என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சகாயம்"
கோவை:
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நான் பொறுப்பில் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டு வருகிறது என கூற இயலாது.
பொன் மாணிக்கவேல் விவகாரம் தொடர்பாக, நான் இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அரசு துறையில் இருக்கிற காரணத்தால் எதுவும் கூற இயலாது.
எங்களை போன்ற அலுவலர்களை எங்கே பணியமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் அரசுக்கு உள்ளது. எந்த பணியிடம் அளித்தாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் இந்த பிரச்சினையை எளிதில் கையாள முடியும் என்றார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது பதவியை தொடர உயர்நீதிமன்றத்தை நாட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அனைத்து நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் நாம் அரசிடம் தான் தீர்வுக்காக எதிர்பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்றார். #sagayam #tngovt #honest
கோவை ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29 முதல் நவ.3 வரை அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊழலை ஒழிப்போம்; நாட்டை உயர்த்துவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலக அரங்கில் நடந்தது.
இதில் சென்னை அறிவியல் நகர துணைத்தலைவரான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசு நிர்வாக பொறுப்பில் இருந்து கொண்டு நேர்மையாக இருப்பது என்பது எளிதான காரியமல்ல. நேர்மையானவர்கள் நிராகரிப்பு, புறக்கணிப்பு, இடமாற்றம் உள்ளிட்ட பல எதிர்மறை விளைவுகளுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அரசுத்துறையில் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நம் நாட்டில் ஊழல் என்பது ஆழமாக பரவி விட்டது. அதை அழிக்க வேண்டியது இளைஞர்களின் கடமை, ஊழலை எதிர்த்த போதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன். தூக்கியடிக்கப்பட்டேன். இருந்தும் என் கடமையிலிருந்து நான் விலகவில்லை. ஆய்வு ஒன்றின்படி 92 சதவீத இந்திய மக்கள் வாழ்வின் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக லஞ்சம் கொடுத்துள்ளார்கள். உலக நாடுகளில் ஊழல் அதிகம் அரங்கேறும் நாடுகளுக்கான ஆய்வு பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் உள்ளது.
இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். பள்ளி பாடபுத்தகத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து பாடங்களை சேர்க்க வேண்டியது அவசியம். நேர்மை என்ற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே விதைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊழல் ஒழிப்பை மையமாக கொண்டு கட்டுரை, ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.எஸ்.டி.கமிஷனர் ஸ்ரீனிவாசராவ், கமிஷனர் (தணிக்கை) குமரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். #IASOfficer #Sagayam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்