search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.கே.சிவக்குமார்"

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #DKShivakumar
    பெங்களூரு :

    நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் முன்னாள் மந்திரிகள் 3 பேர் உள்ளனர். அது யார் என்பது எங்களுக்கு தெரியும். ‘நெருப்பு இல்லாமல் புகையுமா?’.

    ஜிந்தால் மருத்துவமனையில் என்ன நடந்தது, யார்-யாருக்கு நெருக்கடி கொடுத்தனர் என்பதும் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் தெரியாமல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. யார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் செயல் தலைவரை கைது செய்துள்ளனர். இதை கண்டிக்கிறேன். இது ஜனநாயக படுகொலை ஆகும். முதல்- மந்திரி சந்திரசேகர் ராவ் தோல்வி பயத்தால், இவ்வாறு செய்கிறார். காங்கிரஸ் கட்சி எப்போதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது இல்லை. யார் பிரசாரம் செய்ய வந்தாலும் அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். #BJP #DKShivakumar
    வருமான வரி ஏய்ப்பு செய்ததோடு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது. #KarnatakaMinister #DKShivakumar
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.கே.சிவக்குமாருக்கு அவருடைய தொழில் பங்குதாரர் சச்சின் நாராயண், நண்பரும்-டிராவல்ஸ் நிறுவன அதிபருமான எஸ்.கே.சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றி வரும் ஊழியர் அனுமந்தய்யா, கர்நாடக பவன் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.

    இது சம்பந்தமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்துக்கு டி.கே.சிவக்குமாருக்கு, சச்சின் நாராயண், எஸ்.கே.சர்மா உதவி செய்துள்ளனர். டி.கே.சிவக்குமார், எஸ்.கே.சர்மா ஆகியோரின் அசையா சொத்துகளை ராஜேந்திரன் நிர்வகித்து வருகிறார். அனுமந்தய்யா ‘ஹவாலா’ முறையில் மாற்றும் பணத்தை டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாத்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நேற்று அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. மேலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. #KarnatakaMinister #DKShivakumar
    மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவை இல்லை என கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். #Mekedatu #MinisterShivakumar
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், டெல்லியில் இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம். இதில் நீர் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை.

    நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவை மீறவில்லை. தன்னிச்சையாக செயல்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது. இந்த விவகாரத்தில், தமிழகத்துடன் சண்டையிட விரும்பவில்லை. நட்புறவையே விரும்புகிறோம். தமிழகத்தின் கவலைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, தமிழக அரசிடம் கூறி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekedatu #MinisterShivakumar
    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மந்திரி சிவக்குமார், ஹவாலா நெட்வொர்க் நடத்துவதாக பெங்களூரு பொருளாதார குற்ற சிறப்பு நீதிமன்றத்தில் வருமானவரித்துறை புகார் அளித்துள்ளது. #ITDepartment #KarnatakaMinister #DKShivakumar #hawalanetwork

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கர்நாடக மாநில நீர்வளத்துறை மற்றும் மருத்துவத்துறை மந்திரியாக உள்ளார். 

    இந்நிலையில், மந்திரி சிவக்குமார் ஹவாலா நெட்வொர்க் நடத்துவதாக பெங்களூரு பொருளாதார குற்ற சிறப்பு நீதிமன்றத்தில் வருமானவரித்துறை புகார் அளித்துள்ளது.

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு உடையவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது இவரது சொத்து மதிப்பு சுமார் 251 கோடி ரூபாய் ஆகும். #ITDepartment #KarnatakaMinister #DKShivakumar #hawalanetwork
    ×