search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செல்லையாபுரத்தைச் சேர்ந்தவவர் ராமர். இவரது மகள் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மில்லில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி ராமர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் சத்யா. இவரது மகளுக்கு வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் மாயமாகி விட்டார். இதுபற்றி சத்யா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ைண தேடி வருகின்றனர்.

    விருதுநகர் நியூ ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாயமாகி விட்டார். இதுபற்றி கவிதா விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • கஞ்சி கலயம் சுமந்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    மேலூர்

    மேலூர் நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் 1008 கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் பனிமலர், மேலூர் மன்ற நிர்வாகிகள் ஜோதிலட்சுமி, செல்லம்மாள் மற்றும் விழாக்குழுவினர் இதில் பங்கேற்றனர். கஞ்சி கலையங்களை சுமந்த பெண்கள் நொண்டிகோவில்பட்டி மன்றத்தில் இருந்து ஊர்வமாக புறப்பட்டு அழகர் கோவில் ரோடு, பெரிய கடை வீதி, செக்கடி பஜார், பஸ் நிலையம், சேனல் ரோடு வழியாக மீண்டும் ஆதிபராசக்தி மன்றத்தை அடைந்தது.

    முன்னதாக 108 பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும் அக்னி சட்டி ஊர்வலமும் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, வழிபாடுகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • மதுரையில் 2 பெண்களிடம் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுரை

    மதுரை ராஜகம்பீரம், ராஜேஸ்வரி நகர், பாரதி கண்ணன் மனைவி சுஜித்ரா (வயது 32). இவர் சம்பவ த்தன்று மதியம் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார்.அப்போது அம்மாபட்டி அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம கும்பல், சுஜித்ராவிடம் 3.5 பவுன் தங்கச்நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.

    இது தொடர்பாக சுசித்ரா ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பசுமலை, தியாகராஜர் காலனியைச் சேர்ந்தவர் ராஜாமுகமது உசேன் (வயது 45). இவர் சமூகத்தன்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன், மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது திருமங்கலம்-மதுரை ரோட்டில், தோப்பூர் அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், ராஜா முஹம்மது மனைவியிடம் கைப்பையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டது. அந்த கைப்பையில் செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை இருந்தது. இது தொடர்பாக ராஜாமுகமதுஉசேன் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பெண்கள் திடீர் மரணம் அடைந்தனர்.
    • அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பாரைபட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அல்போன்சா (வயது 42). இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து வந்து இங்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் அல்ேபான்சாவுக்கு உடல்நிலை சரியில்லாததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த அவர் திடீரென இறந்தார். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (38). இவர் குடும்பத்துடன் 2 மாதங்களுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தார். சம்பவத்தன்று முத்துலட்சுமி திடீரென இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று எல்லோரையும் சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிறு கட்டுவார்கள்.
    • சகோதர, சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினம் ரக்‌ஷா பந்தன்.

    ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினமாக ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது ரக்‌ஷா பந்தன்.

    சொந்தத் தங்கை, அக்கா, அண்ணன், தம்பி என்று மட்டும் இல்லாமல் தனக்குப் பிடித்த நபர்களைக்கூட உடன் பிறந்தவர்களாக எண்ணி ராக்கி என்னும் வண்ணக் கயிறைக் கட்டி பரிசளித்து மகிழும் நாள்தான் ரக்‌ஷா பந்தன்.

    எல்லா வித்தியாசங்களையும் மறந்து எந்த வேறுபாடுமின்றி சொந்தங்களாக என்னைக் கொண்டாடும் இந்தத் திருநாள், இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள். இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கமும் நமக்கு உண்டு.

    புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார்.

    ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் 'ராக்கி' என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார்.

    பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா 'பாலிவா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, 'ராக்கி' கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

    • வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபா்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதில் களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.அரசு அல்லது அரசு சாரா திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடா்பான களப்பணிகளில் குறைந்தது ஒரு ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும். மூன்று வேளையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

    காவலா் பணிக்கு காவலா் அல்லது இரவுக்காவலராகப் பணிபுரிந்த அனுபவம் இருப்பதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த நபா்கள் தங்களுடைய விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் வருகிற 25 ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35,36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604. ேமலும் விவரங்களுக்கு 0421-2971168, 91500-57947 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாலமேடு வாரச்சந்தையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் சனிக்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.

