search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிராண்ட் i10 நியோஸ் CNG வேரியண்டை அறிமுகம் செய்தது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடல் விவரங்கள் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இது கிராண்ட் i10 நியோஸ் காரின் புதிய டாப் எண்ட் மாடல் என கூறப்பட்டது. தற்போது இந்த மாடலின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஆஸ்டா CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.


    புதிய கிராண்ட் i10 நியோஸ் ஆஸ்டா CNG மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 68 ஹெச்.பி. பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஆஸ்டா CNG மாடல் ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 15 இன்ச் அலாய் வீல்கள், குரோம் டோர் ஹேண்டில்கள், வயர்லெஸ் சார்ஜிங், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், கூல்டு குளோவ் பாக்ஸ், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்-ரெஸ்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை 0.55 சதவீதம் வரை உயர்த்துவதாக இந்த மாத துவக்கத்தில் அறிவித்து இருந்தது. விலை உயர்வு ஜூலை 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அப்போது கார் மாடல்கள் விலை அதிகபட்சமாக ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    இந்த வரிசையில், தற்போது டாடா நெக்சான் விலை ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதே போன்று டாடா சபாரி மாடலின் விலை ரூ. 15 ஆயிரமும், அல்ட்ரோஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. டாடா பன்ச் மற்றும் டாடா ஹேரியர் மாடலின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.


    டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் மாடல் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக டாடா நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலே தற்போது நெக்சான் EV பிரைம் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி சலுகைகள் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் எளிய மாத தவணையில் கார் வாங்கிக் கொள்ள முடியும்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் ஹேச்பேக் மாடல் C3 இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காரின் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 ஹேச்பேக் மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 மாடல் விலை கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சிட்ரோயன் C3 மாடல் லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்கள் மற்றும் பத்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஆறு டூயல் டோன் மற்றும் நான்கு மோனோ டோன் நிறங்கள் அடங்கும். சிட்ரோயன் C3 மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


    சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட்கள், ஃபாக் லைட்கள், காண்டிராஸ்ட் கலர் ஸ்கிட் பிளேட்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், வீல் கவர், 10 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ஹைட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 கார் கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய X5 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலில் புதிதாக M ஸ்போர்ட் பாடி கிட் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் ஆடம்பர எஸ்யுவி மாடலில் காஸ்மெடிக் மாற்றங்களை வழங்கி இருக்கிறது. இவை தவிர புது மாடலிலும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலின் விலை ரூ. 97 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் இந்த மாடல் X சீரிஸ் எஸ்யுவி காரின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகி இருக்கிறது. முன்னதாக X5 கார் தான் டாப் எண்ட் மாடலாக இருந்து வந்தது. இதன் விலை ரூ. 94 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலில் M ஸ்போர்ட் டிசைன் பேக்கேஜ், புதிய முன்புற பம்ப்பர், ரியர் டிப்யுசர், டெயில் பைப்கள், M ஸ்போர்ட் பிரேக் கேலிப்பர்கள், M ஸ்போர்ட் லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலில் 265 ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், எக்ஸ் டிரைவ் சிஸ்டம் மூலம் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்போர்ட் எக்ஸ் பிளஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது, M ஸ்போர்ட் வேரியண்டில் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட பேடில் ஷிப்டர்கள், லான்ச் கண்ட்ரோல், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் டெயில்கேட், அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 20 இன்ச் M ஸ்போர்ட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLE, லேண்ட் ரோவர் டிஸ்கவரி மற்றும் வால்வோ XC90 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மிட் சைஸ் எஸ்யுவி மாடலினை இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. மேலும புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் வெளியீடு ஆகஸ்ட் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது.

    இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் E, S, G மற்றும் V என நான்கு வித வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த கார் ஏழு விதமான மோனோ டோன் நிறங்கள், நான்கு விதமான டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 101 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது.

