search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதியியல்"

    பிளஸ்-1 வேதியியல் வினாத்தாளை இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது.

    இந்த ஆண்டு பிளஸ்-1 புதிய பாடத்திட்டம் என்பதால் தமிழகத்தில் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பிளஸ்-2-க்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடைபெற்றது.

    இதில் சமீபத்தில் நடந்த உயிரியல் கேள்வித்தாள் இணைய தளத்தில் வெளியானது. இந்த வினாத்தாளும், தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளும் ஒரே மாதிரி இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



    இந்த நிலையில் பிளஸ்-1 வேதியியல் தேர்வு இன்று நடைபெறுகிறது. ஆனால் நேற்றே இந்த தேர்விற்கான கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியானது. இதை மாணவ-மாணவிகள் டவுன்லோடு செய்தனர்.

    அரசு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 இடங்களில் கேள்வித்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வந்து கேள்வித்தாளை பெற்று செல்வார்கள். ஆனால் அதையும் மீறி இன்று நடைபெறும் வேதியியல் கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியான சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிளஸ்-1 வேதியியல் கேள்வி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், வேதியியல் கேள்வித்தாளை இணைய தளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion

    ×