search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத பயணிகள் வாகன விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அசத்தல் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு வாகன விற்பனையில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் 72 ஆயிர்து 997 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனையான 66 ஆயிரத்து 307 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

    உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதத்தில் மட்டும் 40 ஆயிரத்து 043 யூனிட்கள் ஆகும். 2021 டிசம்பரில் இது 35 ஆயிரத்து 299 என இருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு 13.4 சதவீதம் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. கடந்த மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 868 ஆகும். இது 2021 டிசம்பரில் விற்பனையான 2 ஆயிரத்து 355 யூனிட்களை விட 64.2 சதவீதம் அதிகம் ஆகும்.

    "2022 ஆண்டு டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை அமோகமாக இருந்துள்ளது. சந்தை வளர்ச்சியை கடந்து, ஐந்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 798 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிடடி லிமிடெட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    "ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் புதுமை மிக்க திட்டங்கள் மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் பிரபலத்தன்மை காரணமாக எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். அடுத்த காலாண்டிலும் பயணிகள் வாகன பிரிவு கணிசமான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கிறோம். வினியோக பிரிவு சார்ந்த சிக்கல் தொடர்பாக சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை உற்று நோக்கி வருகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மீண்டும் டஸ்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • டஸ்டர் மட்டுமின்றி முற்றிலும் புதிய 7 சீட்டர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் ரெனால்ட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் மாடலை 2024-25 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் புது கார் வெளியீடுகளில் ரெனால்ட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது க்விட், டிரைபர், கிக்ஸ் மற்றும் கைகர் போன்ற மாடல்களை ரெனால்ட் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    புதிய முதலீட்டின் மூலம் ரெனால்ட் நிறுவனம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு கொண்டு வரும் என தெரிகிறது. முற்றிலும் புது டஸ்டர் மட்டுமின்றி ரெனால்ட் நிறுவனம் தனது பிக்ஸ்டர் கான்செப்ட்-ஐ தழுவி 7 சீட்டர் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆர்கிடெக்ச்சர் கொண்டு ரெனால்ட் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் டஸ்டர் மாடல் ரெனால்ட் நிறுவனத்திற்கு பிரீமியம் பிராண்டு பெயரை பெற்றுத் தந்தது. பின் இதே நிலையை தக்க வைத்துக் கொள்ளும் பணியை நிசான் டெரானோ எடுத்துக் கொண்டது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகமான முதல் மாடல்களில் ஒன்றாக இவை இருந்தன. இந்த முறை புதிய தலைமுறை டஸ்டர் மாடல் கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் என ஏராள கார்களின் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

    CMF-B ஆர்கிடெக்ச்சர் இந்திய சந்தை மற்றும் வளரும் நாடுகளுக்காக மாற்றப்படும். இதற்கான உற்பத்தி பணிகள் தமிழ் நாட்டில் உள்ள ஆலையில் நடைபெறும். புதிய டஸ்டர் மாடல் பவர்டிரெயின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், தற்போதைய குறைந்த விலை கார்களில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின், இதே என்ஜினின் டர்போ வெர்ஷன் வழங்கப்படுகிறது.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புது எஸ்யுவி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
    • புது ஹோண்டா கார் பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய எஸ்யுவி மாடல் 2023 ஏப்ரல் மாத வாக்கில் பெட்ரோல் என்ஜின் கொண்ட சிட்டி (அதன் ஹைப்ரிட் வெர்ஷன்) மற்றும் அமேஸ் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வைத்திருக்கும். ஜாஸ் மற்றும் WR-V, 4-th Gen சிட்டி, டீசல் என்ஜின் கொண்ட சிட்டி மற்றும் அமேஸ் போன்ற மாடல்களை நிறுத்தப்பட்டு விடும்.

    2023 மத்தியில் அறிமுகமாக இருக்கும் புது எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இதன் விற்பனை 2023 பண்டிகை கால வாக்கில் துவங்கலாம்.

