search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி"

    • ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
    • பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

    துருக்கியில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.

    துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. 

    இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

    இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

    இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

    இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.

    நிலநடுக்கத்தால், சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதி பயங்கர சம்பவமாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்
    • உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வர துருக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டது

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. ராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.

    முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது.

    துருக்கி- ஐரோப்பிய நாடுகள் இடையே உணவு தானியம் குறித்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தம் கருங்கடல் வழியாக உணவு தானியங்களை கொண்டு செல்வது என்பதாகும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 17-ந்தேதி முடிவடைகிறது. இதை நீட்டிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் தானியங்கள் கருங்கடல் வழியாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். சுமார் 30 மில்லியன் டன் உணவு தானியங்கள் வெளிநாடுகளுக்கு உக்ரைனில் இருந்து செல்வதால் உணவு தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

    ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா தயக்கம் காட்டுகிறது.

    உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது.

    சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

    • வருகிற மே மாதம 14-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது.
    • தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும் என எர்டோகன் நம்பிக்கையுடன் உள்ளார்.

    அங்காரா:

    துருக்கியில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து உள்ளனர்.

    நில நடுக்கத்தில் இருந்து அந்த நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த நாடு பொது தேர்தலை சந்திக்க இருக்கிறது.

    வருகிற மே மாதம் 14-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக நிலநடுக்கத்தால் பெரிதும் உருக்குலைந்த 10 மாகாணங்களில் இந்த பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் மீண்டும் வெல்வாரா? என்ற கேள்விக்குறி உள்ளது. ஏனென்றால் நிலநடுக்கத்தின்போது அவர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் செல்லவில்லை என்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

    கடந்த தேர்தலின்போது அவர் 55 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல பாராளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு அதே அளவு வெற்றி கிடைத்தது.

    ஆனால் இம்முறை நில நடுக்கம் நடந்து 3 மாதத்தில் பொது தேர்தல் வருகிறது. இதனால் இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிபர் தேர்தலில் தயீப் எர்டோகன் மறுபடியும் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும் என எர்டோகன் நம்பிக்கையுடன் உள்ளார்.

    நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு பதில் புதிதாக சிறந்த கட்டிடங்களை கட்டி கொடுக்க இருப்பதாக எர்டோகன் தெரிவித்து உள்ளார்.

    • கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர்.
    • முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

    நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.

    நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது. உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது.

    இப்போது, முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது

    • நிலநடுக்கத்தில் விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது.
    • விஜய்குமார் மாயமாகி இருப்பது குறித்து துருக்கியில் உள்ள இந்திய நாட்டு தூதரகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

    பெங்களூரு பீனியாவில் உள்ள நைட்ரஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக விஜய்குமார் (வயது 36) என்பவர் பணியாற்றி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் இவரது பூர்வீகம் ஆகும். இவர், பணியாற்றும் நிறுவனம் துருக்கி நாட்டிலும் புதிதாக நிறுவனத்தை தொடங்க உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் துருக்கியில் நடைபெற்று வருகிறது.

    அந்த கட்டிட பணிகளை கண்காணிப்பதற்காக என்ஜினீயர் விஜய்குமார், பெங்களூருவில் இருந்து துருக்கிக்கு சென்றிருந்தார்.

    இந்நிலையில், கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விஜய்குமார் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    அவர் கடந்த 5-ந் தேதி கடைசியாக தன்னுடைய குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி இருந்தார். அதன்பிறகு, விஜய்குமாரை குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிலநடுக்கத்திற்கு பின்பு விஜய்குமார் மாயமாகி இருப்பதால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விஜய்குமாரை மீட்டு கொடுக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய்குமார் மாயமாகி இருப்பது குறித்து துருக்கியில் உள்ள இந்திய நாட்டு தூதரகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டலில் மீட்பு பணிகள் நடந்து வருவது பற்றி தகவல் கிடைத்திருப்பதாகவும், அதன் பின்னரே விஜய்குமார் பற்றிய தகவல் தெரியவரும் என்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் சித்தப்பா கூறியுள்ளார்.

