என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர்"
- அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
- இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).
ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை" என்று கூறினார்.
இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், "இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.
- ரைசினா மாநாட்டுக்காக நியூசிலாந்து பிரதமர் இந்தியா வந்தார்.
- கிறிஸ்டோபர் லக்சனை புதுதில்லியில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து உரையாடி உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி கூறியதாவது, "இன்று, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை புதுதில்லியில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நமது பகிர்ப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் நமது நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஒரு பயனுள்ள விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்தார்.
டெல்லியில் நடக்கும் ரைசினா மாநாட்டுக்காக நியூசிலாந்து பிரதமர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- போலீஸ் துறையை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.
- வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குற்றங்களை தடுக்க மட்டுமல்ல குற்ற விசாரணைக்கும் உதவுகிறது.
அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-
உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதின் முயற்சியாக இந்த சிந்தனை மாநாடு நடைபெறுகிறது. போலீஸ் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், சட்டம்- ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில போலீசாருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும்.
உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா காலத்தில் போலீசார் தங்கள் உயிர்களை பணயம் வைத்து பொதுமக்களுக்கு உதவினார்கள். அவர்கள் கடமையில் குறைவு எதுவும் இல்லை. போலீஸ் துறையை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகையின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை ஆகும். மாநிலங்கள் ஒன்றிணைந்து கற்றுக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்.
சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு ஆகும். இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமைதி நிலவ ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.
நாடு முன்னேறும்போது வளர்ச்சிப்பணிகள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குற்றங்களை தடுக்க மட்டுமல்ல குற்ற விசாரணைக்கும் உதவுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
- ஒரு மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் 12 குழுக்களாக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.
பன்னெடுங்காலமாக காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலை, கலாச்சாரம், ஆன்மீக ரீதியாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.
ஏற்கனவே தமிழ் கலாச்சாரத்தையும், தமிழின் பெருமையையும் அடிக்கடி மேற்கோள்காட்டி வரும் பிரதமர் மோடி, இந்த உறவை இரு மாநில மக்களும் அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ரெயில்வே உள்ளிட்ட துறைகளுடன் உத்தரபிரதேச அரசும் இணைந்து பிரமாண்டமாக நடத்துகிறது.
சென்னை ஐ.ஐ.டி., வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள், இலக்கிய வாதிகள், தமிழறிஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்கள் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடவும், உள்ளூர் வாசிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி காசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்பவர்களை வரவேற்கவும், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் எந்த குறையும் இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.
பாரதியார் காசியில் சில காலம் வசித்துள்ளார். அங்குள்ள அனுமன்காட் பகுதியில் பாரதியின் இல்லம் உள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று வாரணாசி சென்றார். அப்போது பாரதி வாழ்ந்த இல்லத்துக்கு சென்றார். பாரதியின் உறவினரான 96 வயது கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.
பின்னர் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். அப்போது அவர் கூறும் போது, "இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து அவர்களின் அறிவு, கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், அனுபவங்களை கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்" என்றார்.
இன்று முதல் ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 12 குழுக்களாக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.
- இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
- மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.
1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் பாராளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்பு தேசிய சட்ட தினமாக கடை பிடிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0 டிஜிட்டல் நீதிமன்றம், எஸ். 3 வாஸ் இணையதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார்.
டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன நிகழ்ச்சிகள் நடந்தது. அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொது மக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலமாகும். அரசியல் சாசனம் நமக்கு கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும்.
இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் நீதி கிடைக்க நமது நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.
மக்களின் அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.
இந்தியாவின் வளர்ச்சி வலுவான பொருளாதாரம். சர்வதேச அளவில் நமக்கு நற்பெயர் பெற்று கொடுத்து உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
- வரும் நாட்களில் ஜி-20 தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும்.
- ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைபோல் டிரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் 'மான் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இன்று காலை 95-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மான் கி பாத் நிகழ்ச்சி 100-வது பதிப்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதி இந்தியா, சக்திவாய்ந்த குழுவான ஜி20-யின் தலைவர் பதவியை ஏற்கும்.
இது இந்தியாவுக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரிய பண்டிகையாக மாறியுள்ளது. இந்த பொறுப்பு இந்தியாவுக்கு வந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. ஜி-20க்கு தலைமை தாங்குவது இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலகளாவிய நன்மை மற்றும் நலனில் கவனம் செலுத்த ஜி-20 தலைமையின் வாய்ப்பை இந்தியா பயன்படுத்த வேண்டும். அமைதியாக இருந்தாலும் சரி, ஒற்றுமையாக இருந்தாலும் சரி, சுற்றுச்சூழலை பற்றிய உணர்திறன் அல்லது நிலையான வளர்ச்சியாக இருந்தாலும் அனைத்து விஷயங்களுக்கும் இந்தியாவிடம் தீர்வு உள்ளது.
