search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம்அமைக்கப்பட்டு வருகிறது.
    • ஸ்டெம் பூங்காவை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த நிலையில் இன்று இந்த ஸ்டெம் பூங்காவை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்குள்ள கோளரங்கம், ராக்கெட் தளம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி சார்பில் ஸ்டெம் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

    95 சதவீதம் பணிகள் முடிவடைந்து இதர பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணி அடுத்த மாதத்தில் முடிவடைந்து பொதுமக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

    இந்த ஸ்டெம் பூங்காவை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    சில மாணவ-மாணவிகள் இணையதள விளையாட்டில் மூழ்கி கவனத்தை சிதற விடுகின்றனர்.

    இதனால் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

    அந்த எண்ணத்தை ஸ்டெம் பூங்கா மாற்றும்.

    இந்த பூங்காவுக்கு மாணவர்கள் வருவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த அறிவு வளர்ச்சி மேலும் அவர்களுக்கு வளரும்.

    இங்குள்ள கோளரங்கம், ராக்கெட் தளம் உள்ளிட்ட பல வகைகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த பூங்காவால் அவர்கள் இணையதள விளையாட்டில் மூழ்க மாட்டார்கள்.

    அவர்களின் படிப்பிருக்கும் மிகவும் உறுதுணையாக இந்த பூங்கா அமையும்.

    எனவே திறப்பு விழா முடிந்த பிறகு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்டிப்பாக பூங்காவுக்கு அழைத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னனுத்துறை, மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை இணைந்து நடத்திய பொறியியல் கருத்தரங்கம் இ-வொர்டக்ஸ் 2023 நடைபெற்றது.

    இதில் பட்டுக்கோட்டை ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி டீன் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    ஏ.ஆர்.ஜெ கல்வி குழுமத் துணை தலைவர் மற்றும் தாளாளர் ஜீவகன் அய்யாநாதன் தலைமை தாங்கினார்.

    ஏ.ஆர்.ஜெ கல்விக்குழும தலைவர் ராஜகுமாரி அய்யாநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன் பாராட்டுரை வழங்கினார்.

    வாண்டையார் பொறியியல் கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி, ஏ.வி.சி பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் தனசேகர் நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றார்.

    முன்னதாக மின் மற்றும் மின்னனு துறை தலைவரும் உதவி பேராசிரியருமான பவித்ராதேவி வரவேற்புரை வழங்கினார்.

    உதவி பேராசிரியர் உமாசத்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்–படுத்தினார்.

    நிகழ்ச்சியின் நினைவாக கருத்தரங்கம் பற்றிய புத்தகம் ஒன்றினை மாணவர்களின் கலை ஆற்றல்களை நிறைத்து மின்னனு மற்றும் தகவல் தொடர்புதுறை உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் அகல்யா அனைத்து விருந்தினர்களுடன் இணைந்து வெளியிட்டனர்.

    இந்த கருத்தரங்கில் 12 கல்லூரிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.

    முடிவில் மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை உதவி பேராசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • 2022- 23ம் ஆண்டிற்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடை யேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
    • பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டர் வாயிலாக வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2022- 23ம் ஆண்டிற்கு மாவட்ட நிலை யில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடை யேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர்கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் திருப்பூர்மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் இளங்கோ வரவேற்புரையாற்றினார். முன்னதாக திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் எழிலி போட்டி களைத் துவக்கி வைத்து தொடக்கவுரை யாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கவிதை போட்டியில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி இளங்கலை கணினிஅறிவியல் இரண்டாமாண்டு மாணவி சத்தியபிரியா முதல் பரிசும், அவிநாசிஅரசுக் கலை மற்றும அறிவியல் கல்லூரி மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல்பயிலும் மாணவி அபாரணி இர ண்டாம் பரிசும், முத்தூர் கருப்பண்ணன் மாரிய ப்பன்கல்லூரி இளங்கலை கணிதம் இரண்டாமாண்டு பயிலும் மாணவி சிவாத்தாள் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

    கட்டுரைப் போட்டியில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரி இளங்கலை ஆங்கிலம் மூன்றாமாண்டு மாணவி ஈ. கீதாஸ்ரீ முதல் பரிசும்,திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்க லைமுதலாமாண்டு வணிகவியல் மாணவி முத்துலட்சுமி இரண்டாம் பரிசும்,திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதுகலை ஆங்கில இலக்கியம் முதலா மாண்டு மாணவி ஜெனிபர் ஜாஸ்மின் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

    பேச்சுப்போட்டியில் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை வரலாறு பயிலும் மாணவி விஷ்ணு ப்பிரியாமுதல் பரிசும், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கூட்டுறவு இரண்டாமா ண்டுபயிலும் மாணவி விஜி இரண்டாம் பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலை க்கல்லூரியில் மூன்றாமாண்டு இளம் அறிவியல் வேதியியல் பயிலும் மாணவி பிருந்தா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

    மாவட்ட நிலையில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும்பேச்சு ப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000ம், இரண்டாம் பரிசு ரூ.7000ம், மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச்சான்றித ழ்கள் மாவட்ட கலெக்டர் வாயி லாக வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியின் முடிவில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் நந்தினி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலு வலக ப்பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை 52 வாரங்களுக்கு வினியோகிக்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
    • பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை நியமித்து கொள்ள வேண்டும்.

    தாராபுரம் :

    பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் விதிகளில் சில மாற்றங்களை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கும் விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு வினியோகிக்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.

