search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய பென்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்பட்ட GLA மற்றும் GLB எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்களின் இந்திய விற்பனை இந்த ஆண்டிற்குள் துவங்கும் என தெரிகிறது. பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் டிசைன், லைட் சிக்னேச்சர் உள்ளிட்டவை புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்இடி லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புற நிறம், வீல் ஆர்ச்களிலும் பூசப்பட்டு இருக்கிறது. இதன் முந்தைய வெர்ஷன்களில் பிளாஸ்டிக் ரிம்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    காரின் உள்புறம் அதிக சவுகரியத்தை வழங்கும் இருக்கைகளுடன் லெதர் ஸ்டீரிங் வீல், ஹை-பீம் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. அனைத்து கார்களிலும் மேம்பட்ட MBUX இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உள்புறம் ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி மாடல்களில் மைல்டு ஹைப்ரிட் திறன் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இந்த கார்கள் பிளக்-இன் மற்றும் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் வழங்கப்படுகிறது. இவை 149 ஹெச்பி முதல் 264 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது.

    புதிய மைல்டு ஹைப்ரிட் மாடல்களில் 48 வோல்ட் பேட்டரி வழங்கப்படுகிறது. இவை காரின் செயல்திறனை 10 ஹெச்பி வரை அதிகரிக்கின்றன. இவை குறிப்பிட்ட சிறிது தூரம் வரை மின்சக்தியில் மூலம் பயணிக்க உதவுகிறது. புதிய GLA மற்றும் GLB மாடல்களின் செயல்திறன் மெர்சிடிஸ் AMG மூலம் டியூன் செய்யப்படுகின்றன. 

    • தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சாந்தி பரிதாபமாக இறந்தார்

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதி அள்ளம் என்ற இடத்தை சேர்ந்தவர் திரிசோதரன். இவரது மனைவி சாந்தி (வயது 37). திரிசோதரன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

    கடந்த 20-ந்தேதி மாலை சாந்தி தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் காப்புக்காடு- புதுக்கடை சாலையில் சென்று கொண்டிருந்தார். நாட்டுவெள்ளி பகுதியில் அவர் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று சாந்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவ னந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சாந்தி பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை இன்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    இது தொடர்பான புகாரின்பேரில் புதுக்கடை போலீசார் சம்மந்தபட்ட கார் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெர்னா மாடல் முன்பதிவில் அசத்தி வருகிறது.
    • சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2023 ஹூண்டாய் வெர்னா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.37 லட்சம் ஆகும்.

    ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. நேற்று இந்த காருக்கான முன்பதிவு துவங்கியது. இந்த நிலையில், 2023 ஹூண்டாய் வெர்னா மாடலை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     

    சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கும் நிலையில், 2023 வெர்னா துவக்கத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே வெர்னா காரை பயன்படுத்துவோர் மற்றும் இளம் வாடிக்கையாளர்கள் புதிய வெர்னா மாடலை வாங்குவர் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் நிறுத்தப்பட்டு விட்டது.

    புதிய வெர்னா மாடலின் வெளிப்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல், முன்புறம் பம்ப்பர், கிரில், பம்ப்பரின் மேல் எல்இடி லைட் பார், டூயல் டோன் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் மீது எல்இடி லைட் பார் மற்றும் முற்றிலும் புதிய பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
    • அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காம்பேக்ட் ஹேச்பேக் மற்றும் டிசையர் காம்பேக்ட் செடான் மாடல்களை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரிவுகளில் அதிக வரவேற்பை பெறுவதோடு விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

    இந்த வரிசையில், இவற்றின் ஹைப்ரிட் வெர்ஷன் அதிக பிரபலம் அடையும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் ஆகும்.

     

    இத்துடன் வரும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இதே யூனிட் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கி வருகின்றன.

    அந்த வகையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் லிட்டருக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இரு கார்களும் அளவில் சிறியது என்பதால், இந்த மைலேஜ் கிடைக்கும் என்றே தெரிகிறது. பாகங்கள் பெரும்பாலும் உள்நாட்டில் இருந்தே பயன்படுத்தும் பட்சத்தில், இவற்றின் விலை ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. 

