search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறைகிறது.
    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் GLS மற்றும் AMG G63 மாடல்களுக்கு அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் இருந்து வந்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரு டாப் எண்ட் மாடல்களின் முன்பதிவு துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. இரு கார்களின் உற்பத்தி கூடுதலாக அதிகரிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் வாரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்கள் மட்டும் பிரத்யேகமாக கார்களை முன்பதிவு செய்ய முடியும். அதன் பின் மற்ற வாடிக்கையாளர்கள் புதிய பென்ஸ் கார்களை வாங்க முன்பதிவு செய்யலாம்.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் CBU மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 உள்ளிட்டவைகளுக்கு அதிக யூனிட்கள் ஒதுக்கீடு மற்றும் வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது.

     

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் டாப் எண்ட் மாடல்களாக AMG E53 கேப்ரியோலெட், மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63, மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS, மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மேபேக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS EV உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரிவில் 69 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. கடந்த ஆண்டு அதிக வளர்ச்சியை பதிவு செய்த இந்த பிரிவில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டும் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முழுக்க மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்யும் கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த பிரிவை சேர்ந்தவைகளாக இருக்கும்.

    ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப இந்த வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் ஆறில் இருந்து அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறையும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 மாடலுக்கான காத்திருப்பு காலம் 24 முதல் 36 மாதங்களில் இருந்து 12 முதல் 16 மாதங்களாக குறைந்து இருக்கிறது. இதே போன்று மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 காரின் ஒற்றை நிற வேரியணட்டுக்கான காத்திருப்பு காலம் எட்டு மாதங்களாகவும், டூயல் டோன் வேரியண்டிற்கு எட்டு முதல் பத்து மாதங்களாகவும் குறைந்து இருக்கிறது.

    "பல மாதங்களாக இந்த வாகனங்களுக்காக காத்திருக்கும் எங்களின் வாடிக்கையாளர்களுக்காக முன்பதிவை மீண்டும் பிரத்யேகமாக துவங்குகிறது. இது போன்ற டாப் எண்ட் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் குளோபல் தொகுப்பில் இருந்து புதிய மாடல்களை இந்த பிரிவில் தொடர்ந்து அறிமுகம் செய்வோம்." என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ சந்தோஷ் ஐயர் தெரிவித்தார்.

    • ரெனால்ட்-நிசான் நிறுவனங்கள் கூட்டணியில் பல்வேறு புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    • புதிய கார் மாடல்களில் ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன.

    ரெனால்ட்-நிசான் கூட்டணியின் கீழ் இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய கார்களில் நான்கு சி பிரிவு எஸ்யுவி-க்கள் மற்றும் இரண்டு ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் இரு நிறுவனங்களுக்கும் மூன்று மாடல்கள் உள்ளன.

    புதிய கார்கள் குளோபல் காமல் மாட்யுல் (CMF) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகின்றன. அனைத்து கார்களும் அதிகளவு உள்நாட்டு உபகரணங்களை கொண்டிருக்கும். மேலும் சென்னையில் உள்ள கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த குழுமம் சார்பில் புதிய திட்டத்திற்காக ரூ. 3 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

    இதுதவிர ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலை மறுசுழற்சி செய்யப்பட்ட எரிசக்தியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்த நிறுவனம் ரெனால்ட்-டிரைபர் சார்ந்த நிசான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தது.

    "தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பு உற்பத்தி மற்றும் டிசைன் பிரிவு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழ் நாடு அரசு மற்றும் கூட்டணிக்கு இது மிக முக்கியமான மற்றும் அதிக மதிப்பு கொண்ட உறவு ஆகும். இதன் மூலம் மாநிலத்தில் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஆட்டோமோடிவ் தலைநகராக தமிழ் நாடு தொடர்ந்து நீடிக்கும்."

