search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நலம் விசாரித்தார்.
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் ராஜாஜி அரங்கில் திரண்டனர். 

    கூட்டம் அதிகரித்த காரணத்தினால் விஐபிக்கள் செல்லும் வழியில் மக்கள் நுழைய முற்பட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. 

    மேலும், சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான  தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. 

    இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜாஜி அரங்கில் நெரிசலில் சிக்கி காயமடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உடல்நலம் விசாரித்தார். அவருடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யா மொழி, சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.#DMKLeader #Karunanidhi
    புதுடெல்லி :

    வயது மூப்பு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்று முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    இதற்கிடையே, அவரது மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாள் முழுதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

    இந்திய வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு பாராளுமற்ற இரு அவைகளும் இரங்கல் தெரிவித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் உள்பட மத்திய மந்திரிகள் இரண்டு நிமிடங்கள் அமைதியாக எழுந்து நின்று கருணாநிதிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதாக மத்திய ம்ந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #DMKLeader #Karunanidhi
    குடியாத்தத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கருணாநிதி சிலை உடனே அகற்றப்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தி.மு.க. வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜி.ஆர்.கே. கிருஷ்ணமூர்த்தி. இவர் கருணாநிதி மறைவையொட்டி சோகத்தில் ஆழ்ந்தார். நேற்று குடியாத்தம் விநாயகபுரம் என்ற இடத்தில் தி.மு.க. கொடி கம்பம் அருகே 2½ அடி உயர கருணாநிதி சிலை வைத்து திறந்தார்.

    கல்லால் அமைக்கப்பட்ட அந்த சிலையில் வெண்கலம் போல பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பீடத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் படங்கள் வைத்திருந்தனர். கருணாநிதி சிலையை கண்ட பொதுமக்கள் சிலை முன்பு அஞ்சலி செலுத்தி சென்றனர்.

    இது பற்றி தகவலறிந்த வருவாய்துறை, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி உடனடியாக சிலையை அகற்றினர். அகற்றப்பட்ட சிலை மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கடந்த 2010-ம் ஆண்டு ஜி.ஆர்.கே. மூர்த்தி பரதராமி அடுத்த சாமிரெட்டி பள்ளி கிராமத்தில் கருணாநிதிக்கு கோவில் கட்ட முயற்சி செய்தார்.

    கட்சி தலைமை தலையீட்டால் அதனை கைவிட்டார். தற்போது அவர் கருணாநிதிக்கு முதன் முதலாக சிலை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி மூர்த்தி கூறுகையில்:- அனுமதி பெறாததால் கருணாநிதி சிலையை அகற்றியுள்ளனர். உரிய அனுமதி பெற்று மீண்டும் கருணாநிதி சிலையை திறப்பேன் என்றார்.
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

    பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

    இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, அண்னா சாலை, வாலாஜா சாலை வழியாக தொண்டர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் வந்தது. சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று ‘கலைஞர் வாழ்க’ என உணர்ச்சிப்பெருக்கில் குரல் எழுப்பினர். தான் பெயரிட்ட காமராஜர் சாலையை வழியே வந்த அவரது உடல் அங்கிருந்து அண்ணா சதுக்கம் கொண்டு வரப்பட்டது.

    அண்ணா சமாதிக்கு அருகில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தேவே கவுடா, பன்வாரிலால் புரோகித், ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, டெரிக் ஓ பிரையன், நாராயண சாமி, குலாம் நபி ஆசாத், ஜெயக்குமார், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

    பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 

    இதனை அடுத்து, முப்படை அதிகாரிகள் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றினர். மூவர்ணக்கொடி ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டது.

    கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

    பின்னர், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என எழுதப்பட்ட சந்தனப்பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டது.

    குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
    நேரு பிரதமராக இருந்த 1957-ம் ஆண்டில் தமிழக சட்டசபைக்குள் நுழைந்த கருணாநிதி மறையும் வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது தனிப்பட்ட சிறப்பம்சமாகும். #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட பின்னர் முதல் பலப்பரீட்சையாக 1957-ம் ஆண்டு அக்கட்சி சந்தித்த பொதுத்தேர்தலில் கருணாநிதி, குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது நாட்டின் பிரதமராக நேரு இருந்தார்.

    நேருவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜிவ் காந்தி, விபி சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவே கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங், மோடி என 13 பிரதமர்களையும் பார்த்துள்ள கருணாநிதி திரூவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவே மறைந்துள்ளார்.

    60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கதாநாயகன் கருணாநிதியை தவிர இந்த சாதனையை யாராலும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. 
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

    பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

    இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது. அங்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அதிர்ச்சியில் 4 தொண்டர்கள் உயிரிழந்தனர். #KalaignarDeath #Karunanidhi #DMK
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்துள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று மாலை டி.வி.யில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான தி.மு.க.வினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 41). ஆட்டோ டிரைவரான இவர் தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த செய்தியால் கடந்த 2 நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

    நேற்று கருணாநிதி மரணம் குறித்த செய்தி வந்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியடைந்து உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிகாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். டெய்லர் வேலை பார்த்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் கருணாநிதியின் மரணம் குறித்த செய்தியை கேட்டதும் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனுக்கு மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் தர்மக்கொடி. தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மறைந்தார் என்பதை அறிந்து மாரடைப்பால் இறந்து போனார். #KalaignarDeath #Karunanidhi #DMK
    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், இன்று காலை 8 மணிக்கு மனுவை நீதிபதிகள் ஒத்திவைத்து, அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

    மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் இருந்தது.

    மேலும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வந்தது. ராகுல் காந்தி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

    இதற்கிடையே, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெவித்துள்ளனர். அண்ணா சமாதி உள்ள பகுதி கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குள் வரவில்லை என  ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த துரைசாமி கூறினார்.

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக முறையிட்டது. இரவு 10.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.

    தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அரசுத்தரப்பில் ஆஜராகினர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆஜராகினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தங்களது பதிலை காலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். 
    உடல்நலக்குறைவால் இன்று மாலை மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு இலங்கை அதிபர் மைத்ரிமால சிறிசேனா அனுதாபம் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதேபோல, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 
    உடல்நலக்குறைவால் இன்று மாலை மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரம் வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இரவு 1 மணி வரை இங்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பின்னர் சிஐடி காலனி கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    இதன் பின்னர், நாளை அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட உள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில், இதற்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

    இந்நிலையில், 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    மெரினாவில் இடம் மறுக்கப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நடந்து வருகிறது.

    மேலும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியிடம் திமுக முறையிட்டுள்ளது. பொறுப்பு நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் இந்த அவசர மனுவை இரவு 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளார்.
    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில், திமுக தொண்டர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #Marina4Kalaignar

    ×