search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிட்லர்"

    ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க பிரதமர் மோடி, ஹிட்லரை போல செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #MDMK #Vaiko #PMModi
    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அம்பேத்கார் நினைவு நாளையொட்டி தல்லாகுளம் அவுட் போஸ்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்பமாட்டார். பாராளுமன்றத்துக்கு தீ வைத்து விட்டு ஹிட்லர், கம்யூனிஸ்டுகள் மீது பழிபோட்டார்.


    அது போல பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த அளவுக்கும் செல்வார். மத்திய பிரதேச மாநில தேர்தலில் பா.ஜ.க.வினர் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    வடமாநிலங்களில் ஓட்டு போட பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இதனை பா.ஜ.க.வினர் ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

    அண்ணல் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பியது யார்? அது கவர்னராக இருந்தால், அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தால் அது பச்சை துரோகம். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

    இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமனின் மறைவு வேதனை தருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் உயிர் பாதுகாவலனை இழந்து தவிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #PMModi
    ஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை அதிபர் சிறிசேனாவை ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #RanilWickremesinghe #Sirisena #Hitler
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார்.

    ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.



    இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம் சிறிசேனா கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்” என்றார். #RanilWickremesinghe #Sirisena #Hitler

    இந்தியாவில், ஹிட்லரின் வடிவங்களாக நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இருக்கிறார்கள் என முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறிஉள்ளார். #KarnataElection2018 #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பாரதிய ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.  

    பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ், ஜே.டி.எஸ். தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்கிறது என இருகட்சிகள் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்.

    இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். கர்நாடகத்தில், பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்பு சாசன விதி மீறப்பட்டு உள்ளதன் மூலம் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. இதனால், கவர்னர் எப்போதும் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

    புதிய அரசு அமைப்பது தொடர்பாக கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை எடுத்து கூறி ஆட்சி அமைக்க அனுமதி அளிக்கும்படி கவர்னரிடம் கேட்டு கொண்டோம். எங்களின் கோரிக்கைகளை கவர்னர் காற்றில் பறக்க விட்டுவிட்டார்.


    கவர்னர், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார். அவர் உண்மை நிலையை மறந்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கிறார். நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இந்தியாவில் ஹிட்லரின் வடிவங்களாக உள்ளனர். இவர்கள் 2 பேர் கூறும் அறிவுரைகளை கவர்னர் பின்பற்றுகிறார். அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி இருந்தால் கவர்னர் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்க மாட்டார்.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதிய ஜனதாவுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியதன் மூலம் குதிரை பேரத்துக்கு கவர்னர் வழிவகுத்து கொடுத்துள்ளார். தற்போது எங்களிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை பாரதிய ஜனதா மிரட்டி வைத்துள்ளது. அவரும் விரைவில் வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என கூறியுள்ளார். #KarnataElection2018 #Siddaramaiah #Modi #AmitShah
    ×