    வாரந்தோறும் வியாழக்கி ழமை ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 400 மி.கி., திறன் கொண்ட மாத்திரைகளும், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்க ளுக்கு 500 மி.கி., அளவி லான சத்து மாத்திரைகளும் வழங்க வேண்டும்.இப்பணி க்கென பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும்.அதை ஆசிரியர் முன்னிலை யில் மாணவர் உண்பதை உறுதி செய்ய வேண்டும்.மாத்திரை உட்கொள்ளும் முன் மாணவர் ஆரோக்கி யமான மதிய உணவு எடுத்துக் கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். காய்ச்சல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பாதிப்பு , ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் அம்மாணவருக்கு மாத்திரை வழங்கத் தேவையில்லை. மாத்திரை வழங்கும் நாளில் மாணவர் பள்ளிக்கு வர வில்லையெனில் அதற்கு அடுத்த நாள் சத்து மாத்திரை வழங்க வேண்டு ம். மாறாக அதற்கு அடுத்த வாரம் (வியாழன்) இரண்டு மாத்திரைகளை வழங்க கூடாது. சத்து மாத்திரை வழங்கிட விபரங்களை ஒவ்வொரு வாரமும் சேகரித்து பட்டியல் தயா ரித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது. இது குறித்து விரிவான வழிகாட்டுதல் மாவட்ட துணை இயக்குனர், மாநகராட்சி சுகாதாரப்பிரி வினருக்கு அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

    • 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
    • ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 106 தேர்வு மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 1,484 பேர் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.

    கடந்த 22ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான (அறிவியல்) செய்முறைத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.dge.tn.gov.in ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.
    • மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டு கடந்துள்ளன.

    இதை முன்னிட்டு நடை பெற்ற நூற்றாண்டு விழாவில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள கடமை, பிள்ளைகளின் கல்வியை மெருகேற்ற செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவது மிக, மிக முக்கியமானது, எனவே மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார்.

    பின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தனியார் பள்ளிக்கு நிகராக இந்த பள்ளியை தரம் உயர்த்த ஆசிரியர்கள் பாடுபடுகின்றனர்.
    • மாணவர்களின் சிறப்புரைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருமங்கலக்குடி ஊராட்சி தலைவர் பத்மினி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை நளினி ஆண்டறிக்கையை வாசித்தார். திருமங்கலக்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் பாத்திமா பேகம் ஆஷாத் அலி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலர் நிவேதா, எஸ். எஸ்.ஏ. மேற்பார்வையாளர் பாக்கியராஜ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பேசுகையில், இந்த குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய பள்ளி, மாணவர்களின் தனித்திறமையிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக இந்த பள்ளியை தரம் உயர்த்த அயராது பாடுபட்டு வருகின்றனர் என்றனர்.

    நிகழ்ச்சியில் மாணவர்களின் சிறப்புரை களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, 2-ம் நாளாக திருவிடைமருதூர் சண்முக. கண்ணன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் கண்ணதாசன், பிரபாகரன், சிந்து, ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தனர்.

    முடிவில் ஆசிரியை ராஜாத்தி நன்றி கூறினார்.

    • அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நீலா வடக்கு வீதியில் இயங்கி வரும் ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியில் கடந்த பிப்ரவரி 25 ம் தேதி அறிவியல் கண்காட்சி மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டிய மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்களையும், கேடயங்களையும், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஆர்த்தி சந்தோஷ், பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

    • பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
    • மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நிர்வா கம், பொது நூலகத்துறை, பபாசி ஆகியவை இணைந்து மாவட்டத்தில் முதல் புத்தக திருவிழா நடத்த உள்ளது.

    இதற்கான விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார இயக்கம் திருத்துறைப்பூண்டி பிர்லியண்ட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவில் திருத்து றைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் துரை ராயப்பன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, வாசகர் வட்ட துணை தலைவர் கமல், கல்லூரி நிர்வாக அலுவலர் முத்தலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-

    திருவாரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவில் கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் அனைத்து துறைகளிலும் தங்களது அறிவை விரிவுபடுத்தி கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

    மாற்றத்தை எதிர்கொ ண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் விமலா அனை வரையும் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் தவமலர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணலி நூலகர் செந்தில் நாதன் செய்திருந்தார்.

    • அரசு பள்ளி மாணவர்கள் கீழடிக்கு சுற்றுலா சென்றனர்.
    • முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் யூனியன் கவுன்சிலர் தென்பழஞ்சி சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் தென்பாண்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு மொழி தலைமையில் மாணவர்கள் 130 பேர், வேடர் புளியங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முத்துப்பிள்ளை, சத்தியபாமா ஆகியோர் தலைமையில் 230 மாணவர்கள் 4 பஸ்களில் கீழடிக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள தொல்லியல் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் திருப்பாலையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர். பகுதி அமைப்பாளர் சாரதி, ராஜா, நாகேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

    • மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு காளீஸ்வரி கல்லூரி சார்பில் ரூ. 69 ஆயிரம் மதிப்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
    • இளங்கலை வணிகவியல் துறை முன்னாள் மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப் பணி சார்பில் சாட்சியாபுரம் எல்வின் நிலைய மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் கூறினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக 130 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் மற்றும் இளங்கலை வணிகவியல் துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி கலையரங்கத்தில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. நடப்பாண்டு இளங்கலை வணிகவியல் துறை மற்றும் இளங்கலை வணிகவியல் துறை முன்னாள் மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் ரூ.69 ஆயிரத்து 500 மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள், அரிசி, கோதுமை, இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கினர்.

    ×