search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 வாலிபர்கள்
    • கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார் வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில்இருந்த 5 வாலிபர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றிய சி.சி.டி.வி.காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

    கன்னியாகுமரிஅருகே உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதில்இருந்த 5 வாலிபர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பிய போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதியது.விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த அந்த 5 வாலிபர்கள் மது போதையில் இருந்ததால் போலீசாருக்கு பயந்து காரை அங்கேயே விட்டுச் சென்று உள்ளனர்.

    இந்த விபத்துகுறித்து தகவல்அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியின்அருகில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் இருந்தகண்காணிப்பு கேமராவில்விபத்துநடந்தது தெளிவாக பதிவாகி உள்ள து. அந்த சி.சி.டி.வி.காட்சி கள்சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • லெக்சஸ் நிறுவனத்தின் புதிய LX மாடலின் இந்திய வினியோகம் வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது.
    • புது லெக்சஸ் காரில் ADAS அம்சங்கள், நான்கு வித இண்டீரியர் தீம்களை ஆப்ஷனாக கொண்டிருக்கிறது.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய லெக்சஸ் LX மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லெக்சஸ் LX மாடலின் விலை ரூ. 2 கோடியே 82 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லெக்சஸ் ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி-இன் மேம்பட்ட வெர்ஷன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் வினியோகம் வரும் மாதங்களில் துவங்குகிறது.

    புதிய லெக்சஸ் LX மாடலின் வெளிப்புறம் "Dignified Sophistication" கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஃபிரேம்லெஸ் ஸ்பிண்டில் வடிவ முன்புற கிரில் மற்றும் கிடைமட்ட ஸ்லாட்கள் உள்ளன. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், நான்கு ப்ரோஜெக்டர் எல்இடி-க்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், கின்க்டு விண்டோ லைன், 22 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    காரின் கேபின் ரிவேம்ப் செய்யப்பட்டு டூயல் ஸ்கிரீன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 12.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கைகள், ரியர் எண்டர்டெயின்மெண்ட் ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பாதுகாப்பிற்கு லெக்சஸ் LX மாடலில் ADAS அம்சங்களான ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், முன்புறம் மற்றும் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் ரியர் வியூ மிரர், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 3.3 லிட்டர் வி6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 304 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • லெக்சஸ் நிறுவனத்தின் புதிய RX மாடல் இரண்டு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் ஐந்தாம் தலைமுறை RX மாடல் 2022 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய RX எஸ்யுவி மாடலை 2023 ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புது காரின் டீசரை லெக்சஸ் இந்தியா தற்போது வெளியிட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் 2022 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட லெக்சஸ் RX மாடல் இந்தியா வருகிறது. புதிய RX மாடல் ஆட்டோ எக்ஸ்போ வரும் முதல் லெக்சஸ் வாகனம் ஆகும்.

    புதிய எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என லெக்சஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. மேலும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்ட லெக்சஸ் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய RX பெற இருக்கிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய RX மாடலில் உள்ள என்ஜின் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜ் வழங்கும் என லெக்சஸ் அறிவித்து இருக்கிறது.

    லெக்சஸ் RX மாடலின் புதிய அளவீடுகள் கூப் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், மெல்லிய டிசைன் மற்றும் காரை சுற்றி பிஸ்போக் ஸ்டைலிங் வழங்கப்படுகிறது. உள்புறம் 14 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிளஅ கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    புதிய லெக்சஸ் RX மாடல் 350h, 450h+ மற்றும் 500h என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் 450h+ மாடல் மட்டும் ஸ்டிராங் ஹைப்ரிட் வசதி கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் 350h மாடல் 2.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 245 ஹெச்பி பவர், 324 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி மாடலாக லேண்ட் குரூயிசர் இருந்து வந்தது.
    • புது லேணட் குரூயிசர் மாடலை வாங்க உலகளவில் நீண்ட நெடிய காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் புதிய லேண்ட் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லேண்ட் குரூயிசர் மாடலின் விலை ரூ. 2 கோடியே 1 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு 2022 ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கிய நிலையில், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி வெளியீடு அதிகாரப்பூர்வமாக துவங்கி, அதன் பின் வினியோகமும் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஒற்றை, ஃபுல்லி லோடெட் வேரியண்டில் கிடைக்கும் லேண்ட் குரூயிசர் மாடலில் 3.3 லிட்டர் V6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 305 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் புதிய லேண்ட் குரூயிசர் மாடலின் முன்புறம் ட்வீக் செய்யப்பட்ட பெரிய முன்புற கிரில், க்ரோம் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரின் ஹெட்லேம்ப்கள் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதோடு, இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 20 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறத்தில் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரிடிசைன் செய்யப்பட்ட செண்டர் கன்சோல், டூயல் டோன் இண்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் மாடல் CBU முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த மாடல் லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய கார் மாடல்கள் மும்பையில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகின்றன.
    • முன்னதாக புது பிஎம்டபிள்யூ கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று இரண்டாவது ஜாய்டவுன் ஆஃப் தி சீசன் நிகழ்வை நடத்த இருக்கிறது. கடந்த ஆண்டு இதே நிகழ்வு டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை ஜாய்டவுன் ஆஃப் தி சீசன் நிகழ்வில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேம்பட்ட புது செடான் மாடல் முற்றிலும் புது டிசைன், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், பெரிய கிட்னி கிரில், புதிய முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள், அலாய் வீல்கள் மற்றும் ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.

    2023 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடலில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், இருவித பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின்கள் வழங்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ i7 மாடலில் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களின் உள்புறத்தில் 14.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், டோர் ஹேண்டில்களின் அருகில் 5.5 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் புதிய ஃபிலாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், 31 இன்ச் அளவில் 8K ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட தியேட்டர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    • போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து
    • பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.

    இதைதொடர்ந்து களியக்கா விளை சப்-இன்ஸ்பெக் டர் முத்துக்கும ரன் தலைமை யில்போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டியும் கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது. தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று அதங் கோடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டிவந்த டிரைவர் தப்பி யோடிவிட்டார்.

    மேலும் காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    மேலும் பறிமுதல் செய்த காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காரில் இருந்து பறிமுதல் செய்த அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்ப டைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது X சீரிஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய X சீரிஸ் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை பட்ஜெட் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய X1 மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க விற்பனை மையங்களில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு நடைபெறுகிறது. புதிய X1 மாடல் பற்றி பிஎம்டபிள்யூ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் 2023 ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ X1 மாடலில் கூர்மையான டிசைன் அம்சங்கள், பெரிய கிட்னி கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. டெயில் லேம்ப் டிசைன் மாற்றப்பட்டு புதிய X3 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய X1 மாடலில் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை 20 இன்ச் வரை அப்கிரேடு செய்து கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    உள்புறத்தில் ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, புதிதாக வளைந்த டிஸ்ப்ளே, ஐடிரைவ் 8 ஒஎஸ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. FAAR ஆர்கிடெக்கசரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் X1 மாடல் இருவித பெட்ரோல், இருவித டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 வோல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இருவித என்ஜின்களுடன் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெக்டார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஹெக்டார் மாடலில் ADAS உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தை உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஒரு லட்சமாவது யூனிட் ஆக எம்ஜி ஹெக்டார் எஸ்யுவி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் ஆலையில் இருந்து வெளியானது.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய ஹெக்டார் மாடலை ஜனவரி 5, 2023 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏராளமான புது அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய மாடலாக புதிய தலைமுறை ஹெக்டார் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம், கேபின் உள்ளிட்டவைகளில் அசத்தல் மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    2023 எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் முன்புற கிரில் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்புற தோற்றம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    ஏற்கனவே இணையத்தில் வெளியான ஸ்பை படங்களின் படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது. இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது.

    இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    • ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் ஐரா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழிலாளி. இவர் நேற்று மாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருவனந்தபுரம் நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய காரை விட்டு விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினcர்.

    அப்போது விபத்துக் குள்ளான காரில் சோதனை செய்தபோது ஒரு டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் மற்றும் அரிசியை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவரை போலீசாரை வலைவீசி தேடி வருகினறனர்.

    • நிசான் நிறுவன கார் மாடல்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அதிரடியான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • நிசான் நிறுவனத்தின் கிக்ஸ் மாடலுக்கு அதிகபட்ச சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் தனது நிசான் மேக்னைட் மற்றும் நிசான் கிக்ஸ் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரு எஸ்யுவி மாடல்களுக்கும் ரொக்க தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் சர்வீஸ் பேக்கேஜ் வடிவில் ஏராள சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு/மேற்கு, தெற்கு, வடக்கு (இரு பகுதிகள்) என நான்கு பிரிவு வாடிக்கையாளர்களுக்கு நிசான் கிக்ஸ் மாடலுக்கு அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    நிசான் கிக்ஸ் கிழக்கு / மேற்கு பகுதிக்கான சலுகைகள்:

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரையிலான தள்ளுபடி

    தெற்கு பகுதிக்கான சலுகைகள்:

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரையிலான தள்ளுபடி

    வடக்கு பகுதிக்கான ஆப்ஷன் 1

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ வேரியண்ட்களுக்கு இரண்டு ஆண்டுகள் பராமரிப்பு சர்வீஸ் பேக்கேஜ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு மூன்று ஆண்டுகள் பராமரிப்பு சர்வீஸ் பேக்கேஜ்

    வடக்கு பகுதிக்கான ஆப்ஷன் 2

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி

    அனைத்து பகுதிகளுக்கும் ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 2 ஆயிரம் வரை ஆன்லைன் புக்கிங் போனஸ் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் சலுகை விவரங்கள்:

    நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரையிலான இலவச அக்சஸரீக்கள் / ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் வென்யூ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
    • புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடலில் சன்ரூஃப் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய எஸ்யுவி மாடல் முதல் முறையாக கொரியாவில் ஸ்பை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் புதிய கார் அதன் ப்ரோடோடைப் வடிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வெர்ஷன் இந்தியாவில் உருவாக்கப்பட்டு இங்கிருந்து கொரியாவில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஹேச்பேக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மற்ற ஆட்டோ உற்பத்தியாளர்களை போன்றே ஹூண்டாய் நிறுவனமும் அனைத்து பிரிவுக்கும் ஏற்றவாரு எஸ்யுவி மாடலை உருவாக்கி வருகிறது. இதுவரை பெயரிடப்படாமல் இருக்கும் ஹூண்டாய் எஸ்யுவி மாடல் கிராண்ட் i10 மாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் இது இந்திய சந்தையில் ஹூண்டாயின் மிகச் சிறிய எஸ்யுவி-யாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று தொடங்கும் முன்பு தான் இந்த காரின் உற்பத்தியை துவங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் செய்யப்படும் மாடலை பார்க்கும் போது, கேஸ்பர் மாடலை விட சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றெ தெரிகிறது. இதன் ஸ்டைலிங் முற்றிலும் வித்தியாசமாகவும், அதிக எஸ்யுவி பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.

    இந்த மைக்ரோ எஸ்யுவி மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், வென்யூ போன்ற ஹெட்லேம்ப் அதன் கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. டேடைம் ரன்னிங் லைட்கள் H வடிவம் கொண்டிருக்கின்றன. இதே போன்ற செட்டப் சாண்டா ஃபெ எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்களிலும் காணப்பட்டது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எல்இடி டிஆர்எல் ஆக இருக்கும் என தெரிகிறது.

    பக்கவாட்டு பகுதிகளில் முன்புற ஃபெண்டர்கள் கேஸ்பர் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. பின்புறம் கதவு சற்றே உறுதியானதாகவும், டோப் ஹேண்டில் செவ்வக பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறம் சற்றே ஆங்குலர் டிசைன் கொண்ட டெயில் லேம்ப்கள், பின்புற பம்ப்பர் முற்றிலும் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 மாடல்களை போன்றே இந்த காரிலும் போட்டியை ஏற்படுத்தும் அம்சங்களான சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    Source : Rushlane | 악군TV

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடலின் விலை அறிவிக்கப்படாமல் முன்பதிவு மட்டும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் விற்பனை மையங்களை வந்தடைந்தன.

    இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பெட்ரோல், மூன்று வித பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் பயணம் செய்யும் இருக்கைகளுடன் கிடைக்கிறது. இதன் விற்பனை 2023 ஜனவரி மாத மத்தியில் துவங்கும் என தெரிகிறது.

    2023 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுகத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் CVT, E-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் காரின் ஃபியூவல் டேன்க்-ஐ முழுமையாக நிரப்பினால் 1097 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது.

    Photo Courtesy: Missautologs

    ×