search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 22-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு.
    • பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

    பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் ஓஷன் லைஜப் ஸ்பேஷஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    ரூ.50 கோடி வரை பணிபரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் வாதம் செய்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக கட்டுமான நிறுவனம் வாதித்தது.

    வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்ததோடு, பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • ஐந்து முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • தற்போது 6-வது முறையாகவும் ஆஜராகுவதை தவிர்த்துள்ளார்.

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

    இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி, அமலாக்கத்துறை அலுவலகம் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.

    ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஆஜராகும்படி தெரிவித்தது.

    அதனைத் தொடர்ந்து 6-வது முறையாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்று நேரில் ஆஜராகும்படி கேட்டுக்கொண்டிருந்தது.

    இதனால் இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இந்த முறையும் நேரில் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் "இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான சம்மன் சட்டவிரோதமானது என அக்கட்சி தெரிவித்து வருகிறது.

    • விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • அரவிந்த் கெஜ்ரிவாலின் வக்கீல் நீதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகுவதில் விலக்கு அளிக்க கோரினார்.

    டெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவாலின் வக்கீல் நீதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகுவதில் விலக்கு அளிக்க கோரினார். இதை நீதிபதி ஏற்று கொண்டதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜரானார்.

    அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, "நான் நேரில் ஆஜராக விரும்பியதாகவும் ஆனால் சட்டசபையில் பட்ஜெட் அமர்வு மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால் நேரில் வர இயலவில்லை என்றும் வேறு ஒரு தேதி கொடுக்கப்பட்டால் ஆஜராகுவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 16-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    • திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமை விசாரிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் முறையீடு செய்தார்.
    • செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்றபோது செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட் சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும். அதனால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    இதை ஏற்காத நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததுடன், இன்று (வெள்ளிக்கிழமை) குற்றச்சாட்டு பதிவு செய்ய செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி முறையிட்டார்.

    மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கமான முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.

    இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பில் வாதாட விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி ஜாமீன் மனு புதன்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும்.

    திங்கட்கிழமை தன்னால் ஆஜராக இயலாது என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக ஆஜராக மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது.
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

    பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.

    பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

    இதற்கிடையே, வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் 19-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மஹுவா மொய்த்ராவுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    • 20-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றம் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாக தேதி குறிப்பிடப்பட்டது.

    இந்த நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மூன்று வழக்குகள் முடியும் வரை அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்க தடைவிதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பு அளித்தார். அப்போது அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தொடங்கக் கூடாது என்ற செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    அதோடு குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்கிறோம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மெமோ குறித்து பின்னர் முடிவெடிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், நாளை வரை காவலை நீட்டித்தும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இத்துடன் அவரது நீதிமன்ற காவல் 20-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை தெரிவித்தனர்.

    • வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்காக இன்று நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமான மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கதுறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    • வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தியுள்ளது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி. ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். தன் வாதத்தில், "செந்தில் பாலாஜி தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார், இதனால் வழக்கில் சூழ்நிலைகள் மாறிவிட்டன."

     


    "மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தியுள்ளது. இதனை விசாரணையின் போது தான் நீரூபிக்க முடியும்," என்று தெரிவித்து இருந்தார்.

    இவர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது வாதத்தில், "இந்த வழக்கில் எந்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திருத்தவில்லை. அனைத்து ஆதாரங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டவை," என்று தெரிவித்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் தொடர் வாதத்துக்காக இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தார். 

    • 5 முறை கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.
    • தனக்கு சம்மன் அனுப்பப்படுவது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

    இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

    தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில் தற்போது 6-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 19-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த முறையும் அவர் ஆஜராவாரா என்பது தெரியவில்லை. தன்னை கைதுசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

    • செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.
    • பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.

    சென்னை:

    செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை மனுவில்,

    * செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும்.

    * செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.

    * ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு.

    * பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.

    * செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    * செந்தில் பாலாஜி தான் வழக்கின் விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது.

    • சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பின்னி மில்லுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடத்தை கடந்த 2015-2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.

    லேண்ட் மார்க் ஹவுசிஸ், கே.எல்.பி. ஆகிய 2 கட்டு மான நிறுவனங்கள் மேற்கண்ட இடத்தை வாங்கிய போது அரசியல் பிரமுகர் கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 கட்டுமான நிறு வனங்களிலும் வருமான வரிதுறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடத்திய சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கட்டுமான நிறுவனங்கள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து உள்ளன என்கிற பட்டியல் கிடைத்தது. இதில் அ.தி. மு.க. முன்னாள் எம்.பி.க் கள் உள்பட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதன்மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வாரம் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 கட்டுமான நிறுவனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    தி.நகர் சரவணா தெருவில் உள்ள லேட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில், மற்றும் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மனிஸ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடை பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெறும் இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆடிட்டர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடை பெறும் இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரூ.50 கோடி லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தி வருவதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    ×