search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்டிபிஐ"

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Babrimasjid
    திருச்சி:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக மக்கள் வரிப்பணம் ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்கி மோடி அரசு வீணடித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது. இந்த சிலைக்கான முதலீட்டை கொண்டு ஏராளமான விவசாய மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். அத்துடன் 2 புதிய ஐ.ஐ.டி.க்கள், 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 5 புதிய ஐ.ஐ.எம். வளாகங்களை அமைத்திருக்க முடியும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட இருப்பதால் இத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதா? என்பதை கள ஆய்வு செய்து முடிவு செய்ய பொதுச்செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பது.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்ட வேண்டும், அங்கு சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அப்புறப்படுத்த வேண்டும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #Babrimasjid
    ×