search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 142073"

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.



    மேலும், பழம்பெரும் அரசியல்வாதியான ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ராமசாமி படையாச்சி, தமிழகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TNAssembly
    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. #Congress #HappyBirthdayRahulGandhi
    காஞ்சீபுரம்:

    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு காஞ்சீபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீ பெரும்புதூர், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கட்சிக்கொடி ஏற்றியும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.

    மாவட்டத்தில் உள்ள சர்வ மதக் கோயில்களிலும் ராகுல் காந்தி நீடுழி வாழவும் அடுத்த பாரதப் பிரதமராகப் பதவி ஏற்க வேண்டியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் எம்பி விஸ்வநாதன் காஞ்சிபுரம் நகரமன்ற அலுவலகத்திற்கு எதிரே காங்கிரஸ் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து ராகுல் காந்தி நீடுழி வாழ வேண்டி பிரம்மாண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்களும் பெட் ஷீட்டுகளும் வழங்கப்பட்டது.

    திருக்கச்சி நம்பி தெருவில் அமைந்துள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதே போல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் பூஞ்சேரி கூட்டுச் சாலையிலும், மகாபலிபுரம் கூட்டுச்சாலை கானாத்தூரிலும், மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னாள் எம்பி பெ,விஸ்வநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், நிர்வாகிகள் எஸ்.எல்.என்.எஸ்.விஜயகுமார், சாலபோகம் அருண், கோபால், வழக்கறிஞர்கள் சத்தியநாராயணன், மணிகண்டன், கிளார்குமார், விசு, முத்தியால்பேட்டை ராஜசேகர், சாதிக்பாட்சா, செந்தில, இசிஆர். அச்சுகன், ஓஎம்ஆர். சின்னராசா, டிராவல்ஸ் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் காஞ்சி. ஜீவீ. மதியழகன் தலைமையில் மேற்கு மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றி பிரம்மாண்ட கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கினர்.

    இதில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் காஞ்சி ஜீவீ. மதியழகன், நிர்வாகிகள் சேரன், வீரபத்ரன், பச்சையப்பன், இராம.நீராளன், தென்னேரி சுகுமார், சம்பத், நாதன், சுகுமாரன், லோகநாதன், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Congress #HappyBirthdayRahulGandhi
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். #waqaryounis #Apologisetofans
    இஸ்லாமாபாத்:

    வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

    புனித ரமலான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.



    ‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். #waqaryounis #Apologisetofans
    95-வது பிறந்தநாள் கொண்டாடும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #HBDKalaignar95
    சென்னை:

    தமிழ் சினிமா உலகின் தன்னிகரற்ற எழுத்தாளரும், தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க தொண்டர்கள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இருக்கும் பகுதியில் தொண்டர்கள் காலையிலேயே ஒன்றுகூடி கேக் வெட்டி மகிழ்ந்தனர். இதையடுத்து செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    உடல்நலக்குறைவு காரணமாக இந்த வருட பிறந்தநாளை தொண்டர்களுடன் கொண்டாட மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கருணாநிதி தனது தொண்டர்களை சந்தித்தார்.

    கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாநில தேசிய கட்சித்தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    அவரது வாழ்த்து பதிவில், ‘கருணாநிதியின் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு இறைவனை எப்போதும் வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தும், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியும் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #HBDKalaignar95
    95-வது பிறந்த நாள் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #HBDKalaignar95
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல் நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

    இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலையிலேயே கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து நின்று கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.



    இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது மகிழ்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் நான் கடவுளை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் மு.கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HBDKalaignar95
    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நலஉதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர். #Karunanidhi #Birthday
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நலஉதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக் கிழமை) தன்னுடைய 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட உள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருக்கள் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி இன்று காலை புத்தாடை அணிந்து, பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரிடம், அவரது மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரபலங்கள் கருணாநிதிக்கு வாழ்த்து கூறுகின்றனர்.

    மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பழ.கருப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்பட பலர் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்தி பேசுகின்றனர்.

    இதேபோல் சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #governorkiranbedi #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    அரசு மீது கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டுவதும், புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்றும் நாராயணசாமியும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

    ஒரு சில சமயங்களில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைவதும் அதன் பிறகு சமாதானமாகி இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பது என வழக்கமாக இருந்து வருகிறது.



    கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்ற சில நாட்களில் 2 ஆண்டுகள் மட்டுமே புதுவையில் பணிபுரிவேன் என்றும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட புதுவையில் இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது புதுவையில் தொடர்ந்து கவர்னராக பணியாற்றுவேன் என்று கிரண்பேடி தெரிவித்தார்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கவர்னர் கிரண்பேடி புதுவையில் இருந்து பெட்டி படுக்கையுடன் வெளியேற வேண்டும் என்றும், கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநிலம் ஒரு சதவீதம் கூட வளர்ச்சி அடையவில்லை என்றும் நாராயணசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையாக தாக்கி பேசினார்.

    மேலும் கவர்னர் கிரண்பேடியின் அழைப்பு விடுத்த விழாவில் தன்மானமுள்ளவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் நாராயணசாமி அறிவித்தார்.

    அதன்படி நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி அழைத்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை பணியை சைக்கிளில் சென்று பார்வையிடுவது வழக்கம்.

    ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாசில் இருந்து திடீரென சைக்கிளில் புறப்பட்டார். துப்புரவு பணிகளை பார்வையிட்டபடி வந்த அவர் வழியில் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    அதன் பின்னர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். கவர்னரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் திகைத்து போனார்கள்.

    இது பற்றி வீட்டு மாடியில் இருந்த நாராயணசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது நாராயணசாமி குளித்து கொண்டு இருந்தார்.

    அதுவரை கவர்னர் கிரண்பேடி வீட்டு வராண்டாவில் காத்து இருந்தார். சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு நாராயணசாமி வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

    இதையடுத்து நாளை பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பதிலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து 2 ஆண்டு பணி நிறைவடைந்ததையொடடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

    இதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்றார். அங்கு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தார்.

    அதே போல் சபாநாயகர் வைத்திலிங்கமும் பதிலுக்கு கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  #governorkiranbedi #CMNarayanasamy

    மதச்சார்பற்ற ஜனதா தள முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #devegowda
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் கட்சியும், மதச்சாற்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுனர் பா.ஜ.க.வையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

    ஆளுனரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பா.ஜ.க. கடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.


    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரான தேவகவுடா இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, ‘நமது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வாழ்த்துக்கள், அவரது உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். #modiwishes #devegowda
    ×