    இது மட்டுமின்றி புதிய அர்பன் குரூயிசர் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டொயோட்டா ஹைப்ரிட் சிஸ்டம் வசதியுடன் வருகிறது. இந்த யூனிட் 91 ஹெச்.பி. பவர் மற்றும் 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் இ டிரைவ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி மாடலாக கிராண்ட் விட்டாரா சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி மாடலாக கிராண்ட் விட்டாரா காரை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய கிராண்ட் விட்டாரா மாடல் நெக்சா விற்பனை மையங்களை வந்தடைய துவங்கி இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    தற்போதைய தகவல்களின் படி புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் விலை விவரங்கள் அடுத்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்படலாம். மேலும் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய கிராண்ட் விட்டாரா மாடலில் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.


    Phooto Courtesy: Carwale

    இதே என்ஜின் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 17 இன்ச் அளவில் டூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்மோக்டு கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷக், எம்ஜி ஆஸ்டர், டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா விலை ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • விரைவில் இந்த மாடலுக்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ஹெக்டார் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஒற்றை டீசரில் புது கார் 14 இன்ச் அளவில் போர்டிரெயிட் ஸ்டைல் செண்டர் கன்சோல்-மவுண்ட் செய்யப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டு இருக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

    இன்போடெயின்மெண்ட் யூனிட் தவிர இந்த மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடல் ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, நடுவில் ஏர்கான் வெண்ட்கள், சதுரங்க வடிவம் கொண்ட ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ரி-வொர்க் செய்யப்பட்ட செண்டர் கன்சோல், ரி-ஷேப் செய்யப்பட்ட கியர் லீவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் மாடலில் முற்றிலும் புது முன்புற கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் யூனிட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டார் மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV700 அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் சில நகரங்களில் ஒரு ஆண்டு வரை அதிகரித்து இருக்கிறது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் முன்பதிவில் 1.5 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் மஹிந்திரா XUV700 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய மஹிந்திரா XUV700 மாடலுக்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் துவங்கியது.

    தற்போது XUV700 மாடலுக்கான ஓபன் புக்கிங் 80 ஆயிரம் யூனிட்களாக இருக்கிறது. இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் ஒரு வருடம் வரை நீண்டு இருக்கிறது. மஹிந்திரா XUV700 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 189 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூப், டூயல் ஸ்கிரீன் செட்டப், 6/7 சீட்டர் ஆப்ஷன்கள், ஃபிளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ADAS அம்சங்கள், ஏர் பியூரிபையர், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், கனெக்டெட் கார் அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.


    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் MX, AX3, AX5 மற்றும் AX7 போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா XUV700 மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய குஷக் மாடல் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை மாற்றியமைத்து இருக்கிறது.

    ஸ்கோடா குஷக் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை அடியோடு மாற்றியமைத்து இருக்கிறது. குஷக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் குஷக் மாடல் அறிமுகமாகி ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இந்த நிலையில், ஸ்கோடா நிறுவனம் 28 ஆயிரத்து 629 குஷக் யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. ஜூன் 2022 வரையிலான விற்பனையில் இத்தனை யூனிட்கள் பதிவாகி உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரத்து 386 யூனிட்களை ஸ்கோடா நிறுவனம் விற்றுள்ளது.


    விற்பனையை மேலும் அதிகப்படுத்த ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மற்றொரு புது வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. செமி கண்டக்டர் குறைபாடு மற்றும் விலை உயர்வு காலக்கட்டத்தில் மற்றொரு புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது அசத்தல் முடிவாக பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா அறிமுகம் செய்த புதிய குஷக் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குஷக் ஸ்டைல் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மாடல் ஆகும். இதில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது. 

    • மாருதி சுசுகி நிறுவனம் பல்வேறு புது கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஆல்டோ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஆல்டோ மாடல் காரை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் முற்றிலும் புது பிளாட்பார்ம் மற்றும் புதிய பவர்டிரெயின் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. ஆல்டோவை தொடர்ந்து செப்டம்பர் மாத வாக்கில் கிராண்ட் விட்டாரா மாடலின் வெளியீடு நடைபெற இருக்கிறது.

