search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழைப்பிதழ்"

    பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்துக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அனுப்பிவரும் அழைப்பிதழ்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia
    மும்பை:

    இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக உள்ள ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி. இவருக்கும் பிரபல தொழிலதிபரின் மகனான ஆனந்த் பிரமல் என்பவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பத்திரிகை, வகைவகையான கழுத்து செயின்கள் என 4 பரிசு பெட்டகத்துடன் இந்த திருமணத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்கள் ஒவ்வொன்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    குறைந்தபட்சம் ஆயிரம் அழைப்பிதழ்கள் என்றாலே இதற்கான செலவுத்தொகை சுமார் 30 கோடி ரூபாய் என்ற நிலையில் இப்படி பல்லாயிரம் அழைப்பிதழ்கள் பிரபல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், மந்திரிகள் மற்றும் முன்னணி நடிகர்-நடிகையர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இந்த அழைப்பிதழின் மாதிரிகள் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாக பரவி, அடுத்தவேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாமல் தவிக்கும் பலகோடி மக்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

    இப்படி கோடிக்கணக்கான பணத்தை அழைப்பிதழுக்கே செலவிடும் முகேஷ் அம்பானி, தனது செல்ல மகளின் திருமணத்துக்கு எத்தனை நூறு கோடியையும் கரியாக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. #IshaAmbani #IshaAmbaniWeddingInvitation #SocialMedia

    இப்படி சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த ஆடம்பர அழைப்பிதழை வீடியோவில் காண..,


    முத்துப்பேட்டை அருகே மழை வேண்டி அழைப்பிதழ் அச்சடித்து மரங்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மரங்கள் பட்டுபோனதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு வள்ளிக்குளக்கரை பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே வேம்பு மற்றும் அரச மரங்கள் நடப்பட்டு வளர்த்து வந்தனர். இந்த வேம்பு-அரச மரத்துக்கு “திருக்கல்யாணம்” நடத்தினால் மழைபெய்யும் என்று கிராமமக்கள் கருதினர்.

    இதனையடுத்து மரங்களின் திருமணத்துக்கு போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்பிதழ் அச்சிட்டப்பட்டு வீடுவீடாக விநியோகிக்கப்பட்டது. வரும் 11-ம்தேதி காலை 9மணியிலிருந்து 10.30-க்குள் திருமணம் நடத்த இருந்த நிலையில் அந்த மரத்திலிருந்து சில நாட்களாக இலைகள் உதிர ஆரம்பித்தன. வெயில் தாக்கத்தால் இலைகள் உதிர்கின்றன. விரைவில் மரம் துளிர் விடுமென அப்பகுதியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலைகளும் உதிர்ந்த பிறகும் மரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி பட்டுப்போன மரத்திற்கு திருக்கல்யாணம் நடத்த முடியாது. அதனால் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்று தீர்மானித்தனர்.

    பட்டுப்போன வேம்பு-அரச மரங்களின் அடியில் ஆலோசனை கூட்டம் நடத்திய பக்தர்கள்.

    இதுகுறித்து திருமண ஏற்பாட்டாளர் முத்துசாமி, கிராம முக்கிய பிரமுகர்கள் சிங்கரவேல், அர்ச்சுனன், பக்கிரிசாமி, முருகேசன், சுப்பிரமணியன், வீரப்பாண்டியன், பூபாலன் ஆகியோர் கூறுகையில் சுமார் 58 ஆண்டுகள் பழமையானது. இந்த வேம்பு-அரச மரங்களுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். ஒருசேர 2 மரமும் பட்டுப்போய் விட்டன. இது எப்படி நடந்தது என்று புரியவில்லை. எனவே திருமணத்தை நிறுத்தி விட்டோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
    ×