search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமம்"

    கோவில் வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கல்யாண சுந்தரம் என்பவர் கோவில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், உரிம காலம் முடிந்த கடைகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கந்தசிஷ்டி கவச விழாவுக்கு என திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனவும், கோவில்களின் சொத்து விவரங்களை அந்தந்த கோவில்களில் விளம்பர பலகைபோல் வைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. #MaduraiHC
    உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமான 17 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த சிறுமிக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்திலேயே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த சிலர் தான் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தனர். ஆனால் தற்போது எறையூர் பகுதியை சேர்ந்த பலர் தங்களது வீடுகளில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அவ்வாறு உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனே அதனை எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
    பெங்களூரு:

    மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. 2013-ம் ஆண்டு மீண்டும் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி திறக்கப்பட்ட உடன், முதல் ‘பேட்ஜ்’-ல் மதுரையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரவிக்குமார் என்பவரின் மகளான காவியா (வயது 23) விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார்.

    கட்டணம் அதிகமாக இருந்ததால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காவியா முறையாக பயிற்சி பெறமுடியாத சூழல் இருந்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தார். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் காவியாவுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மூலம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தடையின்றி தொடருவதற்கான வாய்ப்பு கிட்டியது.

    மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தகுந்த கல்வி நிலையங்களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும் பயணிகள் விமானத்தை இயக்குவதற்காக தனியார் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3.72 லட்சம் உதவித்தொகையாக வருடத்துக்கு வழங்கப்படுகிறது.

    இதுதவிர மாதாந்திர செலவுகளுக்காக ரூ.2 ஆயிரத்து 220, நோட்டு, புத்தகங்கள் வாங்குவதற்காக வருடத்துக்கு ரூ.3 ஆயிரம், நவீன வசதி உடைய கம்ப்யூட்டர் மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.45 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்த காவியா ரூ.20 லட்சம் உதவி பெற்று, ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 வருடத்துக்கு பின்னர் (1997-ம் ஆண்டு கடைசியாக உரிமம் வழங்கப்பட்டது) பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பயிற்சிக்கு இடையே, விமான ரேடியோ தொலைபேசி ஆபரேட்டர் உரிமமும் காவியா பெற்றுள்ளார்.

    இதுகுறித்து அரசு விமான பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கமாண்டர் அமர்ஜித்சிங் டாங்கே கூறும்போது, விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி மீண்டும் திறந்த பின்னர் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் காவியாவுக்கு கிடைத்துள்ளது. இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறந்த மாணவராக அவர் திகழ்ந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.

    உரிமம் பெற்றது குறித்து விமானி காவியா கூறியதாவது:-

    விமானி ஆகவேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ ஆசை. மதுரையில் 12-ம் வகுப்பு படித்த பின்னர், அரசு விமான பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விரும்பினேன். ஆனால் அதற்கான கட்டணம் ரூ.25 லட்சம் ஆகும். இதனை என்னுடைய குடும்பத்தால், ஏற்பாடு செய்ய இயலாது. இருந்தபோதிலும் என்னுடைய பெற்றோர், கடுமையான கஷ்டத்துக்கு பின்னர் அங்கும், இங்குமாக ஓடி திரிந்து ரூ.6 லட்சம் கடன் வாங்கினார்கள்.

    இதையடுத்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினேன். ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் என்பதால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து 46 மணி நேரமே பயிற்சி மேற்கொள்ளும் நிலை இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய பயிற்சி முழுவதுமாக தடைபட்டது. இதையடுத்து மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தேன்.

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர் வகுப்பு கல்விக்காக உதவும் மத்திய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் உதவித்தொகை கிடைத்தது. இதன்மூலம் எனக்கு 200 மணி நேரம் விமான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மத்திய அரசு அளித்த உதவித்தொகை என்னுடைய கனவை மீட்டெடுத்தது.

    உதவித்தொகை கிடைத்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையை நான் பின்னோக்கி பார்த்தது இல்லை. விமானி ஆகவேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பணியில் சேருவதில் மிகுந்த ஆர்வம் இல்லை. விமான ஓட்டுனர் பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    முறையான உரிமம் இன்றி செயல்படும் 256 செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    சென்னை:

    ஆற்று மணலுக்கு மாற்றாக ‘எம்.சாண்ட்’ என்ற செயற்கை மணலை கட்டிடப்பணிக்கு பயன்படுத்த தமிழக அரசு, பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆற்று மணலை விட ‘எம்.சாண்ட்’ அதிக உறுதியுடன் இருப்பதால் புதிதாக அரசு கட்டிடங்கள் கட்ட இதனை முழுமையாக பயன்படுத்துவதுடன், பொதுமக்களும் தாங்கள் கட்டும் கட்டிடங்களுக்கும் செயற்கை மணலை அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தமிழக கட்டுமானப் பணிகளுக்கு தினமும் 35 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால் 12 ஆயிரத்து 500 முதல் 18 ஆயிரம் லோடு செயற்கை மணல் மட்டுமே கிடைக்கிறது. 7 ஆயிரம் லோடு ஆற்றுமணல் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    இதற்கிடையே ஆற்றுமணல் போன்று செயற்கை மணலில் உறுதித்தன்மை இருக்குமா? என்று மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், திரையரங்குகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

    இந்தநிலையில் செயற்கை மணல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர் குழு கூட்டம் சென்னை, எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன் (கட்டிடம்) தலைமை தாங்கினார். இதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் ‘எம்.சாண்ட்’ செயற்கை மணலை தயாரிக்கும் பணியில் 320 நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறைக்கு பட்டியல் வழங்கி இருந்தது. இவர்கள் முறையாக பொதுப்பணித்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த துறை அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    உரிமம் கோரும் செயற்கை மணல் தயாரிக்கும் குவாரிகள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும், இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் குவாரிக்கான ஒப்புதல், தரம் குறித்த சிறப்பு சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து நீர் மற்றும் காற்று மாசு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. பதிவு எண், வணிகவரி துறை சான்றிதழ், நிறுவன விவரங்கள் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியபடி நவீன எந்திரங்களை வைத்திருக்க வேண்டும்.

    இவை அனைத்தும் இருக்கிறதா? என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்து, செயற்கை மணலை மாதிரி எடுத்து ஐ.ஐ.டி. ஆய்வகங்களில் சோதனை நடத்தி நிபுணர் குழு ஒப்புதலுக்கு பின்னர் உரிமம் வழங்கப்படும்.

    தமிழகத்தில் செயற்கை மணல் தயாரிக்கும் பணியில் 320 நிறுவனங்கள் ஈடுபட்டாலும் 64 நிறுவனங்கள் உரிமம் கேட்டு விண்ணப்பித்ததில் 44 நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. மீதியுள்ள 256 நிறுவனங்கள் முறையாக பொதுப்பணி த்துறையில் உள்ள தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். இதற்காக 256 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தரமற்ற செயற்கை மணல் தயாரிக்கப்படுவது தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். இதுபோன்ற நிபந்தனைகளுடன் அனுமதி தர ஒப்புக்கொண்டு உள்ளது. போலிகளை கண்காணிக்க குழு அமைக்கவும் வல்லுனர் குழு அறிவுறுத்தி உள்ளது. 
    ×