    மூன்றாம் தலைமுறை ஆல்டோ மாடல் மாருதி நிறுவனத்தின் மாட்யுலர் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதே பிளாட்பார்மில் ஏற்கனவே எஸ் பிரெஸ்ஸோ, செலரியோ, வேகன் ஆர், எர்டிகா மற்றும் XL6 போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


    இந்தியாவில் புதிய ஹேச்பேக் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 796சிசி பெட்ரோல் என்ஜின் மற்றும் K10C 1.0 லிட்டர் டூயல் ஜெட் யூனிட் வழங்கப்படலாம். இதே என்ஜின் சமீபத்திய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த என்ஜின் 48 ஹெச்.பி. பவர், 69 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. K10C என்ஜின் 67 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • போர்ஷே நிறுவனத்தின் புதிய கயென் மாடலே இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இந்த கார் கூப் பாடி ஸ்டைலிலும் கிடைக்கிறது.

    ஜெர்மன் நாட்டு ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கயென் டர்போ ஜிடி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போர்ஷே கயென் டர்போ ஜிடி மாடலின் விலை ரூ. 2 கோடியே 57 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது போர்ஷே கார் லம்போர்கினி உருஸ் மற்றும் ஆடி RSQ8 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    மற்ற கயென் மாடல்களுடன் வித்தியாசப்படுத்தும் வகையில், புதிய கயென் டர்போ ஜிடி மாடலின் வெளிப்புற தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் முன்புற பம்ப்பரில் பெரிய ஏர் இன்லெட்கள், பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், டிப்யுசர், அலாய் வீல்களில் அசத்தல் நிறம் மற்றும் இரு எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், போர்ஷேவின் டைனமிக் லைட் சிஸ்டம் பிளஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.


    உள்புறத்தில் அல்காண்ட்ரா மற்றும் லெதர் மூலம் டிசைன் செய்யப்பட்டு இறுக்கிறது. முன்புறம் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், நான்கு ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல், அல்காண்ட்ரா ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், 12 இன்ச் செண்ட்ரல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    போர்ஷே கயென் டர்போ ஜிடி மாடலில் மாடிபை செய்யப்பட்ட 3996சிசி, ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 632 ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 3.3 நொடிகளிலும் 160 கி.மீ. வேகத்தை 7.7 நொடிகளிலும் எட்டி விடும். மேலும் 200 கி.மீ. வேகத்தை 12.2 நொடிகளிலேயே எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 300 கி.மீ. வேகத்தில் செல்லும். 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த மாடலாக கிராண்ட் விட்டாரா இருந்து வந்தது.
    • இந்த மாடல் ஹைப்ரிட் சிஸ்டம் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் வெளியீடு செப்டம்பர் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. புதிய மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்.ஜி. ஆஸ்டர் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் இருவித என்ஜின்கள் - 102 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் கொண்ட 1.5 லிட்டர் K15C என்ஜின் மற்றும் 114 ஹெச்.பி. பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    இந்த காரின் 1.5 லிட்டர் K15C என்ஜின் கொண்ட வேரியண்ட் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 21.11 கி.மீ. மைலேஜும், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் 20.58 கி.மீ. மைலேஜூம் வழங்குகிறது. இதன் ஆல்வீல் டிரைவ் வெர்ஷன் லிட்டருக்கு 19.38 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது. 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் என்ஜின் e-CVT ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 27.97 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புது கிராண்ட் விட்டாரா மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன், முற்றிலும் புது கிரில், க்ரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி நிறம் கொண்ட ORVM-கள், பிளாக் ரூஃப், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், டூ பீஸ் எல்இடி லைட் பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 9 இன்ச் பிரீஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது.

    ×