search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திரம்"

    பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. #NewCaledonia #IndependenceReferendum
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் காலனியாக பிரெஞ்சு பசிபிக் பிரதேசமான நியூ கலிடோனியா உள்ளது. அங்கு பிரான்சிடம் இருந்து நியூ கலிடோனியா சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த நிலையில், நியூ கலிடோனியா, பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்த நியூ கலிடோனியாவில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கு தேவையான நிக்கல் திரளாக கிடைக்கிறது. பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்தப் பகுதியை மிக முக்கிய பகுதியாக பிரான்ஸ் அரசு கருதுகிறது.

    நியூ கலிடோனியா மக்களில் பெரும்பாலோர், தங்கள் பகுதி பிரான்சின் ஒரு பகுதியாக திகழ வேண்டும், சுதந்திரம் தேவையில்லை என்று கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே பிரிவினையாளர்கள் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. #NewCaledonia #IndependenceReferendum 
    நமது நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என திருநங்கை நீதிபதி ஜோயிதா மாண்டர் கூறியுள்ளார். #Transgender #JudgeJoyitaMondal
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் லோக்அதாலத் திருநங்கை நீதிபதி என்ற சிறப்புக்கு உரியவர், ஜோயிதா மாண்டர் மாஹி.

    அங்கு வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிற அவர் ஓரின சேர்க்கை, தண்டனைக்கு உரிய குற்றம் அல்ல என்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

    இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “நமது நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது” என கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “இப்போதுதான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்” என்றும் குறிப்பிட்டார். #Transgender #JudgeJoyitaMondal
    வளசரவாக்கத்தில், பிறந்து சிலமணி நேரமே ஆன நிலையில் மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை உயிருடன் மீட்ட பொதுமக்கள், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் சூட்டினர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர், 6-வது தெருவில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே மழைநீர் செல்ல சிறிய அளவிலான கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

    நேற்று காலை அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு வழக்கமாக பசும்பால் கொடுக்க வரும் பால்காரர் சுப்பையா என்பவர் வந்தார். அப்போது அந்த மழைநீர் கால்வாயை சுற்றி ஏராளமான பூனைகள் நின்று கொண்டிருப்பதை கண்டார்.

    மேலும் பச்சிளம் குழந்தையின் அழுகுரலும் கேட்டதால் சந்தேகம் அடைந்த அவர், பூனைகளை விரட்டி விட்டு பார்த்தபோது, மழைநீர் கால்வாயின் உள்ளே பச்சிளம் குழந்தை தனது இரண்டு கால்களை உதைத்தபடி உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே சுப்பையா, கூச்சலிட்டார். அவரது சத்தம்கேட்டு அந்த குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் கீதா என்ற பெண், தரையில் படுத்துக்கொண்டு மழைநீர் கால்வாய்க்குள் கையைவிட்டு இரண்டு கால்களையும் பிடித்து நைசாக குழந்தையை உயிருடன் வெளியே மீட்டெடுத்தார்.

    அதில், பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை என்பதும், அதன் தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் குழந்தையின் கழுத்தை சுற்றியபடி இருந்தது. கழுத்தில் சுற்றி இருந்த தொப்புள் கொடியை அகற்றி, ஒரு கிளிப் போட்டனர்.

    மழைநீர் கால்வாய்க்குள் கிடந்ததால் சேறும், சகதியுமாக இருந்த குழந்தையை அந்த பகுதி பெண்கள் சுடுநீரில் குளிப்பாட்டி சுத்தப்படுத்தி, புதிய துணி அணிவித்தனர். பசியால் குழந்தை தொடர்ந்து கதறி அழுதபடியே இருந்தது.

    அந்த பகுதியில் இருந்த குழந்தை பெற்ற பெண்கள், கருணை உள்ளத்தோடு அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கினார். அந்த தாய்ப்பால் முழுவதையும் சேகரித்து அந்த குழந்தைக்கு வழங்கி அதன் பசியை போக்கினர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார், அந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு போரூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தையின் உடல் நலன் கருதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்தனர். அந்த செய்தியை கேட்டு அந்த குழந்தையை கால்வாயில் இருந்து மீட்டெடுத்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டு உள்ளதால் அந்த குழந்தைக்கு ‘சுதந்திரம்’ என பெயர் சூட்டினார்கள். அந்த குழந்தை வீசப்பட்ட பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அங்கு வேன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், பச்சிளம் குழந்தையை மழைநீர் கால்வாயில் வீசி சென்ற நபரின் உருவம் அதில் பதிவாகவில்லை.

    நேற்று காலைதான் அந்த குழந்தையை அந்த மழைநீர் கால்வாயில் வீசி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால், மழைநீருடன் குழந்தை அடித்துச்செல்லப்பட்டு விடும் என்று வீசி உள்ளனர். மேலும் குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடியால் நெரித்ததற்கான தடயமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மழைநீர் கால்வாயில் அந்த குழந்தையை வீசியது யார்?, அந்த குழந்தையின் பெற்றோர் யார்?, தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் இவ்வாறு மழைநீர் கால்வாயில் வீசினார்களா? என்பது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து அந்த கால்வாயில் வலைகள் வைத்து அடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×