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்களுக்கு பிஎஸ்6 2 எஞ்சின் வழங்கப்படுகிறது.
    • புதிய மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகபட்சம் ரூ. 36 ஆயிரம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்துகிறது. விலை உயர்வு ஃபோக்ஸ்வேகன் டைகுன், விர்டுஸ் மற்றும் டிகுவான் உள்ளிட்ட மாடல்களுக்கு பொருந்தும். இம்முறை கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    தற்போது ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 56 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் கம்ஃபர்ட்லைன், டாப்லைன் மற்றும் ஜிடி பிளஸ் என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ஏப்ரல் முதல் ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 36 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.

    விலை உயர்வு தவிர டைகுன் மாடலில் உள்ள எஞ்சின்கள் RDE விதிகள் மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றார் போல் அப்டேட் செய்யப்படுகின்றன. இவற்றுடன் புதிய காரில் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், மி-ஹோம் லேம்ப்கள் என சில புதிய அம்சங்கள் வழங்கப்படலாம்.

     

    விர்டுஸ் செடான் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 32 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டாப்லைன், கம்ஃபர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஜிடி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. விர்டுஸ் மாடலின் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.

    பிஎஸ்6 2 அப்டேட் மட்டுமின்றி விர்டுஸ் மாடலில் ரியர் ஃபாக் லேம்ப்கள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. டிகுவான் மாடல் எலிகன்ஸ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 33 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் விலை பிஎஸ்6 2 அப்டேட்டிற்கு ஏற்ப அதிகரிக்கப்பட இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா CNG மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய பிரெஸ்ஸா CNG மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிரெஸ்ஸா CNG மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான காத்திருப்பு காலம் அதற்குள் ஆறு மாதங்களாக அதிகரித்துவிட்டது. மாருதி சுசுகி நிறுவனம் புதிய பிரெஸ்ஸா CNG மாடலுக்கான முன்பதிவை சமீபத்தில் துவங்கியது.

    முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடல் - LXi, VXi மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பிரெஸ்ஸா CNG மாடலில் 1.5 லிட்டர், டூயல்ஜெட் டூயல் VVT NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பெட்ரோல் என்ஜின் 99.2 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இதன் செயல்திறன் 86.63 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் ஆக குறைந்துவிடும்.

     

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மேலும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய CNG மாடல் லிட்டருக்கு 25.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை பிரெஸ்ஸா CNG டாப் எண்ட் மாடலில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரூயிஸ் கண்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், பவர்டு ரியர்-வியூ மிரர்கள் வழங்கப்படுகின்றன.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2023 வெர்னா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது முற்றிலும் புதிய வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இரண்டு விதமான பவர்டிரெயின், நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஒன்பது நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    காரின் வெளிப்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல், முன்புறம் பம்ப்பர், கிரில், பம்ப்பரின் மேல் எல்இடி லைட் பார், டூயல் டோன் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் மீது எல்இடி லைட் பார் மற்றும் முற்றிலும் புதிய பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    உள்புறத்தில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஒற்றை ஸ்கிரீன், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்விட்ச் செய்யக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட், கிளைமேட் கண்ட்ரோலர் உள்ளது.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது.

     

    டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் நான்கு நிறங்கள், ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடலின் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் விற்பனையில் 1.75 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. 2021 அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் மாடலின் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டாடா பன்ச் மாடல்: அடோமிக் ஆரஞ்சு-பிளாக் ரூஃப், டொர்ணடோ புளூ-வைட் ரூஃப், கலிப்சோ ரெட் - வைட் ரூஃப், ஆர்கஸ் வைட் - பிளாக் ரூஃப், டேடோனா கிரே - பிளாக் ரூஃப், டிராபிக்கல் மிஸ்ட் - பிளாக் ரூஃப் மற்றும் மீடியோர் பிரான்ஸ் - பிளாக் ரூஃப் என ஏழு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார் பியுர், அட்வென்ச்சர், அகம்ப்லிஷ்டு மற்றும் கிரேயடிவ் என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் கொண்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மாடலின் CNG வெர்ஷனை காட்சிக்கு வைத்திருந்தது. வரும் மாதங்களில் டாடா பன்ச் CNG மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

    • கியா நிறுவனத்தின் புதிய 2023 சொனெட் மாடலின் டீசல் வேரியண்ட்களில் iMT பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • 2023 கியா சொனெட் மாடலில் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி அனைத்து பவர்டிரெயின்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சொனெட் மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய கியா சொனெட் விலை ரூ. 7 லட்சத்து 79 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த எஸ்யுவி-யில் தற்போது வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்கள் RDE மற்றும் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மேம்பட்ட சொனெட் மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு ஏற்ப 2023 மாடலில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    2023 கியா சொனெட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர புதிய மாடலிலும் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், நேவிகேஷன், 4.2 இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், எல்இடி மூட் லைட்கள், டர்போ DCT வெர்ஷன்களில் பேடில் ஷிப்டர்கள் வழங்கப்படுகின்றன.

