search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஷ்டஈடு"

    சாலை விபத்தில் பலியான பெண் என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.26½ லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என மோட்டார் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி-பத்மா தம்பதிகளின் மகள் ஸ்ரீமதி. என்ஜினீயரிங் படித்திருந்த இவர் இருங்காட்டுகோட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முத்து சுப்பிரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டேரியில் இருந்து மணலிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது தொடர்பாக மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் லாரி உரிமையாளர் மோகன், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருமான முத்து சுப்பிரமணி தந்தை ஜெய சங்கர் ஆகியோர் ஸ்ரீமதி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது பதிலளித்த ஐ.சி.ஐ. சி.ஐ. லாம்பார்ட், இன்சூரன்ஸ் நிறுவனம், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது. லாரி சாலை ஓரமாக தான் நிறுத்தப்பட்டு இருந்தது என்று கூறி இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் கூறும்போது, “முத்து சுப்பிரமணி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி லாரி மீது மோதி இருக்கிறார். அவர் கவனமாக வாகனத்தை ஓட்டி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்கலாம். அதே போல் லாரியை ஒழுங்காக சாலையில் நிறுத்தி இருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவர், லாரி டிரைவர் இருவர் மீதும் தவறு உள்ளது.

    எனவே லாரி உரிமையாளர் மோகன், ஐ.சி.ஐ.சி.ஐ. இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஜெயசங்கர், மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள நே‌ஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு என ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகையை ஸ்ரீமதி குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தீம்பார்க்கில் விமானப் பணிப்பெண் பலியான சம்பவம் குறித்து அவரது குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 20 வயதான விமான பணிப்பெண் பூந்தமல்லியில் உள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றார்.

    அப்போது ‘‘ஆக்டோபஸ்’’ என்ற விளையாட்டு சாதனத்தில் ‘ரைடு’ செல்லும்போது படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி நடந்தது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் உயிரிழந்த விமான பணிப்பெண் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். மாநில குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர் கே.பாஸ்கரன், இந்த வழக்கினை விசாரித்தார். உயிரிழந்த விமான பணிப்பெண் இளம் வயது உடையவர் என்பதாலும், வருவாய் ஈட்டக் கூடியவராக இருந்ததாலும் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.65 லட்சம் வழங்க பொழுதுபோக்கு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

    அவரது இறுதி சடங்கு செலவிற்கு ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரமும் வழங்கவேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளார். ஏற்கனவே ஐகோர்ட்டு மூலம் ரூ.25 லட்சம் பெறப்பட்டதால் மீதமுள்ள ரூ.40 லட்சம் நஷ்ட ஈடு தொகையினை வழக்கு உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற 4 வாரதுக்குள் செலுத்த வேண்டும். அப்படி கட்டத்தவறினால் 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளார்.

    இந்த வழக்கில் விமான பணிப்பெண் குடும்பம் சார்பாக வக்கீல் வாசுகி ராமன் ஆஜராகி வாதிட்டார். #tamilnews
    விபத்தில் கண்பார்வை இழந்த திருப்பூர் தனியார் கம்பெனி மேலாளர் ஜெயபிரகாஷ் பூபதிக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டனை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் பூபதி (வயது 47). டையிங் கம்பெனி மேலாளர். இவரது மனைவி சுமதி (42).

    கடந்த 2013 மார்ச் 10-ந்தேதி ஜெயபிரகாஷ் பூபதி தனது மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர் ரோடு மும்மூர்த்தி நகரில் சென்றார். போயம்பாளையத்தில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் காயம் அடைந்த ஜெயபிரகாஷ் பூபதி கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது 2 கண்பார்வையும் பறிபோனது. விபத்து குறித்தான வழக்கு 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது. வாதி, பிரதிவாதி, சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதே கோர்ட்டில் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் பார்வை இழந்த ஜெயபிரகாஷ் பூபதி மற்றும் அவரது குடும்பத்தினர், எதிர்தரப்பை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். அங்கு ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் விபத்தில் பார்வை இழந்த ஜெயபிரகாஷ் பூபதிக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதனை ஏற்றுக்கொள்வதாக ஜெயபிரகாஷ் பூபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக காசோலை தயார் செய்யப்பட்டது.

    தயார் செய்யப்பட்ட நஷ்ட ஈடுக்கான ரூ.1 கோடி காசோலையை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் பூபதி மற்றும் அவரது குடும்பபத்தினரிடம் வழங்கினார். இதில் 2-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜியாவுதீன், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெகநாதன், முதன்மை நீதிமன்ற நீதிபதி அழகேசன் மற்றும் நீதிபதிகள் கவியரசு, நித்திய கலா மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர். #tamilnews
    அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியருக்கு கோர்ட் உத்தரவிட்டும் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நேதாஜிவீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவசுந்தரி.

    கடந்த 10.6.2005-ம் ஆண்டு ஜெயபிரகாஷ் தனது மோட்டார்சைக்கிளில் பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    வில்லரசம்பட்டி அருகே வந்தபோது ஜெயபிரகாசுக்கு பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபிரகாஷ் இறந்துவிட்டார்.

    இது தொடர்பாக ஜெயபிரகாஷ் குடும்பத்தினர் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் இந்த தொகை போதாது என்று அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதி ரூ.16 லட்சம் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

    ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் ஜெயபிரகாஷ் மனைவி தேவசுந்தரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வட்டியுடன் ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 9 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து இன்று கோர்ட்டு ஊழியர்கள் ஈரோடு பஸ் நிலையத்துக்கு வந்து ஈரோடு-கோவை செல்லும் அரசு பஸ், கோவை-ஆத்தூர் செல்லும் அரசு பஸ் என 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
    விபத்தில் உயிரிழந்த சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.நாராயணன். இவரது மகன் மணிகண்டன் (20). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சூப்பர்வைசர்’ ஆக பணிபுரிந்தார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் டேங்கர் லாரியில் அமர்ந்து பயணம் செய்தார். அவருடன் 2 ஊழியர்களும் இருந்தனர். அப்போது நடந்த விபத்தில் லாரி கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

    இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே விபத்தில் இறந்த மணிகண்டனின் தந்தை நாராயணன் சென்னையில் உள்ள மோட்டார் விபத்துகள் இழப்பீடு நடுவர்மன்ற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    எனது மகன் மணிகண்டன் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கி வந்தது. தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டியதால் விபத்த ஏற்பட்டுள்ளது. எனவே லாரி நிறுவனமும், தனியார் இன்சூரன்சு நிறுவனமும், ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணையின் போது லாரி நிறுவனம் ஆஜராகவில்லை. தனியார் இன்சூரன்சு கம்பெனியும் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

    ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ரமேஷ் விபத்தில் மரணம் அடைந்த மணிகண்டன் குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்சு நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் நஷ்டஈடு தொகையை 2015-ம் ஆண்டு முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். டிரைவர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். #Tamilnews

    ×