search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போச்சம்பள்ளி"

    போச்சம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (வயது70).

    இவர் நேற்று வீட்டின் அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னை ஓலையை பின்னி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த தேனீக்கள் எதிர்பாராத விதமாக லட்சுமியை சூழ்ந்து கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி அருகே தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஏ.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலர் (வயது 30).

    கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்தது வந்தது தெரிய வந்தது. கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மலர் வீட்டில் தனியாக இருந்தபோது மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

    இதில் உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மலரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    தருமபுரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் முழு கடை போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பஸ் நிலையம், சந்தூர் மெயின்ரோடு, கல்லாவி மெயின்ரோடு, தருமபுரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதுபோன்று போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான அரசம்பட்டி, புளியூர், பாரூர், கண்ணந்தூர் ஆகிய பகுதிகளிலும் டீக்கடை, பூக்கடை, மருந்து கடை, பாத்திரம் கடை உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. ஆட்டோகளும் வழக்கம்போல் இயங்கின.

    இதுபோன்று போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும், ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடின. அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
    ×