search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • மதுரையில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளை யம் ஜம்புராபுரம் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ரேகா (வயது 37). இவர் இரவு கணவர் லெனினுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்கள் விளாங்குடி பகுதி யில் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் ரேகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த ரேகா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை கருப்பாயூரணி, மீனாட்சி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சசிரேகா (46). இவர் நேற்று இரவு மோட் டார் சைக்கிளில் கோமதி புரத்துக்கு சென்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்ம நபர்கள் சசிரேகா அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது பற்றி சசிரேகா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்பது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்,:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி உருவாக்க பட வேண்டும். அமைக்கப்படாத நிறுவனங்களில் உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு, நிரந்தர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    • 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணி புரியும் இடத்தில் பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக குழு அமைக்க வேண்டும்
    • சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதத்துக்காக ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் இடங்களான அனைத்து அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் (மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஜவுளிக்கடைகள்) தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணி புரியும் பட்சத்தில் அங்கு பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக உள்ளக குழு அமைக்க வேண்டும். இந்த குழுவானது 4 உறுப்பினர்களை கொண்டு இருக்க வேண்டும்.

    மொத்த உறுப்பினர்களில் பாதிபேர் பெண்களாகவும், இதன் அலுவல் காலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற்குரியதாகவும் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு குழு அமைக்க தவறினால் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதத்துக்காக ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும். உள்ளக குழு வானது பணிபுரியும் இடங் களில் பெண்களுக்கு எதி ரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசார ணைக்கு துணை புரிய வேண்டும்.

    பெண்களுக்கு தங்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்படும் நிலை யில் இந்த குழு மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். பணி புரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் மனுக்களை பெறுவதற்கு அந்தந்த நிறுவனங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட கலெக்டர் அலு வலக இணைப்பு கட்டி டத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவல கத்தை நேரிலோ அதன் தொலைபேசி எண்ணான 04652-278404 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 29-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற்றது.
    • 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 29-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்காக தற்காலிகமாக 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவிழா முடிந்து கடைக்காரர்கள் ஒவ்வொருவராக கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இன்று காலை பணிகள் நடைபெற்றது.

    அப்போது திடீரென 300 அடி நீளமுள்ள மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. முதியவர் உட்பட 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில் திருவிழா முடிவடைந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், பந்தல் ஒப்பந்ததாரர் முறையாக பந்தலை அமைக்கவில்லை என வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    • 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராஜப்பா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகா மினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் செல்வ வேல், கார்த்திகேயன், ராதிகா மைக்கேல், சிங்காரவேலு, மணிராம் கிருஷ்ணா, உஷா நந்தினி, அமுத வடிவு, ராஜ்மோகன், ரேகா ராஜமோகன், மணிமாறன், விக்ரம் குமார், பாரதி, ராஜசேகர், லியோ ஜோசப், சிஜூ ஜோசப், கௌதம், விஜயபாஸ்கர், சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் பல்வேறு வகையான பரிசோத னைகள் செய்யப்பட்டு ஆலோ சனைகள் வழங்கப்பட்டன.

    இதில் 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு "அனைவருக்கும் சுகாதாரம்" என்பதை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் பயனாளிகளுக்கு சுகாதார பெட்டகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சுகாதார நலன் ஆலோசகர் டாக்டர் சிங்காரவேலு வரவேற்றார்.

    இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லியோ ஜோசப் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இரத்த வங்கி ஆலோசகர் டாக்டர் ராதிகா மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் ஷேக்நாசர், யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ் , இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.



    மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு வீதியில் சாரதா நகரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அப்போது அம்மனுக்கு காப்பு கட்டு நிகழ்ச்சியும், பிறகு மாலை சக்தி கரகம் எடுத்தாலும் நடைபெற்றது.

    அன்றைய நாளில் தாய மங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், புதன்கிழமை மீனாட்சி அம்மன், வியாழக்கிழமை காமாட்சி அம்மன், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அம்மன் போன்ற அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நேற்று இரவு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தடையின்றி குடும்பத்தில் சகல சுப நிகழ்ச்சிகள் நடக்க வும், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பெண்கள் மற்றும் மாண விகள் கலந்து கொண்ட னர்.

    அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. வருகின்ற 10-ந் தேதி பூச்செரிதல் விழாவும், 11-ந் தேதி முளைப்பாரி எடுத்து சுற்றி வருதல், 12-ந் தேதி பால்குடம், பூக்குழி இறங்கு தலும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.

    • கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 2000 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு அம்மனுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக மும், லட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேகமும் இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பூச்சொரிதல் விழா அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை பால்குடம், காவடி, அக்னி சட்டி, இரவு முளைப்பாரி அம்மன் கோவில் வந்தடை கிறது. மறுநாள் (புதன்கிழமை) காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    முளைப்பாரி திருவிழா பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல் மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.

    • மேட்டுப்பாளையத்திலிருந்து ராட்சத குழாய் மூலம் அவினாசிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.

    அவினாசி :

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ராட்சத குழாய் மூலம் அவினாசிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அவினாசி புது பஸ் நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாகனங்களை கழுவுவது, பெண்கள் வீட்டில் இருந்து துணிகளை எடுத்து வந்து துவைப்பது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது.

    எனவே குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 448 குடியிருப்புகள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி சேவூர் ரோட்டில் உள்ள சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 448 குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய சாக்கடை வசதிகள் இல்லை என்று உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று காலை 9 மணியளவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்; குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களிடம் அவினாசி தாசில்தார், பேரூராட்சித் தலைவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இன்னும் 4 நாட்களில் முழுமையாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொகுதி எம். எல். ஏ, மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வர வேண்டும் அதுவரை போராட்டத்தை கை விட மாட்டம் என்று சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவினாசி -சேவூர் சாலைகளின் இரண்டு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கின்றன.

    • கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை பாடல்களாக பாடி கும்மியடித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 3 வது நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், காத்திருப்புப் போராட்டத்தில், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை பாடல்களாக பாடி கும்மியடித்தனர்.

    இது குறித்து அனுப்பட்டி பொதுமக்கள் கூறியதாவது: பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இரும்பு உருக்காலையின் உரிமத்தை ரத்து செய்து ஆலையை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.பல்வேறு போராட்டங்களில் தொட ர்ந்து ஈடுபடஉள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
    • இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்தது.
    • அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்து வருவதாகவும், இந்த நிலையில் குடிநீர் வழங்காத அருகில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    . இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கச்சி ராயபாளையம் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார் பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×