search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோயாளி"

    ஓசூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் நோயாளி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident #Ambulance
    கிருஷ்ணகிரி ஓசூர் அருகே ஆம்புலன்ஸ் வேன் ஒன்று நோயாளியை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டு இருந்தது. அது சீத்தாராம் மேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வழியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது.

    இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தியாகதுருகத்தில் பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டரை மருத்துவ குழுவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தியாகதுருகம்:

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள திருக்கோவிலூர் சாலையில் வசித்து வருபவர் சலாவுதீன். இவருடைய மனைவி நர்கீஸ் பானு (வயது 38).

    இவர் தனது வீட்டின் முன்பு உள்ள ஒரு அறையில் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். நர்கீஸ் பானு எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாக விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    அதன் பேரில் விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சுந்தர்ராஜ் தலைமையில் சங்கராபுரம் பகுதி மருந்து ஆய்வாளர் தீபா, விழுப்புரம் நிர்வாக அலுவலர் நடராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், டாக்டர் கவிதா உள்ளிட்டோர் நர்கீஸ் பானுவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், நர்கீஸ் பானு பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்ததும், வீட்டிலேயே நோயாளிகளுக்கு மருந்து- மாத்திரைகள் கொடுத்ததும், குளுக்கோஸ் ஏற்றியதும் தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவ குழுவினர் நர்கீஸ் பானுவை பிடித்து தியாகதுருகம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்கீஸ் பானுவை கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இக்பால் என்ற 60 வயது முதியவரின் கிட்னியை மருத்துவர் விபு கார்க் திருடியுள்ளார்.

    இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மருத்துவர் விபு கார்க் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ள உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறையினர், அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டள்ளதாக சிறப்பு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக இக்பால் என்ற 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் விபு கார்க், நோயாளிக்கு தெரியாமல் அவரது கிட்னியை திருடியுள்ளார். இதனை அறிந்த இக்பாலின் உறவினர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக மருத்துவர் விபு கார்க் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு பெண் டாக்டர் தான் காரணம் என விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது. #JaneBarton
    லண்டன்:

    இங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69). இவர் அங்குள்ள காஸ்போர்ட் போர் நினைவு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார்.

    இவரது கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நர்சு போட்ட ஊசி மருந்துக்கு பின்னர் மரணம் அடைந்தார்.

    முன்னதாக உடல் வலி குறித்து தான் டாக்டரிடம் கூறவில்லை என்றும், ஆனால் உடல் வலி போக்கும் ஊசி மருந்தை செலுத்தியதாகவும் அந்த நோயாளி தனது புகாரில் கூறியிருந்தார்.

    அதை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமான வலி போக்கும் மருந்தை டாக்டர் ஜேன் பார்டன் பரிந்துரைத்து இருந்தது தெரிய வந்தது.

    நோயாளிகளுக்கு “டயாசி பாம்” என்ற மருந்துக்கு பதிலாக டாக்டர் பார்டன் பரிந்துரையின் பேரில் “டயாமார்பின்” என்ற மருந்தை நர்சுகள் அளவுக்கு அதிகமாக அளித்துள்ளனர். அது வி‌ஷமாக மாறி நோயாளிகளின் உயிரை பறித்துள்ளது.

    இந்த மருந்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்கள் சிக்காததால் 1998-ம் ஆண்டு விசாரணையை போலீசார் கை விட்டனர்.

    டாக்டராக செயல்பட பார்டனுக்கு தகுதி உள்ளதா? என 2001-ம் ஆண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொழில் முறையில் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அதையடுத்து 2007-ம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற்றார்.

    தற்போதைய விசாரணை குழு டாக்டர் ஜேன் பார்டன் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. #JaneBarton
    அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் ஈராக்கைச் சேர்ந்த தியீ அலீம் என்பவரது மார்பில் இருந்து 9 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி மருத்துவர்கள் அவருக்கு புதுவாழ்வு அளித்துள்ளனர். #doctorsmadelife
    சண்டிகர்:

    பல மாதங்களாக மூச்சு விடமுடியாமல் தவித்து வந்த ஈராக்கைச் சேர்ந்த தியீ அலீம் என்பவருக்கு ஃபோர்ட்டீஸ் நினைவு ஆரய்ச்சி மருத்துவமனையில் மார்பில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையில் அவருடைய மார்பில் இருந்து 9 கிலோ அளவிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர் உத்ஜித் திர் கூறுகையில், ‘தியீ அலீமின் மார்பில் நுரையீரலுக்கும் இதயத்துக்கும் இடையே இருந்த கட்டி அவரை மூச்சு விட விடாமல் செய்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு பலனளிக்கவில்லை. தியீ அலீம் ஃபோர்ட்டீஸ் மருத்துவமனையை அணுகும்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தார்.

    கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மார்பில் இருந்து இரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டிருந்த 9 கிலோ எடையுள்ள கட்டியை நீக்கினோம். இப்போது அவர் நல்ல முறையில் சுவாசித்து நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’  என தெரிவித்துள்ளார். #doctorsmadelife
    ×