    "ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோ உபகரணங்கள் மற்றும் டிசைன் உள்ளிட்டவைகளுக்கான முக்கிய பகுதியாக தமிழ் நாடு மாறும். தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டணியின் நவீனமயமாக்கல் தொடர்பான புதிய முதலீட்டின் கீழ் துவங்க இருக்கும் திட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏறப்டுத்தி இருக்கிறது. இது மேக் இன் தமிழ் நாடு மற்றும் மேக் இன் இந்தியா ஃபார் தி வொர்ல்டு திட்டத்தின் கீழ் வருகிறது." என தமிழ் நாடு அரசின் தொழிற்சாலைகள் பிரிவு கூடுதல் மூத்த ஆணையர் எஸ் கிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
    • புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா வாங்க விரும்புவோர் இதனை ரூ. 25 ஆயிரம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா கார் ஏழு மோனோடோன் மற்றும் இருவித டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இதுதவிர 1.5 MPi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 6MT மற்றும் இண்டெலிஜண்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரண்டு என்ஜின்களும் RDE விதிகளுக்கு உட்பட்டு E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    "இன்று, எங்களின் அடுத்த தலைமுறை பாரம்பரிய செடான்- முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலின் முன்பதிவு துவங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 16 ஆண்டுகளாக, சுமார் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிக மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை வெர்னா மாடல் பெற்று பாரம்பரிய அந்தஸ்துடன் உள்ளது."

    "முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் தலைசிறந்த செயல்திறன் மூலம் அலாதியான டிரைவிங் அனுபவத்தை வழங்க இருக்கிறது. இந்த பிரிவில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை இந்த செடான் மாடல் பூர்த்தி செய்யும்," என ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவன மூத்த நிர்வாக அதிகாரி தருக் கார்க் தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலின் விலை ரூ. 51 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் டெக்னாலஜி + S லைன் என அழைக்கப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் கூப் ரூஃப்லைன், ஐந்து ஸ்போக்குகள் கொண்ட 18 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை-கிலாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், எல்இடி டெயில் லைட்கள், S-லைன் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டர்போ புளூ, கிளேசியர் வைட், க்ரோனோஸ் கிரே, மிதோஸ் பிளாக் மற்றும் நவரா புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இண்டீரியர்கள் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், நான்கு வித லம்பர் சப்போர்ட், ஆடி டிரைவ் செலக்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ஸ்போக் வீல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆறு ஏர்பேக், TPMS, பார்கிங் ஏய்ட் பிளஸ் ரியர் வியூ கேமரா, ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆடிடோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுடன் ஐந்து ஆண்டுகளுக்கு RSA சர்வீஸ், 2+3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறுகிய காலக்கட்டத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    • ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க வினியோகம் செய்த கார்களின் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது.
    • ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய தகவலும் இதில் வெளியாகி இருக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 7 லட்சத்து 31 ஆயிரத்து 300-க்கும் அதிக வாகனங்களை வினியோகம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 16.7 சதவீதம் குறைவு ஆகும். 2021 ஆண்டில் மட்டும் ஸ்கோடா நிறுவனம் 8 லட்சத்து 78 ஆயிரத்து 200 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உற்பத்தி மற்றும் வினியோக பிரிவில் ஏற்பட்ட சிக்கல்களே வினியோகம் குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. செமிகண்டக்டர் சிப் குறைபாடு, உக்ரைன் போர் விவகாரம், வினியோக சிக்கல்கள் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற சூழல் போன்ற காலக்கட்டத்திலும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 127.7 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 51 ஆயிரத்து 900 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது. 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 22 ஆயிரத்து 800 யூனிட்களை மட்டுமே வினியோகம் செய்து இருந்தது. சர்வதேச சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா உள்ளது.

