search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 151061"

    • மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு 4 பேரும் நடந்து சென்றனர்.
    • ஆத்திரம் அடைந்த மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தினார்.

    கோவை:

    கோவை கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் ஆலாந்துறையை சேர்ந்த மனோஜ், சதிஷ், சபரி.

    சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் ஆலாந்துறையில் உள்ள நண்பரின் திருமணத்துக்கு சென்றனர். அங்கு பிரசாந்த், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோர் மது குடித்தனர்.

    மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு 4 பேரும் நடந்து சென்றனர். அப்போது பிரசாந்திற்கும், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது திடீரென தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தினார். சதிஷ் மற்றும் சபரி அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாறியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து 3 ேபரும் தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து வலியால் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பிரசாந்த் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மனோஜ், சதிஷ், சபரி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே மதுகுடிக்க பணம் தராதவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • போதை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

    தேனி:

    தேனி அல்லிநகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டியன்(40). இவரது உறவினர் முருகன். இவர்கள் கூலிவேலை பார்த்து வருகின்றனர்.

    தினமும் மதுகுடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக பாண்டியன் மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிட்டார். சம்பவத்தன்று முருகன் வலுக்கட்டாயமாக மது குடிக்கவருமாறு கேட்டுள்ளார்.

    அவர் வர மறுக்கவே தனக்காவது பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பணமும் தர முடியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் கத்தி மற்றும் கண்ணாடி டம்ளரால் பாண்டியனை தாக்கினார். படுகாமயடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த கார்த்திசன் மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.
    • தங்கம் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திசன் (வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தங்கம் (36). இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

    தங்கம் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 17 பவுன் நகைகளை உறவினர் ஒருவரிடம் பாதுகாப்பு கருதி கொடுத்து வைத்துள்ளார்.

    ஆனால் அந்த நகைகளை கேட்டு அவரது கணவரான கார்த்திசன் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திசன் தனது மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.

    இதில் தங்கத்தின் தலை மற்றும் இரண்டு கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனே கார்த்திகேசன் அங்கிருந்து சென்று விட்டார்.

    படுகாயமடைந்த தங்கம் உடனடியாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திசனை தேடி வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவி வீட்டிற்கே சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கவேல்- ருக்மணி தம்பதியினர். இவர்களது மகள் பார்வதி (வயது 24). பார்வதிக்கும், திருச்சி காஜாமலை இந்திராநகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற மணிகண்டன் (30) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீதர், சுதா என மகன், மகள் உள்ளனர்.

    கார் டிரைவரான ராஜ்குமார் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் திருச்சிக்கு திரும்பினார். திருச்சியில் கார் டிரைவர் வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் ராஜ்குமாருக்கு மனைவி பார்வதி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் பார்வதியை உப்பிலியாபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டார். மகன், மகளுடன் ராஜ்குமார் திருச்சி காஜாமலை இந்திராநகரில் வசித்து வந்தார். நேற்று இரவு ராஜ்குமார் திடீரென மனைவியை பார்க்க உப்பிலியாபுரம் வெள்ளாளப்பட்டிக்கு சென்றார்.

    பார்வதியுடன் இரவில் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்து அறையில் பார்வதியின் தந்தை தங்கவேலும், ருக்மணியும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 10.30 மணிக்கு ராஜ்குமார் பார்வதியுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பிறகு ஆத்திரத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக குத்தினார். இதில் பார்வதிக்கு மார்பு, தோள்பட்டை, கழுத்து பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.

    பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த பெற்றோர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து தங்கவேல் உப்பிலியபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ராஜ்குமாரை இரவு முழுவதும் தேடினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் பதுங்கியிருந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெர்லின்:

    ஜெர்மனி வடக்கு பகுதியில் உள்ள லூயிபெக் நகரில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் தனது இறுக்கையை மூதாட்டி ஒருவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த மற்றொரு நபர் இறுக்கையை விட்டுக்கொடுத்தவரின் மார்பில் திடீர் என கத்தியால்  குத்தியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த பலரையும் அந்த நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். 

    விபரீதத்தை அறிந்தது பேருந்து ஓட்டுனர் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தியதிய பிறகு உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்த தாக்குதலை நிகழ்த்திய 34 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் அவர் இந்த தாக்குதல் நடத்தியதற்கான காரணம் விளங்கவில்லை என கூறிய போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
    ஜப்பான் புல்லட் ரெயிலில் மர்ம நபர் ஒருவர் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    டோக்கியோ:

    ஜப்பானில் நேற்று இரவு டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 800-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    இரவு 10 மணியளவில் (இந்திய நேரப்படி பகல் 1 மணி) ரெயிலில் பயணம் செய்த மர்மநபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் பயணிகளை சரமாரி குத்தினார். இதனால் பயத்தில் அலறிய பயணிகள் ஓடும் ரெயிலில் அங்கும் இங்குமாக ஓடி பதுங்கினர். பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஆண் பயணி ஒருவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் காயம் அடைந்த 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அந்த ரெயில் ஒட்டாவா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு தயாராக காத்திருந்த போலீசார் ரெயிலில் ஏறி கத்திகுத்து நடத்திய மர்ம நபரை கைது செய்தனர்.

    அவனது பெயர் இச்சிரியோ கொஜிமா (22). அவரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா? என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
    ×