search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்லம்"

    சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சபரிமலை சீசனை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    * சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06047), வரும் டிசம்பர் மாதம் 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 2, 7, 9, 14 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    * சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06049), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை வந்தடையும்.

    * தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06027) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2, 4, 7, 9, 16, 18, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    * கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06050), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    * கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06048), வரும் டிசம்பர் மாதம் 4, 11, 13, 18, 20, 27 மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 8, 10 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை வந்தடையும்.

    * கொல்லம்-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06028), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 5, 8, 10, 12, 22, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    ரெயில் வழித்தடத்தில் சரிந்த மணல், ராட்சத பாறாங்கல்லை சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதால் செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு ஓரிரு நாளில் ரெயில் சேவை இயக்கப்படும் என்று அதிகாரி கூறியுள்ளார்.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் இடையே அகல ரெயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த பாதையில் தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று கனமழை பெய்ததால் கடந்த 15-ந் தேதி இந்த தடத்திலுள்ள நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி, எம்செல் தென்மலை உள்ளிட்ட 8 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பகுதிகளில் கடினமான ராட்சத பாறைகள் ரெயில் தடத்தில் சரிந்து விழுந்தன. தென்மலை குகை முன்பு பெரிய பாறாங்கல் விழுந்தது.

    இதையடுத்து தென்னக ரெயில்வே சார்பில் இந்த பாதையில் ரெயில் சேவையை நிறுத்திவைத்தனர். தொடர்ந்து மண்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பணிகள் நிறைவு பெற்றன. இதைத்தொடர்ந்து செங்கோட்டை-புனலூர் தடத்தில் ரெயில் என்ஜினை இயக்கி ரெயில்வே அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர். நேற்று 2-ம் கட்டமாக தென்னக ரெயில்வே மதுரைகோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தலைமையில் இருப்பு பாதையில் ட்ராலி மூலம் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வில் இன்னும் ஓரிரு நாளில் இந்த தடத்தில் ரெயில் சேவை இயக்கப்படும் என தெரியவருகிறது.

    இந்த ரெயில் சேவையால் பெரும்பாலான வர்த்தக சேவை முற்றிலும் தடைப்பட்டது. தற்போது மீண்டும் ரெயில் சேவை தொடங்க உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கேரள மாநிலம் கொல்லம் அருகே காற்றில் பறந்த வந்த 500 ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம், ஜூன். 6-

    கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப் பள்ளி என்ற இடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த வழியாக ஏராளமான பொது மக்கள் இருசக்கர வாகனங் கள் மற்றும் பஸ்கள் மூலம் பயணம் செய்து கொண்டிருந் தனர்.

    அப்போது திடீரென்று அந்த பகுதியில் காற்றில் பேப்பர் துண்டுகள் பறந்து வந்தன. இவை சாலைகளில் விழுந்தன. அந்த வழியாக நடந்து சென்ற சிலர் அதை எடுத்து பார்த்தபோது, அவர் களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த பேப்பர் துண்டுகள் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாகும். அதுவும் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.

    இதைப்பார்த்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்கத் தொடங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங் களை ஆங்காங்கே நடுவழி யில் நிறுத்தி விட்டு ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. காற்றில் ரூபாய் நோட்டுக்கள் பறந்து வந்தது பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொது மக்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் முயற்சியில் ஈடுபட் டனர்.

    மேலும் ரூபாய் நோட்டுக் களை சேகரித்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி போலீசார் அவை கள்ள நோட்டுக்களாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவை நல்ல நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுக்களை எடுத் தவர்கள் அங்கிருந்து நைசாக நழுவிச்சென்று விட்டனர்.

    வாகனத்தில் யாராவது ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்றபோது கவனக்குறைவு காரணமாக அவை காற்றில் பறந்திருக்க லாம் என்று கருதப்படுகிறது. சாலையில் ரூபாய் நோட் டுக்கள் பறந்தது எப்படி? யார் ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநிலம் கொல்லம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால மனைவியை விட்டத்தில் தொங்க விட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மாவேலிக்கரை நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (38). இவரது மனைவி அம்புலி (36).

    அனில் குமாருக்கும் வேறு ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அம்புலிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு உருவானது.

    சம்பவத்தன்று வீட்டு வாசலில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அம்புலி தனது கணவரிடம் இளம் பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறி உள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அனில் குமார் மனைவியை அடித்து உதைத்தார். இதில் அம்புலி மயக்கம் அடைந்தார்.

    இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து விட்டு வழக்கமாக நடக்கும் சண்டை தான் என அமைதியாக இருந்து விட்டனர். இந்த நிலையில் அனில் குமார் மயங்கி கிடந்த மனைவியை வீட்டிற்குள் தரதரவென்று இழுத்து சென்றார்.

    படுக்கை அறைக்கு இழுத்து சென்ற அவர் மனைவியின் கழுத்தில் கயிற்றால் கட்டி விட்டத்தில் தொங்க விட்டார். இதில் அம்புலி கழுத்து இறுகியது.

    அம்புலியை கணவர் இழுத்து செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என நினைத்து அங்கு வந்தனர். அவர்கள் அம்புலி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி அம்புலி இறந்தார். இது குறித்து நூரநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. செங்கனூர் டி.எஸ்.பி. பினு, மாவேலிக்கரை இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். மனைவியை கொன்ற அனில் குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×