search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • “ஆடி அமாவாசை”யை முன்னிட்டு 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

    ஸ்ரீசித்தர் பீடத்தில் "ஆடி அமாவாசை"யை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன் தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும்,

    உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடியநோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.

    கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கி மதியம் வரை நடந்தது.

    இதில், பங்கேற்ற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.

    யாக வழிபாடுகளைத் தொடர்ந்து ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
    • சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரதிபெற்ற பனிமயமாதா கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் அருகில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் வந்து செல்வதற்கும் மற்றும் பொழுதுபோக்கு மேற்கொள்வதற்கும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் திறப்பு விழாவிற்கு மாதாகோவில் பங்குதந்தை குமாரராஜா ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் பாதர் ஆரோக்கியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், ஓஎல்எஸ் பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா, மற்றும் மணி, ராக்கேஷ், பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான ராட்சத விளையாட்டு சாதனங்கள் ராட்டினம் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

    • தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது
    • தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக துடிசியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்(துடிசியா) சங்க தலைவர் நேரு பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்கராஜ், சந்திர மோகன், சுப்புராஜ் இலையன்ஸ்ராஜா ஆகியோர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

    தொழில் கண்காட்சி

    தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது.தென்கோடியில் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சேர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இக்கண்காட்சி உதவும்.

    அதன்படி இந்த வருடம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

    சிறு, குறு கனரக நிறுவனங்கள்

    இதில் 180-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக நிறுவனங்கள் பங்கு பெற்று, தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.

    மேலும் வாங்குவோர் விற்போர் கருத்தரங்கு, புதிய தொழில் முனைவோருக்கான அரங்குகள்மற்றும் ஏற்றுமதி இறுக்குமதியாளருக்கான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.

    அரசு துறைகளான சிட்கோ, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை, தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட தொழில் மையம் போன்றவையும், தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, போன்ற வங்கிகளும் அரங்குகளை அமைக்கின்றன.

    தொடக்க விழா

    நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்திட இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது. கண்காட்சியின் தொடக்க விழா 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    கனிமொழி எம்.பி., சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திரேஸ்புரம் கடற்கரையில் ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் நடைபெற்ற தூர்வாரும் பணியினை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
    • அமைச்சர்கள் கீதாஜீவன், செஞ்சி . மஸ்தான், கலெக்டர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி 3-வது மைலில் ஆரம்பித்து பக்கிள்ஓடை முடிவடையும் பகுதி வரை திரேஸ்புரம் கடற்கரையை தூர்வரப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை பக்கிள் ஓடை கடற்கரையில் சந்திக்கும் இடமான திரேஸ்புரம் கடற்கரையில் ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் நடைபெற்ற தூர்வாரும் பணியினை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி . மஸ்தான், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உலகமணி நேற்று இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று உலகமணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந் தவர் உலகமணி (வயது58).

    வளையல் வியாபாரி

    இவர் மோட்டார் சைக்கிள் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வளையல் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை-தூத்துக்குடி பாலப்பணிகள் நடைபெறும் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உலகமணி மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் கூஞ்சன்விளை இவரது சொந்த ஊர் ஆகும்.
    • சின்ன வயதில் இருந்து கலெக்டராக ஆசைப்பட்டு விடாமுயற்சியில் படித்தேன் என்று ஷீஜா கூறினார்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 13-ந்தேதி நேர்காணல் தேர்வு நடைபெற்றது.

    வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டி.எஸ்.பி., வணிகவரி உதவி ஆணையர், ஊரகவளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகள் ஷீஜா மாநில அளவில் 9-வது இடம்பிடித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் கூஞ்சன்விளை இவரது சொந்த ஊர் ஆகும். மாநில அளவில் 9-வது இடம் பெற்றது குறித்து ஷீஜா கூறுகையில், சின்ன வயதில் இருந்து கலெக்டராக ஆசைப்பட்டுவிடாமுயற்சியில் படித்தேன். எனது பெற்றோரின் உதவியுடன் இந்நிலைக்கு வந்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்றார்.

    • தூத்துக்குடி கே.டி.சி.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வாலிபரின் மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் 10 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.டி.சி.நகர் கொத்தனார் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொத்தனார் காலனியில் இருசக்கர வாகனத்துடன் சந்தே கப்படும்படி நின்ற வாலி பரை பிடித்து விசாரித்தனர்.

    அந்த வாலிபர் தூத்துக்குடி மீளவிட்டான்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்( வயது 21) என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்ததை தொடர்ந்து அவரையும், அவரது மோட்டார் சைக்கிளையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் 10 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    அமைச்சர்

    அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் சாருஸ்ரீ, வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    நடவடிக்கை

    திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும்.

    மேலும் திருவிழா கடைகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், உணவுகள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதையும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு திருவிழாவில் முறைப்படி கொடியேற்றத்துடன் எல்லா ஆராதனைகளும், தேர்பவனி, கொடிபவனி, நற்கருணைபவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

    கொடியேற்றம்

    மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை நேரடியாக தரிசிக்கலாம். அதே போன்று திருவிழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடைபெறும்.

    வருகிற 26-ந் தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள்உரை, அருள்இரக்கஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணைஆசீர் ஆகியவை நடைபெறும்.

    அரசின் விதிமுறை

    திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
    • பேச்சு போட்டியானது 6 முதல் 8-ம் வகுப்புகள் மற்றும் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    பெருந்தலைவர் காம ராஜரின் பிறந்தநாளை நாடார் மகாஜன சங்கம் (என்.எம்.எஸ்) மற்றும் ராஜா கே.எஸ்.பி.கணேசன் அகாடமி கல்வித் திருவிழா வாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. இவ்விழாவின் மூலமாக பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான பேச்சு, கட்டுரைப்போட்டி வரும் 15-ந் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது.

    மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தூத்துக்குடி காரப் பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    பேச்சு போட்டி

    மாவட்ட அளவிலான இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 40 பள்ளிகளில் இருந்து 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவி களுக்கான பேச்சு போட்டியானது 6 முதல் 8-ம் வகுப்புகள் மற்றும் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி மட்டும் நடத்தப்பட்டது.

    போட்டியின் முடிவில், முதல் பிரிவில் ஸ்ரீதர்ஷினி, மேபெல் டென்னிஸ், விஸ்வநிகந்தர்யா ஆகியோரும், 2வது பிரிவில் ஸ்பெனா, ஜனனிஸ்ரீ, வினோதினி, ஜோதிஸ்ரீ ஆகியோரும், 3-வது பிரிவில் சகுந்தலா, பத்மா, சேவிமஹிகா, காளீஸ்வரி ஆகியோரும் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு என்.எம்.எஸ் மற்றும் ராஜா கே.எஸ்.பி.கணேசன் அகாடமி மாநில ஒருங்கிணைப்பாளர் அவனிமாடசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் விவே கானந்தன், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் மதன் சுப்பிரமணியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    இதில், தூத்துக்குடி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் சதீஷ், காரப் பேட்டை நாடார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செய லாளர் செல்வராஜ், தலை மை யாசிரியர் நடராஜன், பேராசிரியர் ஜாகீர் உசேன் மற்றும் ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனைக் கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமை தாங்கினார்.
    • சிறப்புவிருந்தினராக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் டல்லஸ் கலந்துகொண்டு உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் வழிமுறைகள், விதிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரது உத்தரவின்படி பொறுப்பாளர் சுதீஷ், மண்டல பொறுப்பாளர் பார்த்தசாரதி ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்டம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்ட துணை செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் டல்லஸ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் வழிமுறைகள், தேர்தலின்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

    இதில், ஒன்றிய செயலாளர்கள் அதிசயராஜ், ஜெயகுமார், சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், ராஜபொம்மு, மகளிரணி மாலதி, மாவட்ட நிர்வாகிகள் செல்வம், துரை, ஜெயகுமார், ஸ்மார்ட்சுரேஷ், தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் சின்னத்துரை, தோப்புஅரசமுத்து, நாராயணமூர்த்தி, சம்சுதீன், கந்தன், அரசமுத்து, பகுதி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர்கள் மீனாட்சிவிஜி, கோபால், முல்லைகண்ணன், வட்ட செயலாளர்கள் வல்லரசுதுரை, சுப்பு, சுரேஷ், கண்ணன், பால்ராஜ், தமிழ்செல்வன், ராமசந்திரன், ஜெகதீசன், சிவகுமார், ஊராட்சி செயலாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ஜெகநாதன் சிறப்புரை ஆற்றினார்.
    • தமிழகத்தில் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க அரசை கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    மதுரையில் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி நடைபெறும் ஐ.என்.டி.யூ.சி. மாநில மாநாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. சார்பாக ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். மாநில ஐ.என்.டி.யூ.சி. மூத்த துணை தலைவர் கதிர்வேல் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ஜெகநாதன் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில செகரட்டரி ஜெனரல் பன்னீர்செல்வம், மாநில அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி, தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் சுடலை, தேசிய துறைமுக தொழிலாளர் சங்க தலைவர் சந்திரசேகர், இந்திய உணவுக் கழக தலைவர் வீரய்யா, அனல் மின் நிலைய தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பனை வாரிய உறுப்பினர் எடிசன், டி.சி. டபிள்யூ. முருகன் மற்றும் நிர்வாகிகள் பாலராஜ், ஸ்டீபன், சுரேஷ்குமார், முருகேசன், பால்ராஜ், ஜெயபாக்கியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்ட் 7-ந்தேதி நடைபெறும் ஐ.என்.டி.யூ.சி. மாநில மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 25 வேன்களில் சென்று ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் கலந்து கொள்வது.

    தமிழகத்தில் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிகளில் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • புதிய தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    விளாத்தி்குளம் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், உமையனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட அருங் குளம், ஜக்கம்மாள்புரம், வள்ளிநாயகபுரம், மந்திகுளம், இலந்தைகுளம், லட்சுமி நாராயணபுரம், விரிசம்பட்டி, நெடுங்குளம், கன்னிமார்குட்டம், தத்தனேரி, துவரந்தை, குறளயம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

    மானாவாரி பயிர் சாகுபடியை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் இப்பகுதி விவசாய நிலங்களில் தற்போது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். காற்றா லைகள் அமைப் பதற்காக நில உரிமை யாளர்களான விவசாயி களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அத்துமீறி இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் விளாத்திகுளம் தாலுகா பகுதி விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத அளவிற்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு கால்நடை களுக்கான மேய்ச்சல் தொழிலும் முடங்கியுள்ளது.

    விவசாய நிலங்களை பாழ்படுத்துவது குறித்து தட்டிக்கேட்கும் விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்து வருகின்றனர். அத்துமீறி விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு ஆதரவாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் இருந்து வருவது கண்டனத்திற்குரியதாகும்.

    பாதிக்கப்பட்டுவரும் அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

    இதில், இளைஞரணி நிர்வாகிகள் காமராஜ், கதிரவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×