வரும் நாட்களில் ஜி-20 தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜி-20 தொடர்பான விவாதம், கலந்துரையாடல் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆளில்லா விமானத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைபோல் டிரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த 18ம் தேதி இந்தியா, தனது முதல் தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இது குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்தது. இந்தியாவில் தனியார் விண்வெளித்துறைக்கு ஒரு புதிய சகாப்தத்தின் விடியலை குறிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
- அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோடி டுவிட்டரில் கூறும்போது, "சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
- தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன்.
- புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்ற சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சிம்லா:
இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது.
மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு இன்று பதவி ஏற்றார்.
இந்நிலையில், புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சுக்விந்தர்சிங் சுகுவுக்கு வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- தொண்டியில் பிரதமரின் ‘மனதின் குரல்’ பேச்சு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
- விவசாய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை நெற்களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பிரதமரின் ''மனதின் குரல்'' ஒலிபரப்பு நிகழ்ச்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தலைமையில் நடந்தது. நெற்களஞ்சியத்தின் முதன்மை அலுவலர் வெள்ளிமலர் முன்னிலை வகித்தார்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த கமலா வரவேற்றார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப அலுவலர் வெங்கடேசுவரி மொழிபெயர்த்தார். இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- மே மாதம் 11-ந் தேதி தேசிய தொழில்நுட்ப வாரமாகக் கொண்டாடப்பட்டது.
- பிரதமரின் குழந்தைப்பருவப்படத்தை ராஜா எம்.சண்முகம் பிரதமருக்குப் பரிசளித்தார்.
திருப்பூர் :
திருப்பூரில் உள்ள நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அடல் இன்குபேஷன் மையத்தில் 67 ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் புதுமையான படைப்புகளை சமர்ப்பித்துள்ளனர். குறிப்பாக பருத்தியினாலான கழிவுத் துணிகளில் இருந்து உருவாக்கப்பட்ட காகிதம், பேக்கிங் பொருட்கள் துணிகளுக்கு குறைவான உப்புடன் சாயமேற்றும் தொழில்நுட்பம், வாழை நாரை பஞ்சுடன் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள், இரும்பு ஆலைகளுக்கு தேவையான மூலக்கூறுகளை வடிகட்டி வாயுவை தனியாகப் பிரிக்கும் வடிகட்டி பைகள், தானியங்கி முறையில் ஆடைகளை தரம் பிரித்துப் பேக்கிங் செய்யும் தொழில்நுட்பம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளைக் கொல்லும் முககவசம் ஆகியவை மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளாகச் சந்தைபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொக்ரான் அணு ஆயுத சோதனை நடைபெற்றதன் 25-வது ஆண்டு நாளான மே மாதம் 11-ந் தேதி தேசிய தொழில்நுட்ப வாரமாகக் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆராய்ச்சி நிறுவனங்கள் புதுமையான படைப்புகளை புதுடெல்லியில் கடந்த 11-ந் தேதி காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு இளம் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தினார்.
நிப்ட்-டீ இன்குபேஷன் மையம் சார்பில் முதன்மை ஆலோசகர் மற்றும் அடல் இயக்குனர் ராஜா எம்.சண்முகம், தலைவர் பி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளை பிரதமருக்கு எடுத்துரைத்தனர். மேலும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பருத்தியினாலான கழிவுத் துணிகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட காகிதத்தில் இயற்கை சாயம் கொண்டு அச்சிடப்பட்ட பிரதமரின் குழந்தைப்பருவப்படத்தை ராஜா எம்.சண்முகம் பிரதமருக்குப் பரிசளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிப்ட்-டீ ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத் தலைவர் எஸ்.செந்தில் குமார், மேலாளர் கே.செந்தில் குமார், தொழில்நுட்ப பிரிவு அதிகாரி எஸ்.அருள் செல்வன், புணர்பவா ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.
- மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
சென்னை:
பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்தடைந்த அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
அதன் பிறகு மத்திய மந்திரி அமித் ஷாவை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் சந்தித்து பேசினர். அவர்களை மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் சாதனைகளுக்காக அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.
இன்று, கோவிலாம்பாக்கம் சென்ற அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியினருடன் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:-
தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவற விட்டுள்ளோம். தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளோம். இவ்வாறு இருமுறை பிரதமர்களை தவற விட தி.மு.க.தான் காரணம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க உழைக்கவேண்டும். பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலமாக சென்னையிலிருந்து வேலூர் விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து 6 வழிச்சாலை வழியாக கந்தனேரி செல்லும் அவர், மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கந்தனேரி பொதுக்கூட்ட மைதானத்தில் மேடையை சுற்றிலும் மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.