search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொற்றுநோய்"

    எஸ்.பட்டினம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தொண்டி:

    திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் 9 வார்டுகளும், 25-க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அடிப்படை சுகாதாரம் பாதுகாக்கப்படாத நிலையில் தொற்று நோய்களின் பிறப்பிடமாக இருந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது முக்தார் கூறியதாவது:- திருவாடானை யூனியனில் எஸ்.பி.பட்டினம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இதனால் இங்கு அதிகஅளவில் குப்பைகள் சேருவது வழக்கம். இந்த குப்பைகளை சேகரிக்க தினமும் துப்புரவு பணியாளர்கள் வீதி வீதியாக சென்றால் பொதுமக்கள் தெருவில் கொட்டாமல் பணியாளர்களிடம் கொடுப்பார்கள்.

    ஆனால் இந்த ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததுடன் குப்பைகளை சேகரிக்க வாகனங்களும் இல்லாமல் உள்ளது. இதனால் தூய்மை காவலர்கள் இங்குள்ள குப்பைகளை சேகரிக்க வாரம் ஒரு முறைதான் ஒரு வீதிக்கு வருகின்றனர். இதன் காரணமாக வீடுகளில் சேரும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டிய ஊராட்சி நிர்வாகம் அதனை சரியாக செய்வதில்லை.

    இனிமேல் அதிகாரிகளை நம்பி பயனில்லை என்பதால் எஸ்.பி.பட்டினத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்துவரும் பொது நல சங்கங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து அப்புற படுத்தவும், பொதுசுகாதாரத்தை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர் எஸ்.பி.பட்டினத்திற்கு நேரில் வந்து இங்குள்ள அடிப்படை சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளனர். #2138died #infectiousdiseasesinChina #2138diedinChina
    பீஜிங்:

    தெற்காசிய நாடுகளின் ஒன்றான சீனாவில் சுமார் பத்தாண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமலில் உள்ளது. எனினும், மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக சீனா விளங்கி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 138.64 கோடி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீனாவில் கடந்த (அக்டோபர்) ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான  2,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    இந்த வாரத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 282 மக்கள் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் தொற்றுநோய்களுக்கு இலக்கானவர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 539 பேர். இவர்களில் பலியான 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானவர்கள் வைரல் ஹெப்படிட்டிஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் கொனேரியா எனப்படும் பால்வினை நோய்த்தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #2138died #infectiousdiseasesinChina  #2138diedinChina
    கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. #Leptospirosis #RatFever #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது. 

    இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்தனர். 

    நேற்று எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர், திருச்சூரில் 8 பேர் என நேற்று மட்டும் 10 பேர் பலியாகினர். இதையடுத்து இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Leptospirosis  #RatFever #KeralaFloodRelief 

    ×