    • துருக்கியில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.


    தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும் கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெளியே பறந்து சென்று விழுந்தன.
    • படுகாயம் அடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நசிலி:

    துருக்கி நாட்டின் அய்டின் மாகாணத்தில் உள்ள நசிலி மாவட்டத்தில் ஓட்டல் ஒன்றில் எரிவாயு சிலிண்டரை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அந்த ஓட்டலின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெளியே பறந்து சென்று விழுந்தன. அந்த கட்டிடத்தின் முகப்புபகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

    தீயில் இருந்த தப்பிக்க இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக குதித்த இரண்டு பேர் உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்ததுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மாகாண ஆளுநர் அனடோலு தெரிவித்துள்ளார்.

    • போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • ஐஎஸ் அமைப்பால் முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது

    இஸ்தான்புல்:

    துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்திக்லால் கடை வீதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் மக்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது.

    குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    2015-2016 காலகட்டத்தில் துருக்கியை குறி வைத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • விபத்து பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.
    • அவசர கால பணியாளர்கள், பத்திரிகையாளர்களும் பலியாகினர்.

    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்புப் படையினர் மருத்துவக் குழுக்கள் மற்றும் பிற குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.

    இதையடுத்து இரு விபத்துக்களிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.

    இதில் அவசர கால பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பலியாகினர். காயமடைந்த 29 பேரில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

    சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். #SaudiJournalist #JamalKhashoggi
    அங்காரா :

    சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.

    இதற்கிடையே இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

    அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.

    அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக தூதரகத்தில் சோதனை நடத்தி விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளதாகவும், அதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் துருக்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.



    நீண்ட இழுபறிக்கு பின்னர் சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று தூதரகத்துக்கு வந்த சீருடை அணிந்த துருக்கி போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். #SaudiJournalist #JamalKhashoggi
    அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கை சட்ட விரோதமாக இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாது என துருக்கி அறிவித்துள்ளது. #USTurkeyClash
    அங்காரா :

    துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின்னர் மக்கள் செல்வாக்குடன் அது முறியடிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்டம் தீட்டிய துருக்கிய அரசியல் குழு ஒன்றுடன் அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர் தொடர்பு வைத்திருந்து உளவு வேலை பார்த்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை விடுதலை செய்யக்கோரி அமெரிக்கா பலமுறை கோரிக்கை விடுத்தும் துருக்கி அதை கண்டுகொள்ளாததால் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியது.

    இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு வெளியிட்டார்.

    துருக்கி-அமெரிக்கா இடையிலான இந்த மோதல் போக்கால் ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு டாலருக்கு நிகரான துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. மேலும், இது இந்திய ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.



    இந்நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் சட்ட விரோத கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என துருக்கி அதிபர் எர்டோகன் ஊடங்களிடம் இன்று தெரிவித்தார்.

    இது தொடராக அதிபர் எர்டோகன் கூறுகையில், 'துருக்கி  சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றி மட்டுமே செயல்படும். இரட்டை வரிவிதிப்பு போன்ற மிரட்டல்கள் மூலம் எங்களை பணிய வைக்கலாம் என அமெரிக்கா நினைக்க கூடாது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், சட்ட விரோதமாக அமெரிக்காவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என கூறினார்.

    துருக்கி-அமெரிக்கா இடையே நாளுக்கு நால் வலுத்து வரும் மோதல் இந்தியா உள்பட பிற நாடுகளின் பொருளாதாரத்திலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #USTurkeyClash
    ஈராக் நாட்டின் வடக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இஸ்தான்புல்:

    ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

    பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

    இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள சாப், காரா மற்றும் ஹக்குர்க் பகுதிகளின் வான் பகுதிகளில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
    ×