    புதிய ஹோண்டா மிட் சைஸ் எஸ்யுவி அளவில் 4.2 முதல் 4.3 மீட்டர் நீளம் கொண்டிருக்கும். இது அமேஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த மாடல் சோதனை செய்யப்படும் படங்கள் எதுவும் இணையத்தில் இதுவரை வெளியாகவில்லை.

    இந்த காரின் முகப்பு பகுதியில் பெரிய, ஹெக்சகோனல் கிரில், ராப்-அரவுண்ட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் என்பதால், இதில் ஏராளமான க்ரோம் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

    • நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார்.
    • இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. முஸ்லிம்களின் முக்கிய வழிபாட்டு தளமாக கருதப்படும் நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லிம்கள் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த சேக்நூர்தீன் (வயது 34) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று கந்தூரி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று இரவு நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் எடையூர் அடுத்த பின்னத்தூரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளிவந்தது. உடனே காரை நிறுத்தி விட்டு அனைவரும் வெளியேறினர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட அனைவரும் எந்தவித தீக்காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்யுவி-யின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 2023 ஹேரியர் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    2023 டாடா ஹேரியர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புது ஹேரியர் மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் புதிய டாடா ஹேரியர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    தற்போது டெஸ்டிங் செய்யப்படும் டாடா ஹேரியர் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. அந்த வகையில், புது கார் முழுமையான ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு மாற்றாக சிறு அப்டேட்டாகவே இருக்கும். ஹேரியர் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

    2023 டாடா ஹேரியர் மாடலில் புது நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, இண்டீரியர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், புது மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படும். புதிய ஹேரியர் மாடலில் 360 டிகிரி கேமரா, அளவில் பெரிய, டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதிநவீன யுஐ வழங்கப்படலாம்.

    இவை தவிர புதிய ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் ADAS தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உண்மையாக்கும் வகையில், டெஸ்டிங் செய்யப்படும் கார்களின் பம்ப்பர் மற்றும் விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்டவைகளில் ரேடார் பேனல்கள் இடம்பெற்று இருந்தது. புதிய காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    அந்த வகையில், புது காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின், 170 பிஎஸ் பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த காரில் உள்ள என்ஜின் புதிய பிஎஸ்6 2.0 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கும்.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
    • புது லிமிடெட் எடிஷன் மாடலின் என்ஜின் மற்றும் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய எஸ் பிரெஸ்ஸோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் எஸ் பிரெஸ்ஸோ Xtra என அழைக்கப்படுகிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலின் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    வெளிப்புறம் புதிய எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் முன்புற ஸ்கிட் பிலேட், டோர் கிலாடிங், முன்புறம் அப்பர் கிரில், வீல் ஆர்ச் கிலாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் வழக்கமான எஸ் பிரெஸ்ஸோ மாடல் கிடைக்கும் அனைத்து நிறங்களிலும் கிடைக்கும் என தெரிகிறது. உள்புறம் ஆல் பிளாக் இண்டீரியர் தீம் செய்யப்பட்டு, புதிய இருக்கை கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் டோர் பேட், ஏசி வெண்ட், செண்டர் கன்சோல் மற்றும் புதிய கால் மிதி உள்ளிட்டவைகளில் காண்டிராஸ்ட் ரெட் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட K10C பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புது வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • முன்னதாக சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை கார் C3 காம்பேக்ட் ஹேச்பேக் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C5 ஏர்கிராஸ் பிரீமியம் எஸ்யுவி மாடல் மூலம் 2021 வாக்கில் இந்திய சந்தையில் களமிறங்கியது. பின் இந்த ஆண்டு எண்ட்ரி லெவல் காம்பேக்ட் ஹேச்பேக் பிரிவுக்கு ஏற்ற வகையில் C3 மாடலை அறிமுகம் செய்தது. CMP பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் சிட்ரோயன் C3 அடுத்த ஆண்டு துவக்கத்தில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    2023 ஜனவரி மாத வாக்கில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விலை அடிப்படையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV காருக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து சிட்ரோயன் நிறுவனம் தனது C3 மாடலின் மூன்று ரோ கொண்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ், C3 ஸ்போர்ட் டூரர் அல்லது C3 பிளஸ் போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய சிட்ரோயன் கார் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் 7 சீட்டர் C3 கார் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற காரை வாங்க நினைப்போரை குறி வைத்து உருவாக்கப்படுகிறது. இது மாருதி சுசுகி எர்டிகா மற்றும் கியா கரென்ஸ் போன்ற மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய 7 சீட்டர் சிட்ரோயன் C3 மாடலின் டிசைன் மற்றும் இண்டீரியர் அம்சங்கள் C3 ரெகுலர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக சிட்ரோயன் C3 காரின் 7 சீட்டர் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புதிய காரில் ஒரே மாதிரியான கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த கார் அதன் ஹேச்பேக் வெர்ஷனை விட சற்றே நீளமாக இருக்கும் என்றும் இதன் பின்புற ஒவர்ஹேங் காரினுள் அதிக பயனர்களுக்கு ஏற்ற இடவசதியை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் 2023 i20N லைன் கார் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • ஹூண்டாய் நிறுவனம் தற்போது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் CNG வசதியை வழங்கி வருகிறது.

    தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் CNG ஆப்ஷனை வழங்கி வருகிறது. எனினும், மாருதி சுசுகி அளவுக்கு அதிக கார்களில் CNG வசதியை ஹூண்டாய் வழங்கவில்லை. 2023 ஏப்ரல் மாதம் முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

    புது விதிகளின் படி பெரும்பாலான 2.0 லிட்டருக்கும் குறைந்த திறன் கொண்ட என்ஜின்களில் மாற்றம் செய்ய வேண்டும். புதிய புகை விதிகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படவில்லை எனில், அவற்றை கார்களில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இவ்வாறு மாற்றம் செய்யப்படாத 17 வாகனங்கள் விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் i20 N லைன் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஸ்பை வீடியோவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூண்டாய் i20 N லைன் மாடலில் - On Test By ARAI எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சோதனை செய்யப்படும் கார் ஒன்று CNG வேரியண்ட் ஆகவோ அல்லது புது விதிகளுக்கு பொருந்தும் மாற்றங்களுடனோ சோதனை செய்யப்படலாம்.

    தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், CNG தொழில்நுட்பம் பெருமளவு வரவேற்பை பெற துவங்கி இருக்கிறது. எண்ட்ரி-லெவல் கார்களில் துவங்கி பிரீமியம் ஹேச்பேக், பிரீமியம் எம்பிவி மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களிலும் CNG ஆப்ஷனாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பிரீமியம் ஹேச்பேக் பிரிவில் பலேனோ மற்றும் கிளான்சா மாடல்களில் இந்த ஆப்ஷ் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20 போன்ற கார்களும் இதே வழியை பின்பற்றும் என தெரிகிறது. ஹூண்டாய் i20 N லைன் மாடல் விசேஷ உபகரணங்களுடன் சோதனை செய்யப்படுகிறது. இதை அடுத்து இந்த கார் டர்போ என்ஜின் அல்லாத போட்டி நிறுவன கார்களுக்கு போட்டியாக களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்து இருக்கலாம் என தெரிகிறது.

    Photo Courtesy: Cyrus Dhabhar

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெக்டார் காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய உற்பத்தியில் ஒரு லட்சமாவது யூனிட் எனும் மைல்கல்லை கடந்தது.

    பிரிடிஷ் மோட்டார் பிராண்டான் எம்ஜி மோட்டார்ஸ் 2023 ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் ஒரு லட்சமாவது காரை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஒரு லட்சமாவது காராக ஹெக்டார் மாடல் வெளியிடப்பட்டது.

    புதிய ஹெக்டார் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற ப்ரோஃபைல், பின்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புது ஹெக்டார் மாடலில் அகலமான, பிரமாண்ட முன்புற கிரில், அதிக ஆங்குலர் சரவுண்ட்கள், டார்க் க்ரோம் ஃபினிஷ், மற்றும் இன்சர்ட்கள் வழங்கப்படலாம். இந்த காரில் ஸ்ப்லிட் ரக டேடைம் ரன்னிங் லைட்கள், பின்புறம் ஃபௌக்ஸ் எக்சாஸ்ட் டிப்கள், டெயில் லைட்களில் எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் 18 இன்ச் அலாய் வீல்கள் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    • லெக்சஸ் நிறுவனத்தின் புது RX மாடல் அந்நிறுவனத்தின் GA-K பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய லெக்சஸ் RX மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய RX மாடலுக்கான டீசரை மீண்டும் வெளியிட்டுள்ளது. புதிய லெக்சஸ் RX மாடல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐந்தாம் தலைமுறை RX மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகமானது. புது டீசரில் இந்த காரின் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் டிசைன் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய லெக்சஸ் RX மாடலின் எடை 90 கிலோ வரை குறைந்து இருக்கிறது. காரின் முன்புறம் லெக்சஸ் பாரம்பரியம் மிக்க ஸ்பிண்டில் கிரில், ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் டெயில் லைட்களும் மேம்படுத்தப்பட்டு முற்றிலும் பிளாக் எலிமெண்ட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் புது அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2023 லெக்சஸ் RX மாடலின் உள்புறம் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ADAS, டிஜிட்டல் ரியர்வியூ மிரர், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் புது லெக்சஸ் RX மாடல் ஏராளமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இந்திய சந்தையில் புது லெக்சஸ் RX மாடல் 2.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 245 ஹெச்பி பவர், 324 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டது.
    • இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஐந்து வேரியண்ட், ஏழு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 28 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய TNGA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் G, GX, VX, ZX மற்றும் ZX (O) என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இத்துடன் சூப்பர் வைட், பிலாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், அட்டிட்டியூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக், பிலாகிஷ் அகெஹா கிலாஸ் ஃபிளேக் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், TNGA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்து"ன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இறுக்கிறது. ஹைகிராஸ் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படவில்லை.

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி, 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எக்ஸ்டெண்டட் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இதனுடன் வரும் பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்தியாவில் ஸ்கார்பியோ N காரின் வேரியண்ட்களில் தொடர்ந்து ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N காரின் புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி தற்போது ஸ்கார்பியோ N 30 வேரியணட்களில் கிடைக்கிறது. ஸ்கார்பியோ N காரின் 30 வேரியண்ட்களில் 19 வேரியண்ட்கள் டீசல் என்ஜினும், மீதமுள்ளவை பெட்ரோல் என்ஜினும் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், டீசல் என்ஜின் கொண்ட மாடல்களில் மட்டுமே ஆப்ஷனல் 4எக்ஸ்ப்ளோர் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புது வேரியண்ட்கள், ஸ்கார்பியோ N - Z2 G MT E, Z2 D MT E, Z4 G MT E, Z4 D MT E, மற்றும் Z4 D MT 4WD E என அழைக்கப்படுகின்றன. புது வேரியண்ட்களை அடுத்து 4 வீல் டிரைவ் வெர்ஷன் தற்போது ரூ. 16 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புது வேரியண்ட்களின் விலை விவரங்கள்:

    Z2 MT E 7s பெட்ரோல் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம்

    Z4 MT E 7s பெட்ரோல் ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம்

    Z2 MT E 7s டீசல் ரூ. 12 லட்சத்து 99 ஆயிரம்

    Z4 MT E 7s டீசல் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம்

    Z4 MT 4WD E 7s ரூ. 16 லட்சத்து 04 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 D MT E வேரியண்ட் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டில்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் ஸ்டீரிங், 2-ம் அடுக்கு இருக்கைகளில் ஏசி வெண்ட்கள், பவர் விண்டோ, யுஎஸ்பி போர்ட்கள், எல்இடி இண்டிகேட்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 வேரியண்ட்களில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பவர்டிரெயின் ஆப்ஷன்களை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்கார்பியோ N டீசல் வேரியண்ட்களில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. டீசல் என்ஜின் கொண்ட பேஸ் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    ×