search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்து"

    ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம், புதிய தொழில் நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாக இருக்கிறது. #Rajini #Muthu #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியானது.

    1998-ம் ஆண்டு அக்டோபரில் 50 திரையரங்குகளில் ஒடொரு மகாராஜா (டான்சிங் மகாராஜா) என்ற பெயரில் ரிலீசான முத்து படம் அங்கு வெற்றி பெற்றது.

    100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. 2006-ம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றத்தில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றும்போது முத்து படத்துக்கு அங்கே கிடைத்த வரவேற்பை பற்றி குறிப்பிட்டார். ரஜினிக்கும், மீனாவுக்கும் ஜப்பான் நாட்டில் ரசிகர்கள் உருவானார்கள்.

    ஜப்பானில் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் அந்த தாக்கம் இன்னும் இருப்பதால் படத்தை தற்போதைய தொழில்நுட்ப வசதிகளான 4கே திரை மற்றும் 5.1 ஒலி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.

    டிசம்பர் மாதம் வெளியிடுவதற்காக படத்தை டிஜிட்டலாக மாற்றி தொழில் நுட்பத்தை புகுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    படம் தொடங்குவதற்கு முன்னர் ரஜினி திரையில் தோன்றி ஜப்பான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார். இந்த வீடியோவை படத்துக்கான விளம்பரத்திலும் பயன்படுத்த இருக்கிறார்கள். ஈடன் என்டெர்டெயின்மெண்ட் என்ற ஜப்பானிய பட நிறுவனம் 25 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்படலாம் என்கிறார்கள். வெளிநாடுகளில் மறுவெளியீடான படம் என்ற பெருமையை முத்து படம் பெற இருக்கிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் ரத்தின அங்கி மற்றும் முத்தங்கிகளில் முத்து, ரத்தின கற்கள் மாயமாகி உள்ளதாக யானை ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். #SrirangamTemple
    திருச்சி:

    கோவில் சிலைகள் கடத்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ள யானை ராஜேந்திரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 1959-ம் ஆண்டுக்கு பின்னர் தான் பல கோவில்களில் உள்ள மிகவும் பழமையான சிலைகள் திருடப்பட்டும், கடத்தப்பட்டும் இருக்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆய்வின் மூலம் சுமார் 4 ஆயிரம் சிலைகள் கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதில் 261 சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன. இவை எல்லாம் வெறும் சிலைகள் அல்ல. தெய்வ திருமேனிகள். வெளிநாடுகளில் உள்ள அனைத்து சிலைகளையும் மீட்டு கொண்டு வருவதற்கு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை இந்த பணியில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது. வழக்கையும் சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்கநாதரின் திருமேனியில் போர்த்தப்படும் ரத்தின அங்கி மற்றும் முத்தங்கிகள் இரண்டு முறை வெளியே கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன. மிகவும் பழமையான இந்த அங்கிகளில் முத்துக்கள், வைரம், வைடூரிய கற்கள் மற்றும் நவரத்தின கற்கள் 500-க்கும் மேல் இருந்தன.

    ஆனால் தற்போது 10 முத்துக்களும், 15 ரத்தின கற்களும் தான் இருக்கின்றன. மற்றவை இருந்த இடங்களில் வெறும் ஓட்டை தான் உள்ளன. இந்த ரத்தின கற்கள், முத்துக்கள் ஆகியவை எப்படி மாயமானது? என்பதை கண்டுபிடிக்க வேண்டுமென ஐகோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். திப்பு சுல்தான், ரெங்கநாதர் கோவிலுக்கு கொடுத்த நகைகள் எங்கே போனது என தெரியவில்லை.

    சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கினால் விவசாய விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் மற்றும் வீட்டு மனைகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மீறி மாவட்ட அளவில் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் முறைகேடு செய்து வருகிறார்கள்.

    திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். இந்த வழக்கில் இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி தீர்ப்பு வர உள்ளது. தமிழகத்தில் 13 லட்சம் வீட்டுமனைகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #SrirangamTemple

    திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க முத்து இன்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #MKMuththu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7.8.2018 அன்று உயிரிழந்தார். அவரது மறைவை ஏற்க முடியாத தமிழக மக்களும் தொண்டர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இதையடுத்து, மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது மறைவு அன்று நேரில் அவரை சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகம் மு.க முத்து இன்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #MKMuththu
    ×