என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எண்ணூர்"
பூந்தமல்லி:
பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுபுகுந்து கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வந்தனர்.
இதில் போரூரை சேர்ந்த வசந்த், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 2 கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கினார்கள்.
அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த போது, அதில் யானை தந்தங்களின் புகைப்படங்கள் இருந்தன.
இது பற்றி அவர்களிடம் விசாரித்த போது இடைத்தரகர் பிரவின் குமார் என்பவர் அனுப்பியதாக தெரிவித்தனர். இதையடுத்து இடைத்தரகர் பிரவின் குமாரை போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில் எண்ணூரை சேர்ந்த சின்ராஜ் என்பவர் வீட்டில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும், அதை விற்பனை செய்வதற்காக பலருக்கு செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சின்ராஜ் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
யானை தந்தங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சின்ராஜ் பதுக்கி வைத்திருந்துள்ளார். அதை விற்க முயற்சி செய்த போது விலை படியாததால் வீட்டிலேயே வைத்து இடைத்தரகர் மூலம் பேரம் பேசி வந்திருப்பது தெரிய வந்தது.
யானை தந்தங்கள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. இதில் யாருக்கு சம்பந்தம் உள்ளது என்பது தொடர்பாக சின்ராஜ், பிரவின் குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவொற்றியூர்:
எண்ணூர் நேதாஜி நகரில் உள்ள தனியார் கண்டெய்னர் லாரி நிறுத்தும் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ராம் ஈஸ்வர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் அதே பகுதியில் தங்கி உள்ளார். இவர் வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது ராம் ஈஸ்வர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 50). மீனவர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென அந்த குடிசை தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதனால் திடுக்கிட்டு எழுந்த ரத்தினவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர், திருவொற்றியூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 குடிசைகள் மற்றும் அங்கு இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கந்தன் என்பவரது ஒரு மோட்டார்சைக்கிள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர் மற்றும் அக்கட்சியினர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், வருவாய்த்துறை சார்பில் 4 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகவும், இதனால் தங்களுக்கு கான்கிரீட் வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). மீனவரான இவர் நேற்று முன்தினம் இரவு சக மீனவர்களுடன் பைபர் படகில் கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மீன் பிடிக்க சென்றார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் செல்வகுமார் மீன்பிடிக்க செல்லாமல் படகிலேயே இருந்தார். இதையடுத்து மீன்பிடித்து விட்டு மற்ற மீனவர்கள் படகுக்கு வந்தனர். அப்போது அங்கு செல்வகுமாரை காணவில்லை.
அவர் வீட்டிற்கு சென்று இருப்பார் என நினைத்து அனைவரும் கரைக்கு திரும்பினர். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்ற இடத்துக்கு சென்று அவரை தேடினர்.
அப்போது அங்கு செல்வகுமார் சேற்றில் சிக்கி பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து சென்று செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மயிலாப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
எண்ணூர் அருகே அப்பர்சாமி கோவில் அருகே சென்ற போது கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிக் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆந்திராவை சேர்ந்த ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.
இன்று காலை பூட்டி இருந்த ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 60 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பணம், நகை அனைத்தும் நாசமானது. இதனை கண்டு பெண்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
தீவிபத்து பற்றி அறிந்ததும் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணன், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுககு ஆறுதல் கூறினர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்