search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல்"

    மலேசியாவில் இருந்து மேலும் ஒரு கப்பலில் ஆற்று மணல் வந்ததையடுத்து மேலும் 3 கப்பல்களில் மெட்ரிக் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
    சென்னை:

    தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 56 ஆயிரத்து 750 மெட்ரிக்டன் ஆற்று மணல் சரக்கு கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மணல் துறைமுக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக ஒரு யூனிட் மணல் ரூ.10,350 என்ற விலையில் இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பலில் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் ஏற்றிய நிலையில் 3-வது கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. ஏற்கெனவே 2-வது கப்பலில் வந்த மணல் விற்பனை இன்னும் தொடங்கப்படாத நிலையில் 3-வது கப்பலிலும் மணல் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் உள்ளூர் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஒரே வாரத்தில் 2 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 3 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் மணல் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
    போர்ச்சுக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் லிஸ்பனின் புறநகரான கஸ்காயிஸ் கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. #Shipwreck
    கஸ்காயிஸ்:

    கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது.

    அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமண பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள், போர்ச்சுக்கீசியர்கள் பயன்படுத்தும் ஆடை அலங்கார கருவிகள், சீன செராமிக்ஸ் பொருட்கள், அடிமைகளை விலைக்கு வாங்க பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் போன்றவை இருந்தன.


    இவை கடந்த 3-ந்தேதி லிஸ்பனின் புறநகரான கஸ்காயிஸ் கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி.1575, 1625-க்கு இடையே போர்ச்சுக்கல் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே நறுமண பொருட்கள் வர்த்தகம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போதுதான் இந்த கப்பல் மூழ்கியிருக்க வேண்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். #Shipwreck

    மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தையும், தமிழ்நாட்டின் திண்டுக்கல் நகரத்தையும் இணைப்பது தேசிய நெடுஞ்சாலை எண்.183 ஆகும். மழை, வெள்ளத்தால் இந்த நெடுஞ்சாலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் கோட்டயம், குமுளி, இடுக்கி வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.



    மழை, வெள்ளம் காரணமாக உணவுக்கு தவிக்கிற மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை கம்பம்மெட்டு வழியாக எடுத்துச்செல்ல முடியாத பரிதாப நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு இடையே பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கு சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    கொச்சி துறைகம் பகுதியில் உள்ள ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று இவர்களின் விசைப்படகு மீது மோதியது. இதில் அந்த படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    இதைதொடர்ந்து கடலில் மாயமான குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 9 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிஜூ என்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    கடற்படையினர், விமானப் படையினர் மூலம் தொடர்ந்து மற்ற மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் தங்கள் படகுகளில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் விசைப்படகு உரிமையாளர் ஏசுபாலனின் பிணம் நேற்று இரவு மீட்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் அவரது உடல் சிக்கியது. உடனடியாக ஏசுபாலனின் உடல் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

    ஏசுபாலனுக்கு சுபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் ஏசுபாலன் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஏசுபாலனுக்கு ராஜேஷ் குமார், ஆரோக்கிய தினேஷ் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் கடலில் மூழ்கிய படகில் சிக்கி மாயமாகிவிட்டனர். அவர்களது கதி என்னவென்று இதுவரை தெரியாதது அவர்களது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த விபத்து நடந்து 6 நாட்கள் ஆகிவிட்டதால் மற்ற 7 மீனவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

    மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து விஜயகுமார் எம்.பி. கோரிக்கை விடுத்து இருந்தார். அவரும் அதை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையில் மீனவர்களின் குடும்பத்தினர் விஜயகுமார் எம்.பி.யை சந்தித்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அவரும் தான் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர்களிடம் விளக்கி கூறினார்.

    ராமன்துறையில் மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத கப்பல் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தாங்கள் அந்த கப்பல் பற்றிய அடையாளத்தை ஆதாரத்துடன் கொடுத்துள்ளதால் அடையாளத்தை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடிப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    ×