    நேற்று முன்தினம் நடந்த வாரச்சந்தையில் வியாபாரி சீனியம்மாள் (வயது72) என்பவரிடம் ரூ.40-க்கு 2 பெண்கள் மக்காச்சோளம் வாங்கினர். அதற்கு ரூ.500 கொடுத்து மீதி பணத்தையும் பெற்றுக்கொண்டனர்.

    அதேபோல் மற்றொரு பெண் வியாபாரியிடம் காய்கறி வாங்கிவிட்டு ரூ.500 கொடுத்து சில்லறை வாங்க முயன்றபோது அது கள்ள நோட்டு என அறிந்த பெண் வியாபாரி இதுகுறித்து பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    விரைந்து வந்த போலீசார் 2 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நத்தம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரா (42), அலங்காநல்லூர் வலசை பகுதியை சேர்ந்த பத்மாவதி (43) என்பது தெரியவந்தது. இருவரும் சந்தை கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு மாற்ற முயன்றதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்துவத்தையும், அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை லயன் சங்கம், தஞ்சை டெம்பிள்சிட்டி லயன் சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்பால் வாரவிழா நிகழ்ச்சியை அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தியது .

    அம்மாபேட்டை லயன்ஸ் சங்க தலைவர் முரளி, தஞ்சை டெம்பிள்சிட்டி லயன்சங்க தலைவர் சிவா, மாவட்ட தலைவர்கள் சுப்ரமணியன், நைனா குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்து வத்தையும், அவசியத்தையும், விரிவாக எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் லயன்சங்க நிர்வாகிகள்பொன்மணி, மோகன்ராம், செயலாளர் வேல்மணி,பொருளாளர் ஜனார்த்தனன், சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன், செவிலியர் சித்ரா மற்றும் ஏராளமான தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநெறி மன்ற நிர்வாகி ராமநாதன் மற்றும் லயன் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சிங்கம்புணரி அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

    சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை நிலைக்க கோரியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • தொண்டி அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
    • இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் உலக அமைதிக்காகவும், கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டியும், இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நிறுவன தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது.

    சாராதா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுந்தரி விளக்கு பூஜையை தொடங்கிவைத்தார். கல்லூரி மாணவிகள் மந்திரங்கள் ஓதினர்.பா.ஜ.க.மாவட்ட தலைவர் கதிரவன், மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டி, இந்து ஜனநாயகப் பேரவை நிறுவன தலைவர் அண்ணாத்துரை, மணிகண்ட குருக்கள், முன்னிலை வகித்தனர்.

    பாகம்பிரியாள் அம்மன் கோவில் முன்பு நடந்த இந்த திருவிளக்கு வழிபாட்டில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இரணியல் போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெல்லியார்கோணம் தைபிலாவிளையை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி இருதயமேரி (வயது 77). இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மூதாட்டி இருதயமேரி தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுசீலாமேரி, செல்வமேரி ஆகிய 2 பேரும் மூதாட்டி வீட்டுக்குச் சென்று அவரை அவதூறாக பேசி கையில் வைத்திருந்த தென்னை ஓலை மற்றும் மட்டையால் மூதாட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் வலது கையில் ரத்தக் காயமடைந்த மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதயமேரி இரணியல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
    • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சகோதரி நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.

    ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இரண்டாவது தாயாக இருப்பவர் அவருடைய சகோதரிதான். சிறுவயதில் இருந்து எதிரும் புதிருமாக இருந்தாலும், நெருக்கம் இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவரே நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.

    இன்னும் சில நேரங்களில், சகோதரியுடனான பகிர்வு, பிணைப்பு என்பது தோழமை உணர்வையும் தாண்டி, 'அன்னை' என்ற நிலையை அடைந்துவிடும். இவ்வாறு அனைத்து உறவுகளின் சங்கமமாக விளங்கும் 'சகோதரி' எனும் உறவை மதித்து கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது.

    மூத்தவர், இளையவர் என சகோதரி எந்த வயதினராக இருந்தாலும், அவருடைய கவனம் எப்போதும் நம் நிழலாக செயல்படும். அவர் நம் வாழ்வின் முதல் விமர்சகராக விளங்குவார். நம்முடைய மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு, மறைமுகமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.

    தகுந்த நேரத்தில் வழிகாட்டியாக, பாதுகாப்பு அரணாக, அன்பின் அரவணைப்பாக, வாழ்வின் அனைத்து கட்டத்திலும் நம்முடன் பக்கபலமாக இருக்கும் சகோதரி என்ற உன்னத உறவை, மகிழ்ச்சியுடன் நம் வாழ்க்கைப் பயணத்தில் உடன் அழைத்துச் செல்வோம்.

    ×