search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை"

    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை காலை புதுவை வருகிறார்.
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக் கிழமை) காலை புதுவை வருகிறார்.

    காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக் கழகத்துக்கு செல்லும் அவர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பின் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் லாஸ் பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

    புதுவைக்கு நாளை வரும் வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிறார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள் போன்றவை குறித்து ஆலோசிக்க பா.ஜனதா உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவமூர்த்தி, தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



    கூட்டம் முடிந்ததும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மிகப்பெரிய அளவில் இயற்கை சீரழிவு இல்லாமல் தான் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. காவிரி ஆணையம் அமைத்தல், நீட் தேர்வை அந்தந்த மாவட்டங்களில் எழுதுதல் என தொடர்ந்து மத்திய அரசு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் இங்குள்ள பல கட்சிகள் விமர்சனம் மட்டுமே செய்துவருகின்றன.

    கவர்னரின் சுற்றுப்பயணத்தை தி.மு.க. தேவையில்லாமல் அரசியலாக்குகிறது. கவர்னர் சட்டத்தில் உள்ள சரத்துக்களை அறிவித்து இருக்கிறார். ஆனால் அவர் எங்களை மிரட்டுகிறார் என்கிறார்கள். எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்க இதனை மட்டும் கையில் எடுப்பதால், இவர்கள் மக்கள் திட்டங்களுக்காக பேசமாட்டார் கள் என்று மக்களுக்கே புரிந்துவிட்டது.

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகைதர இருக்கிறார். தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் மட்டுமே அதிபுத்திசாலி என்றும் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை என்ற வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். 20 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் அறிவாற்றலும், உழைப்பாற்றலும், தேசிய பண்பும் பெற்று இருப்பதால் தான் இன்று ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறேன்.

    எனக்கு தலைவராக இருக் கும் தகுதி இருக்கிறதா? என்பதை சொல்வதற்கு அன்பு மணிக்கு தகுதி இருக்கிறதா? என்பது வேறு விஷயம். இவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது அவரால் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்கு கொண்டுவர முடியவில்லை. யார் சுயமுயற்சியில் தலைவரானார்கள்? யார் அவர்களின் தந்தையின் முயற்சியில் தலைவரானார்கள்? என்பது குறித்து விவாதிக்க அன்புமணி ராமதாஸ் தயாரா?

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். ஒரு தொலைக்காட்சியில் என்னிடம் கேள்வி கேட்கும்போது, மரம்வெட்டுவதை பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்கிறார் என்று கேட்கிறார்கள். அதற்கு நான், மரம் வெட்டுவதை பற்றி அவர்கள் பேசலாமா? என்று கேள்வி மட்டும் தான் கேட்டேன். உங்களுக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது? அதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?

    இவ்வாறு அவர் கூறினார். 
    மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று கொண்டு வரப்படுவதையடுத்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் சிலைகளை மீட்டுள்ளனர். ரூ.150 கோடி மதிப்பிலான இந்த 2 சிலைகளும் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் சிலை, அவரது பட்டத்தரசி லோகமாதேவி சிலை தஞ்சை பெரிய கோவிலில் இருந்ததா? என்பது கூட பல பேருக்கு தெரியாது. இந்த திருட்டு சம்பவம் அவ்வாறு மூடி மறைக்கப்பட்டு இருந்தது. சிலைகள் திருட்டு போனது தெரிய வந்ததால் தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக செயல்பட்டு தற்போது சிலைகளை மீட்டுள்ளனர்.

    இன்று ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    ராஜராஜ சோழன் சிலை மற்றும் லோகமாதேவி சிலைகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் பார்க்க ஆவலாக உள்ளனர். மேலும் மீட்ட சிலைகள் பெரிய கோவிலில் வைக்கப்படுவதால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சிலைகள் எப்பொழுதும் பார்க்கும் வகையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிலை மீட்பு நிச்சயமாக வரலாற்று சாதனை தான். பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்பு குழுவினர் திறமையாக செயல்பட்டு சாதித்து காட்டியுள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதுபோல் பல கோவில் சிலைகள் காணாமல் போய் உள்ளன. இந்த சிலைகளையும் இந்த அரசு மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே கூறியதாவது:-

    தஞ்சையில் உலக புகழ் பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலை அவருடைய பட்டத்தரசி லோகமாதேவி சிலை ஆகியவை மீட்கப்பட்டு இருப்பதால் தஞ்சை பகுதி மக்கள் மட்டுமின்றி உலகமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சிலைகளை மீட்க பல கால கட்டங்களில் பலர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனாலும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் சிறப்பான முயற்சி எடுத்து சிலைகளை மீட்டுள்ளனர். அவர்களின் இந்த செயல் நிச்சயம் தஞ்சை வரலாற்றில் இடம்பெறும்.

    தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியதாவது:-

    மாமன்னன் ராஜ ராஜ சோழன் சிலை மீண்டும் தஞ்சைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இழந்த தமிழர்களின் பெருமையை மீட்டுள்ளனர். ராஜராஜ சோழன் சிலை பெரிய கோவில் வளாகத்தில் மக்கள் பார்வைக்காக பாதுகாப்பாக வைக்க வேண்டும். பழமையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ள இந்திய தொல்பொருள் துறையினர் ஏற்கனவே பெரிய கோவிலில் எந்த இடத்தில் சிலை இருந்ததோ அந்த இடத்தில் மீண்டும் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிற்ப கலை, கட்டடக் கலையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ராஜ ராஜ சோழன். தஞ்சை பெரிய கோவிலில் இருந்து அவருடைய ஒரிஜினல் சிலை காணாமல் போய்விட்டது. அவருடைய போலி சிலையை தான் இதுவரை நாம் வழிபட்டு வந்தோம்.

    இந்நிலையில் கொள்ளை போன ராஜராஜ சோழன் சிலையை, மீட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வர முயற்சி செய்த முன்னாள் எம்.பி சுவாமி நாதன், நீதிபதி மகாதேவன் மற்றும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இமாசலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவுக்கு 6 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மாநில கவர்னர், முதல் மந்திரி உள்பட பலர் வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் இன்று இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை வருகிறார். அவர் காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறைக்கு செல்கிறார்.
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டும், ஆய்வுகள் மேற்கொண்டும் வருகிறார்.

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை வருகிறார். அவர் காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறைக்கு செல்கிறார்.

    அங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ள கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிடுகிறார்.

    அனைத்தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு கவர்னர் செல்கிறார்.

    அங்கு ஓய்வு எடுத்து கொள்கிறார். பின்னர் அங்கு மாலை 3.30 மணிக்கு மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    விழுப்புரம் மாவட்டத்துக்கு கவர்னர் வருகையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரத்தில் கவர்னர் ஆய்வு பணி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    இதில் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராதாமணி, உதயசூரியன், டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர்.  #TNGovernor #BanwarilalPurohit
    விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகிற 18-ந்தேதி வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார். #TNGovernor #BanwarilalPurohit
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்துக்கு கவர்னர் வருகை தருகிறார்.

    அன்று மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் அவர், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். கவர்னர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. #TNGovernor #BanwarilalPurohit
    ×