மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்க உதவும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கலாம்.
    • ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல்ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • மாநில சிலம்ப போட்டியில் கமுதி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
    • மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் நடந்தது.

    பசும்பொன்

    மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தென்னாட்டு போர்க் கலைச் சிலம்பம் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள், பயிற்சியாளர் சரத்குமார் தலைமையில் பங்கேற்றனர். தனித்திறன் போட்டியில் 6 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும், 5 மாணவர்கள் 3-ம் இடமும் பெற்றனர். இரட்டைக் கம்பு பிரிவில் 2 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும் பெற்றனர்.

    • திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பிரச்சார வாகனத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைெபற்றது.
    • திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற பிரச்சார வாகனத்தை நாகையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் நேற்று முன்தினம் திட்டச்சேரி வந்தடைந்தது. திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பிரச்சார வாகனத்தை வரவேற்கும் நிகழ்ச்சிநடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர்கள் ரவி,ஜெயந்தி,வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு)சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திட்டச்சேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு வரவேற்றார். இதில் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள்,நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கி மாற்று ஊடக மைய யாழிசை கலைக்குழுவினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் நடராஜன், பிரபாகரன், பொற்கொடி, அகல்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.தொடர்ந்து வாகனத்தில் திருமருகல், திருச்செங்காட்டங்குடி,திருக்கண்ணபுரம், கோட்டூர்,வடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    • 291 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
    • தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11 ஆயிரத்து 451 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலை நிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்க ப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டு களில் படித்தவர்க ளுக்கு பட்டங்கள் தற்போது வழங்க ப்பட உள்ளது.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு கவர்னரும் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கு பட்ட ங்களை வழங்க உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கு பட்டங்கள் வழங்க ப்பட உள்ளது.

    இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லை க்கழக துணை வேந்தர் டாக்டர் சுதாசே ஷய்யன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகளை பல்க லைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ×