search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வென்யூ N லைன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N லைன் மாடல் ஆகும்.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ N லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வென்யூ N லைன் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹூண்டாய் வென்யூ N லைன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யுவி-இன் ஸ்போர்ட் வேரியண்ட் ஆக புதிய N லைன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. மேலும் இந்திய சந்தையில் இது ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N லைன் மாடல் ஆகும். புதிய வென்யூ N லைன் மாடலின் வெளிப்புறம் டார்க் க்ரோம் கிரில், ரூப் ரெயில்கள், பம்ப்பர் பெண்டர், சைடு சில் உள்ளிட்டவைகளில் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் கிரில் மீது N லைன் சின்னம் இடம்பெற்று இருக்கிறது. 


    இத்துடன் டெயில்கேட் பக்கவாட்டு பெண்டர்கள், ரூப் ஸ்பாயிலர், ட்வின் டிப் எக்சாஸ்ட் மற்றும் புதிய 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் பிளாக் நிற இண்டீரியர், ரெட் அக்செண்ட்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், புளூ லின்க் கனெக்டிவிட்டி, அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், லெதர் இருக்கைகள் மற்றும் N லைன் பிராண்டிங் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் பேடில் ஷிப்டர்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, OTA அப்டேட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ரிவைஸ்டு ஸ்டீரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.


    2022 ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் கியா சொனெட், டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300 மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    விலை விவரங்கள்:

    வென்யூ N லைன் N6 DCT ரூ. 12 லட்சத்து 16 ஆயிரம்

    வென்யூ N லைன் N6 DCT டூயல் டோன் ரூ. 12 லட்சத்து 31 ஆயிரம்

    வென்யூ N லைன் N8 DCT ரூ. 13 லட்சத்து 15 ஆயிரம்

    வென்யூ N லைன் N8 DCT டூயல் டோன் ரூ. 13 லட்சத்து 30 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • இங்கிலாந்து நாட்டில் திருடு போன பெண்ட்லி நிறுவனத்தின் முஸ்லேன் கார் பாகிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
    • காணாமல் போன காரை சுங்கத் துறை அதிகாரிகள் பாகிஸ்தானில் மீட்டுள்ளனர்.

    உலகம் முழுக்க ஆடம்பர கார் மாடல்களை திருடர்களிடம் பறிகொடுக்காமல் இருக்க அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. இங்கிலாந்தில் காணாமல் போன பெண்ட்லி முஸ்லேன் மாடல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரிகள் இந்த காரை மீட்டுள்ளனர்.

    திருடப்பட்ட கார் பற்றி இங்கிலாந்து தேசிய குற்றவியல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கராச்சியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டில் இந்த கார் கண்டறியப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி காரை திருடியவர்கள் அதில் இருந்த டிராக்கிங் கருவியை நீக்கவோ அல்லது ஆப் செய்யவோ இல்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    டிராக்கர் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததை அடுத்து இங்கிலாந்தில் இருந்த அதிகாரிகள் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தை சரியாக கண்டறிந்துள்ளனர். பின் திருடப்பட்ட கார் பற்றிய விவரங்களை இங்கிலாந்து அதிகாரிகள் பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண்ட்லி முஸ்லேன் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    கண்டறியப்பட்ட காருக்கு பாகிஸ்தானில் பயன்படுத்தி வந்த நபர் சரியான ஆவணங்களை கொடுக்காத காரணத்தால் சுங்கத்துறை அதிகாரிகள் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரை திருட்டுத் தனமாக பயன்படுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். இவருடன் காரை அவருக்கு விற்ற முகவரும் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட காரின் நம்பர் பிளேட் சட்டவிரோதமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • மேலும் புதிய வென்யூ N லைன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஹூண்டாய் ஈடுபட்டு வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 2022 மாதத்தில் மட்டும் 62 ஆயிரத்து 210 யூனிட்களை விற்பனை செய்து வருகிறது. இதில் உள்நாட்டில் மட்டும் 49 ஆயிரத்து 510 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. வெளிநாட்டு சந்தைகளுக்கு 12 ஆயிரத்து 700 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. வருடாந்திர அடிப்படையில் ஹூண்டாய் உள்நாட்டு வாகன விற்பனை 5.6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.


    கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனம் டக்சன் பிளாக்‌ஷிப் எஸ்யுவி-இன் மேம்பட்ட மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் ஹூண்டாய் டக்சன் விலை ரூ. 27 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இது தவிர ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆண்டில் தனது மூன்றாவது எஸ்யுவி மாடலாக வென்யூ N லைன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி-இன் டாப் எண்ட் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் DCT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விலை விவரங்கள் நாளை (செப்டம்பர் 6) அறிவிக்கப்பட உள்ளது.

    • விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சின்னூர் பிரிவு அருகே, பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அவர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கிட்டுசாமி மகன் முருகேசன்( வயது 37) என்பது தெரியவந்தது . இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் புதிய C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • இந்த மாடலில் டச் ஸ்கிரீன் கொண்ட கேபின் மற்றும் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட உள்ளது. பேஸ்லிப்ட் செய்யப்பட்ட சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி தோற்றத்தில் இந்த கார் அதன் சர்வதேச வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரின் முகப்பு பகுதியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புற பம்ப்பரில் அகலமான ஏர் டேம், மெல்லிய ட்வின் ஸ்லாட் கிரில், புதிய எல்இடி ஹெட்லைட் யூனிட், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன.


    பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிக மாற்றம் செய்யப்படவில்லை. டெயில் லைட் மற்றும் புதிய 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் புதிதாக எக்லிப்ஸ் புளூ நிறத்தில் கிடைக்கும். டீசரில் புது காரின் கேபின் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்களும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த மாடல் தனித்து நிற்கும் டச் ஸ்கிரீன் யூனிட், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோலுக்கு தனி கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

    ஐரோப்பிய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் பிளக்-இன்-ஹைப்ரிட் வெர்ஷனில் கிடைக்கிறது. எனினும், இந்த அம்சம் இந்தியாவிலும் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் C5 ஏர்கிராஸ் மாடல் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 177 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய லிமிடெட் எடிஷன் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான டொயோட்டா இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடலில் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடல் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் விலை ரூ. 17 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 02 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் மிட்-ஸ்பெக் GX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்டவைகளுடன் கிடைக்கிறது.


    வழக்கமாக இந்த அம்சங்களை டீலரிடம் ஃபிட் செய்தால் ரூ. 55 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகும். எனினும், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மாடலை வாங்க தூண்டும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதிக வரவேற்பு காரணமாக இன்னோவா க்ரிஸ்டா டீசல் வெர்ஷன்களின் முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடலில் 2.7 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 164 ஹெச்பி பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 10.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என ARAi சான்று பெற்று இருக்கிறது.

    • கியா இந்தியா நிறுவனத்தின் புதிய சொனெட் X லைன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய X லைன் மாடல் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் புதிய சொனெட் X லைன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சொனெட் X லைன் மாடலின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிஷன் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என துவங்குகிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ டீசல் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கியா சொனெட் X லைன் இரு வேரியண்ட்களும் டாப் எண்ட் ஆட்டோமேடிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன.

    புதிய X லைன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. அதன் படி புதிய கியா சொனெட் X லைன் மேட் கிராபைச், சேஜ் என டூயல் டோன் நிற இண்டீரியர், புதிய டிசைன் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற ஸ்டிட்ச்களை கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவியாக சொனெட் இருக்கிறது. புதிய X லைன் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


    கியா சொனெட் X லைன் பெட்ரோல் மாடலில் 1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டீசல் மாடலில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய கியா சொனெட் X லைன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து கியா விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எஸ்யுவி மாடலை ஆன்லைனிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சொனெட் மட்டுமின்றி கியா செல்டோஸ் X லைன் மாடலும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஹோண்டா நிறுவன கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இந்த சலுகைகள் இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. பண்டிகை காலத்தை குறி வைத்து சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை மற்றும் பலன்கள் கிரேடு, வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். இந்த சலுகைகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

    சலுகைகளின் படி ஹோண்டா சிட்டி 5ஆம் தலைமுறை மாடலுக்கு ரூ. 27 ஆயிரத்து 496 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 5 ஆயிரத்து 496 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ஹோண்டா WR-V மாடலுக்கு ரூ. 27 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை அடங்கும்.

    ஹோண்டா ஜாஸ் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெறலாம். இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்டவை அடங்கும். ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா சிட்டி நான்காம் தலைமுறை மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் வழஙஅகப்படுகிறது. இந்த காருக்கு எக்சேன்ஜ், கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படவில்லை.

    • ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் லிமிடெட் எடிஷன் கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய லிமிடெட் எடிஷன் மாடல் RxZ வேரியண்டை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனம் கைகர், டிரைபர் மற்றும் க்விட் மாடல்களின் லிமிடெட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தை ஒட்டி புதிய லிமிடெட் எடிஷன் மாடல்கள் அறிமுகமாகி உள்ளன. லிமிடெட் எடிஷன் கைகர், மற்றும் டிரைபர் மாடல்கள் RxZ வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன. க்விட் லிமிடெட் எடிஷன் மாடல் கிளைம்பர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெனால்ட் லிமிடெட் எடிஷன் கார்களின் முன்பதிவு இன்று (செப்டம்பர் 2) துவங்கியது. லிமிடெட் எடிஷன் விலைகளும் டாப் எண்ட் மாடல்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. லிமிடெட் எடிஷன் மாடல்களில் காண்டிராஸ்ட் பிளாக் நிற ரூஃப் வழங்கப்பட்டு இறுக்கிறது. மூன்று மாடல்களிலும் கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பக்கவாட்டுகளில் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.


    டிரைபர் மற்றும் க்விட் மாடல்களில் பிளாக் பினிஷ் செய்யப்பட்ட வீல் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. கைகர் லிமிடெட் எடிஷனில் ஸ்டாண்டர்டு எடிஷனில் உள்ளதை போன்ற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பிரேக் கேலிப்பர்கள் ரெட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. தோற்றம் தவிர கார்களின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய லிமிடெட் எடிஷன் மாடலை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் வாங்கிட முடியும்.

    ரெனால்ட் க்விட் கிளைம்பர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. டிரைபர் RxZ விலை ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் என்றும் கைகர் RxZ விலை ரூ. 8 லட்சத்து 39 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் எடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய குளோஸ்டர் மாடலை அறிமுகம் செய்தது.
    • 2022 குளோஸ்டர் மாடல் புதிய 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் மேம்பட்ட எம்ஜி குளோஸ்டர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 31 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய மாடலில் சிறிதளவு டிசைன் மற்றும் மேம்பட்ட கனெக்டட் கார் சூட் வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறம் புதிய 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், டீப் கோல்டன் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    2022 எம்ஜி குளோஸ்டர் சூப்பர் 4x2 ரூ. 31 லட்சத்து 99 ஆயிரம்

    2022 எம்ஜி குளோஸ்டர் ஷார்ப் 4x2 ரூ. 36 லட்சத்து 87 ஆயிரம்

    2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 7S 4x2 ரூ. 38 லட்சத்து 44 ஆயிரம்

    2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 6S 4x2 ரூ. 38 லட்சத்து 44 ஆயிரம்

    2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 7S 4x4 ரூ. 40 லட்சத்து 77 ஆயிரம்

    2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 6S 4x4 ரூ. 40 லட்சத்து 77 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    புதிய 2022 எம்ஜி குளோஸ்டர் மாடல் அகேட் ரெட், மெட்டல் பிளாக், வார்ம் வைட் மற்றும் மெட்டல் ஆஷ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், மூன்று ஸ்லாட் கிரில், க்ரோம் சரவுண்ட், காண்டிராஸ்ட் நிற ஸ்கிட் பிளேட்கள், பாக் லைட்கள், சைடு ஸ்டெப்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், எல்இடி டெயில் லைட்கள், குவாட் டிப் எக்சாஸ்ட்கள் உள்ளன.

    காரின் உள்புறம் 75-க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் அம்சங்கள், மியூசிக் சிஸ்டத்திற்கு ரிமோட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், ஹிங்லிஷ் வாய்ஸ் கமாண்ட்கள், ஆண்ட்ராய்டு வாட்ச் செயலி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய குளோஸ்டர் மாடலில் உள்ள ADAS கூடுதலாக டோர் ஓபன் வார்னிங், ரியர் கிராஸ் டிராபிக் அலர்ட் மற்றும் லேன் சேன்ஜிங் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த காரின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    • விபத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    நாமக்கல்:


    நாமக்கல் பரமத்திசாலை காவேட்டிபட்டி அருகே ஷேர்ஆட்டோவும் காரும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


    காரை ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த தாமரைச்செல்வன் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா டீசல் மாடல் முன்பதிவு சமீபத்தில் நிறுத்தப்பட்டது இந்திய சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தற்போது இந்த முடிவுக்கான காரணம் பற்றி டொயோட்டா நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

    இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் டொயோட்டா விற்பனையாளர்கள், இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவை திடீரென நிறுத்துவதாக அறிவித்தன. இதை அடுத்து ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான டொயோட்டா தனது அதிக பிரபலமான எம்பிவி மாடலை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    மேலும் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு மாற்றாக ஹைப்ரிட் மாடல் ஒன்று இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தியதற்கான காரணம் பற்றி டொயோட்டா நிறுவனம் மௌனம் காத்து வந்தது. இந்த நிலையில், இதற்கான காரணத்தை விளக்கி அறிக்கை ஒன்றை டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது.


    அதன்படி, "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, இந்திய சந்தையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் மாடல் ஆகும். 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்த கார் நீண்ட பயணத்தை எதிர்கொண்டு வந்துள்ளது. சந்தையில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட இன்னோவா இந்த பிரிவில் மற்ற மாடல்களை விட ஒருபடி மேலாகவே இருந்து வந்துள்ளது."

    "கடந்த ஆண்டுகளில் இந்த மாடல் பலமுறை அதிகளவு மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆடம்பரம், சவுகரியம் மற்றும் செயல்திறன் என எல்லாவற்றிலும் இந்த கார் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்று வந்துள்ளது. இதே வரிசையில் இரண்டாம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்டா தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது."

    "எனினும், தொடர்ந்து கிடைத்து வரும் அமோக வரவேற்பு காரணமாக இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்டுக்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர் நலன் சார்ந்த நிறுவனமாக தொடர்ந்து வாகன வினியோகத்தை வேகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறும்." என தெரிவித்துள்ளது.

    ×