    உலகம் முழுக்க 1 லட்சத்து 41 ஆயிரம் ஆக்டேவியா யூனிட்களை ஸ்கோடா கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்தோடா கமிக் மற்றும் கோடியக் மாடல்கள் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் ஆதிகத்தை அதிகப்படுத்தும் முயற்சியாக ஸ்கோடா நிறுவனம் விரைவில் வியட்நாம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

    • நிசான் நிறுவன கார் மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சலுகை விவரங்கள் அறிவிப்பு.
    • இந்த மாதத்தில் மேக்னைட் மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் மற்றும் கிக்ஸ் எஸ்யுவி மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. பிப்ரவரி மாத சலுகையின் படி அதிகபட்சம் ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இரு எஸ்யுவி மாடல்களுக்கான சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், லாயல்டி போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

    நிசான் மேக்னைட் 2022 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 12 ஆயிரம் ரொக்கம் அல்லது அக்சஸரீக்களுக்கு தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஆன்லைன் முன்பதிவு போனஸ் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    2023 நிசான் மேக்னைட் மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 19 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆன்லைன் முன்பதிவுகளுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகள் ஒவ்வொரு பகுதி, மாடல், உற்பத்தி மாடல், டீலர்ஷிப் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப வேறுபடும். 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய டிசையர் டூர் S மாடல் பாதுகாப்பு அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டது.
    • புதிய டிசையர் டூர் S CNG மாடல் 32.12 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டிசையர் டூர் S மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய காம்பேக்ட் செடான் இந்திய விலை ரூ. 6 லட்சத்து 51 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 36 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எர்டிகா டூர் M மற்றும் வேகன் ஆர் டூர் H3 வரிசையில் புதிய டூர் S மாடல் இணைந்துள்ளது. புதிய மாருதி சுசுகி டிசையர் டூர் S மாடல் அரீனா மற்றும் வர்த்தக விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய டூர் S மாடல் மாருதி சுசுகி 3rd Gen டிசையர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆர்க்டிக் வைட், மிட்நைட் பிளாக் மற்றும் சில்கி சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய டூர் S மாடல் தோற்றத்தில் தற்போதைய டிசையர் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்டீல் வீல்கள், பிளாக் டோர் ஹேண்டில்கள், மிரர் கேப்கள், டெயில்கேட் மீது "Tour S" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. உபகரணங்களை பொருத்தவரை டூர் S மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், மேனுவல் ஏசி மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் டோர் லாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பாதுகாப்பிற்கு எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டூயல் ஏர்பேக், ISOFIX சீட் ஆன்கரேஜ்கள் உள்ளன. புதிய டிசையர் டூர் S மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் பெட்ரோல் மோடில் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    CNG மோடில் இந்த என்ஜின் 77 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மோடில் புதிய டிசையர் டூர் S மாடல் லிட்டருக்கு 23.15 கிலோமீட்டரும், CNG மோடில் இந்த கார் 32.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. இது தற்போதைய மாடலை விட 21 சதவீதம் அதிக மைலேஜ் வழங்குகிறது.

    • ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் விலை ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெஷல் எடிஷன் ஜீப் மெரிடியன் மாடல் லிமிடெட் 4x2 மேனுவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிளப் எடிஷன் மெரிடியன் எஸ்யுவி விலை அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் குறைவு ஆகும். கிளப் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. லிமிடெட் வேரியண்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் புதிய கிளப் எடிஷன் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி டூயல்-டோன் பெயிண்ட், சைடு-ரெயில்-மவுண்ட் செய்யப்பட்ட ரூஃப் ரேக் உள்ளிட்டவை கிளப் எடிஷன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்-பீஸ் சைடு ஸ்டெப், காண்டிராஸ்ட் பிளாக் நிற டீகல்கள், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர காரின் கேபின் பகுதியில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் மெரிடியன் மாடலின் கேபின் பகுதியில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆல்பைன் ஸ்டீரியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மெரிடியன் கிளப் எடிஷனில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

    புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிளப் எடிஷன் கார் அதன் பேஸ் வேரியண்டை விட குறைந்த விலை கொண்டிருக்கிறது.
    • கிளப் எடிஷன் காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எஸ்யுவி காம்பஸ் மாடலின் புதிய கிளப் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் மெரிடியன் காரின் கிளப் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு எஸ்யுவி மாடல்களும் அதன் எண்ட்ரி லெவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    இவை குறைந்த எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காம்பஸ் ஸ்போர்ட் டீசல் மேனுவல் வேரியண்டை விட ரூ. 10 ஆயிரம் விலை குறைவு ஆகும். எனினும், இதன் என்ஜின் அம்சங்கள் மற்றும் டியூனிங்கில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    காஸ்மடிக் மாற்றங்களை பொருத்தவரை டூயல் டோன் ரூஃப், பொனெட்டில் புதிய கிராஃபிக், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ரிஃப்லெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, பார்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் உள்ள அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளில் சுந்தரம் பால் வியாபாரம் செய்து வந்தார்
    • அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் திருவம்பலபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60), பால் வியாபாரி.

    இவர் அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளில் பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு புன்னார்குளம் பகுதியில் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரம் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுந்தரம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமான அங்கு திரண்டு இருந்தனர்.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மிகவும் சக்திவாய்ந்த M3 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது M3 காம்படிஷன் மாடலை விட 40ஹெச்பி அதிக திறன் கொண்டுள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த M3 காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் DTM ரேஸ் கார் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரில் விசேஷ சேசிஸ் மாட்கள் மற்றும் லிமிடெட் ப்ரோடக்ஷன் வேரியண்ட் ஆகும்.

    M3 CSL போன்றே புதிய M3 CS மாடலில் உள்ள S58 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஸ்டிரெயிட்-சிக்ஸ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இது M3 காம்படிஷன் மாடலை விட 40 ஹெச்பி அதிகம் ஆகும். இதே என்ஜின் M4 GT3 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், ரேஸ் காரில் ஏராள மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாடல்களில் ரிகிட் கிரான்க்-கேஸ், ஐயன்-கோட் செய்யப்பட்ட சிலிண்டர் போர்கள், ஃபோர்ஜ் செய்யப்பட்ட கிரான்க்ஷாஃப்ட், 3டி ப்ரிண்ட் செய்யப்பட்ட ஹெட்-கோர், மேம்பட்ட கூலண்ட் டக்ட்கள் மற்றும் விசேஷ ஆயில் சப்ளை சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும். இதன் காரணமாக பிஎம்டபிள்யூ M3 CS மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள என்ஜின் அதிகபட்சமாக 640 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய M3 CS மாடல் RWD ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 302 கிலோமீட்டரில் மின்முறையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. விசேஷ என்ஜின் மவுண்டிங் காரணமாக ஸ்ப்ரிங் ரேட் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை 19 இன்ச் முன்புறமும், பின்புறம் 20 இன்ச் அளவு கொண்ட கார்பன் செராமிக் யூனிட்கள் ஆகும்.

    ஃபோர்ஜ் செய்யப்பட்ட M-ஸ்பெக் அலாய் வீல்கள் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் 4S டிராக்-ரெடி ரப்பரில் ராப் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்பன்-ஃபைபர்-ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ M3 CS மொத்த எடை 1855 கிலோ ஆகும். இந்த கார் மொத்தத்தில் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், மார்ச் மாத வாக்கில் இதன் உற்பத்தி துவங்கி, அதன் பின் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வெர்னா மாடல் பெட்ரோல் என்ஜின், ADAS தொழில்நுட்பம், டூயல் ஸ்கிரீன் செட்டப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலின் உற்பத்தி பணிகள் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் பெரும்பாலான யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் வெர்னா யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1600 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை பொருத்தவரை ஹூண்டாய் நிறுவனம் ஆண்டிற்கு 70 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இவற்றில் பெரும்பாலான யூனிட்கள் ஏற்றுமதிக்காகவே பயன்படுத்தப்படும். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக உதிரிபாகங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் வெர்னா மாடல் உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்தியது. தற்போதைய வெர்னா மாடல் ரஷ்ய ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    எனினும், அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் உற்பத்தியை இந்திய ஆலைகளுக்கு மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு புதிய தலைமுறை வெர்னா மாடல் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

    ×