    2023 கியா சொனெட் மாடலில் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு iMT அல்லது 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் அல்லது 6 ஸ்பீடு iMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜிம்னி மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.
    • புதிய மாருதி ஜிம்னி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய ஜிம்னி மாடலின் டிஸ்ப்ளே யூனிட்கள் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளன. புதிய மாருதி ஜிம்னி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஜிம்னி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசுகி ஜிம்னி மாடல் டெஸ்ட் டிரைவ் மே மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    மாருதி ஜிம்னி மாடலுக்கான டெஸ்டிங் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாருதி ஆல்டோ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஜிம்னி மாடல் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஜிம்னி மாடல் டோன்டு-டவுன் ப்ரோஃபைல் கொண்டிருக்கிறது.

     

    ஒட்டுமொத்தமாக சதுரங்க வடிவில் பாக்சி ப்ரோஃபைல் கொண்டிருக்கும் ஜிம்னி மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், 5 ஸ்லாட் க்ரோம் பிலேட் செய்யப்பட்ட கிரில், பம்ப்பர், கிளாம்ஷெல் பொனெட், ரூஃப் ரெயில் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. பக்கவாட்டில் சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், அகலமான பாடி கிளாடிங், பக்கவாட்டில் இண்டிகேட்டர்கள், பிளாக் ரியர் வியூ மிரர்கள், பாடி நிற டோர் ஹேண்டில்கள் உள்ளன.

    உள்புறம் ஜிம்னி மாடலில் 9 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ், சரவுண்ட் சென்ஸ் ஆர்கமிஸ் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் உள்ளன.

    Photo Courtesy: Rushlane

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெர்னா மாடல் சில தினங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில வாரங்களாக முற்றிலும் புதிய மிட்-சைஸ் செடான் மாடலுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய வெர்னா மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. வெளிப்புறம் புதிய தலைமுறை வெர்னா மாடல் ஸ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலான்ட்ரா காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட் பம்ப்பர் உள்ளது.

     

    இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பொனெட், எல்இடி லைட்டிங் சிஸ்டம், பக்கவாட்டில் கேரக்டர் லைன், முற்றிலும் புதிய அலாய் வீல்கள், ஃபாஸ்ட்-பேக் ஸ்டைல் ரூஃப்லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், பெரிய ஸ்பாயிலர், ரிவைஸ்டு ரியர் பம்ப்பர் உள்ளது. 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி புதிய தலைமுறை வெர்னா மாடலின் உள்புறம் அளவில் பெரிய டச்ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், வளைந்த டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு MT மற்றும் 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செல்டோஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய கியா செல்டோஸ் மாடலின் விலை அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2023 செல்டோஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கியா செல்டோஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 65 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. புதிய மாடல்களின் என்ஜின்கள் RDE மற்றும் E20 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. கடுமையான புகை விதிகள் காரணமாக செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டு வந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதுதவிர புதிய செல்டோஸ் மாடலில் 1.5 லிட்டர் NA நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இவற்றில் பெட்ரோல் என்ஜின் 115 பிஎஸ் பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 116 பிஎஸ் பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    வரும் மாதங்களில் இந்த காரில் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். இந்த என்ஜின் ஏற்கனவே கியா கரென்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    2023 கியா செல்டோஸ் HTE 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 12 லட்சத்து 39 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTK 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 13 லட்சத்து 69 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTK+ 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 15 லட்சத்து 2 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTX 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 16 லட்சத்து 59 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTX+ 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 17 லட்சத்து 59 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTX 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 17 லட்சத்து 59 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் GTX+ 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 19 லட்சத்து 35 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் X லைன் 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 19 லட்சத்து 65 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    ×