search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150339"

    • வடமாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி எம்.வி.எஸ். நகரில் தனியாருக்கு சொந்தமான பிரபல பன்னாட்டு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின், குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தி இருப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து மாவட்ட தொழிலாளர் நல துறை உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள 12 குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.பின்னர் அவர்களை திருப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குழந்தை தொழிலா ளர்களை பணிக்கு அமர்த்திய அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம், முறையாக கட்டப்படாததால் கட்டடத்தின் சுவர்கள் சாய்ந்து வடமாநில தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

    • சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த 4-ந் தேதி மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர்.
    • நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பின் இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டில் இருந்து கடத்தல்காரர்கள் அதிகளவில் தங்க கட்டிகளை ராமநாதபுரத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை மன்னார் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இந்திய கடலோர காவல்படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட கடல் வழித்தடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது படகில் வந்த கடத்தல்காரர்கள் மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் அதிகாரிகளை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக படகில் இருந்த வேதாளையை சேர்ந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி ஏற்கனவே கடத்தி வேதாளையை சேர்ந்த ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நிபுணத்துவம் பெற்ற நீச்சல் பயிற்சி பெற்ற, வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் வீசப்பட்ட கடலில் இறங்கி தேடும் பணி நடந்தது.

    நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர். ஆனால் 2 நாட்களாக எதுவும் சிக்கவில்லை. இரவு நேரங்களில் வேறு யாரேனும் அந்தப் பகுதிகளில் இறங்கி தங்க கட்டிகளை எடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்க கட்டிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் தற்போது கடல் காற்று அதிகமாக வீசி வருவதால் சில மணி நேரம் பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அதிகாரிகளின் தகுந்த ஆலோசனையோடு வீரர்கள் தொடர்ந்து தங்க கட்டிகளை தேடி வந்தனர். இவர்களோடு நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் இன்று மதியம் ஆழ்கடலில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சலை கடலோர காவல்படை வீரர்கள் கண்டெடுத்து மீட்டனர். மேலே கொண்டு வரப்பட்ட பார்சல் மண்டபம் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பார்சல் கட்டி உடைக்கப்பட்டது. அப்போது அதில் 10 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். தங்கத்தை மீட்ட அதிகாரிகள் அதனை கடத்தி வந்த கும்பல் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • என்ஜீன் பழுதானதால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்தனர்.
    • கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்டனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது40). இவருக்கு சொந்தமான நாட்டு படகு நாகசாமி(58), வடிவேலு(32), அருண் குமார்(22), சதீஸ்குமார்(22), கிருஷ்ணகுமார்(22) ஆகியோர் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களுடன் செல்வ ராஜூம் சென்றார். அவர்கள் நடுக்கடலில் சென்றபோது திடீரென படகில் இருந்த என்ஜீன் பழுதானது.

    இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் தத்த ளித்தனர். இதுபற்றி மீன்வ ளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து கப்பலில் சென்று பாம்பன் கடற்கரை விளக்கம் பகுதியில் இருந்து 10நாட்டிக்கல் தூரத்தில் பழுதாகி நின்ற படகில் இருந்த 6 மீனவர்களையும் மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உணவு வழங்கினர்.

    பின்னர் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் பழுதான நாட்டு படகை ரோந்து கப்பலில் கட்டி இழுத்து வந்து மண்டபம் வடக்கு மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    • பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை,

    கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது.

    இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் ஜெயந்த் தாஸ் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 24, 31 மற்றும் 25 வயதுடைய 3 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் மீட்கப்பட்ட அழகிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் ஆதரவின்றி சுற்றித்திரிபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரையும் மீட்டு உணவு மற்றும் உடை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்து யாசகம் பெறுபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ரெயில்வே இருப்புப்பாதை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஏட்டு சரவண செல்வம் மற்றும் போலீசார் ஆதரவின்றி சுற்றி திரிபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன்படி சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 53), திருவண்ணாமலை மாவட்டம் அத்திஅந்தன் போஸ்ட் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் ( 51) ஆகிய 2 பேரையும் மீட்டு உணவு மற்றும் உடை வழங்கினர்.

    பின்னர் அவர்களை தஞ்சாவூர் மாதாகோட்டையில் உள்ள விக்டோரியா முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்து நல்ல முறையில் பராமரிக்க கேட்டுக் கொண்டனர்.

    • ரூ.60 லட்சம் மதிப்பிலான 3 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது
    • அறநிலையத்துறையினர் அதிரடி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளியில் 3 ஏக்கர் நிலம் விவசாயி ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் செல்வராஜ், பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணன் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவர்களது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், குன்னம் ஆய்வாளர் சுசிலா, பேரளி (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், நில அளவையாளர் கண்ணதாசன் மற்றும் பேரளி கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக பேரளியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலமும் விரைவில் மீட்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
    • கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார்.

    இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்று கொண்டிருந்த இவருக்கு சொந்தமான பசுமாடு நடந்து செல்லும் போது கொல்லைபுர த்திலிருந்த பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அதனை மீட்க முயற்சித்த நிலையில் பசு மாட்டை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆழமான பாழும் கிணற்றில் இறங்கி இரண்டு மணி நேரம் போராடி சாதுர்யமாக பசு மாட்டை பாதுகாப்பாக மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டுக் கொடுத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுதலை தெரிவித்தனர்.

    • அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்கப்பட்டது.
    • வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதிநகர் கோகுலம் கார்டனை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (வயது73). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தனது 2-வது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அப்துல் காதர் ஜெய்லானி உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கரவேலு நிலத்தை, மற்றொரு சங்கரவேலு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
    • மீட்கப்பட்ட நிலம் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் சங்கரவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தென்காசி:

    சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரவேலு (வயது81). இவருக்கு சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்பிலான 64.5 செண்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சங்கரவேலு என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடி செய்து மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சங்கரவேலு கடந்த 2-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. முத்துப்பாண்டி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உமா மகேஸ்வரி, மாரியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலி ஆவணம் ரத்து செய்து, மீட்கப்பட்ட நிலத்தை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலையில் சங்கரவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பாராட்டுகளை தெரிவித்தார்.

    • கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.
    • அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி வள்ளியம்மாள் கோவில் கட்டளை பயன்பாட்டுக்காக 1963ல் தானமாக வழங்கியுள்ளார்.

    அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர். அதன்பின் அவர்களை அப்புறப்படுத்தி தனியார் ஆக்கிரமித்தனர். பின் பயன்பாடு இன்றி புதர்மண்டிய நிலமாக இருந்து வந்தது. கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு கோவில் சுவாதீனத்துக்கு நிலத்தை எடுத்துள்ளது.

    • பவானி ஆற்றங்கரையோரம் பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி பவானி ஆற்றில் சுமார் 55 வயதுடைய முதியவர் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகே பவானி ஆற்றங்கரையோரம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பவானி ஆற்றில் வெவ்வேறு இடங்களில் பிணமாக மிதந்த ஆண், பெண் உடல் குறித்து யார் என்று அடையாளம் தெரிந்தது. அத்தாணி திருவள்ளுவர் நகர் ஓடைமேடு பகுதியை சேர்ந்த செங்கோடன் (45) என்பதும்,

    அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகேயுள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார் என்றும் தெரியவந்தது.

    இதனையடுத்து பெண் உடலில் இடது கையில் அமுதா என்ற பெயர் எழுதி உள்ளது. ஆனால் இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×