search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • முருகன் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
    • மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டி.என்.பி. காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது32). இவர் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

    தீக்குளிப்பு

    நேற்று மாலை இவர் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி திடீரென தீக்குளித்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    10 சதவீத தீக்காயத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, முருகனின் அண்ணன் ஆவுடையப்பன். இவருக்கும் இவரது மனைவி சுப்புலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    தகராறு

    இந்நிலையில் சுப்புலட்சுமி தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தன்னிடம் கூறாமல் மகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததால் ஆவுடையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்தனர்.

    இது தொடர்பாக ஆவுடையப்பன், சுப்புலட்சுமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இது தொடர்பாக புகாரின் பேரில் தென் பாகம் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன், வியாபாரி முருகன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி உறுப்பினர் அட்டை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு முறை சாரா தொழிலாளர் காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வைப்பார் சமுதாய நல கூட்டத்தில் நடைபெற்றது.

    ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கி இலவசமாக உறுப்பினர் அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர், கிராம தர்மகர்த்தா வீரமல்லு, சமுதாய தலைவர் முத்துராமலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முருகதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
    • 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்ய னடைப்பு சித்தர் நகரிலுள்ள பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரருக்கு சனிப்பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    காலை 10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலெட்சுமி ஹோமத்துடன் சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மகாபூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 9மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் சிவராத்திரி வழிபாடு பூஜைகள், சிவ பெருமானுக்கு 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவாரம், திருவாசக பாராய ணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரா தனை நடைபெற்றது.

    இரவு 10மணிக்கு பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணம் நடந்தது.

    இன்று அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால யாக பூஜை சதுர்வேத பாராயணத்துடனும் நடை பெற்றது. காலை 4மணிக்கு 4-ம் கால யாக பூஜை, சிறப்பு அபிஷேம், அலங்கார தீபாராதனைகளுடன் கோலாகலமாக நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • சங்கர ராமேஸ்வரர் கோவிலில் 216 சிவலிங்க பூஜை நடைபெற்றது.
    • விழாவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான சங்கர ராமேஸ்வரர் சிவன்கோவில் அமைந்துள்ளது. சனிப்பிர தோஷம் சிவராத்திரி இரு நிகழ்வுகள் ஓரே நாளில் வந்ததை யொட்டி சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடும், சிவராத்திரியை முன்னிட்டும் 216 சிவலிங்க பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து சிவராத்திரி விழாவில் நான்கு கால சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒம் நமசிவாய எழுதினர். மேலும் கோவில் கலையரங்குகளில் நாதஸ்வர கச்சேரி, பரத நாட்டியம், மாறுவேட போட்டி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றன.

    கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் தலைமையில் நிர்வாக செயல் அலுவலர் தமிழ்செல்வி, அரசு துறை அதிகாரி இசக்கியப்பன், பிரதோஷ கமிட்டி தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, ராதாகிருஷ்ணன், கோவில் நிர்வாகத்தை சார்ந்த நெல்லையப்பன், கல்யாணி, செல்வ மாரி யப்பன், கணக்கர் சுப்பையா உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

    • வேல்சாமி டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 90). இவர் டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    தகராறு

    அதேபகுதியை சேர்ந்த மற்றொரு கடையில் வேலைபார்த்து வரும் முத்து, விஜயன் ஆகியோர் அங்கிருந்த முட்செடிகளை அகற்றி வேல்சாமி வேலைபார்க்கும் கடையின் முன்பு கொட்டியுள்ளனர். இதனை அவர் தட்டிக்கேட்டு ள்ளார்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது வீசி தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வேல்சாமி தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக தாள முத்துநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்து, விஜயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக எழுதி அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத் தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநி யோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.

    இதில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்து ரைத்து தீர்வு காணவும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடல் திறனாய்வு தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
    • காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடற்கல்வி ஆசிரியர்களை பாராட்டினார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது.இதில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் 931 பேருக்கு உடற் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு கடந்த 6-ந் தேதி முதல் நேற்று.வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல்துறையினருக்கு உறுதுணையாக பணியாற்றிய மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் 20 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,காவல் துணை கண்காணிப்பா ளர்கள் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு கல்பனா,தூத்துக்குடி . சத்தியராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடியில்இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறது.
    • தொடர்ந்து 7 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறது.

    இந்நிலையில், தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.இந்நிலையில் நேற்று தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமை யாளர்கள் தொழிலாளர்க ளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது,

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மீன் பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி துறைமுக நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலை வருகிறது. தூத்துக்குடியில் தொடர்ந்து 7 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மீனவர்களின் இந்த பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு மீனவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று மீனவர்கள் ஒரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 58-வது வார்டு பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூர் ரோடு 58-வது வார்டு பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. பகுதி செயலாளரும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனுமான ஆஸ்கர் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் வெள்ளபாண்டி,துணைச் செயலாளர்கள் அந்தோணி குரூஸ், கல்பனா, மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணி ராஜ்,ஆதி ஆனந்த், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரகு வரவேற்றார். கூட்டத்தில் வட்டச் செயலாளர்கள் வசந்தி, சுப்பிரமணியன்,மைக்கேல், கருப்பசாமி,முன்னாள் கவுன்சிலர் ஸ்பிக் நகர் ஜெயக்குமார்,பகுதி இளைஞரணி அருண், வேல்மயில்,சுபாஷ் ஞானதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகுதி கழகம் சார்பாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர். இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளுக்காக 23 விடுதிகளும், பள்ளி மாணவர்களுக்காக 27 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 1 விடுதியும், கல்லூரி மாணவர்களுக்காக 2 விடுதிகளும், ஐ.டி.ஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்விடுதிகளில் சுமார் 1,404 மாணவிகளும், 1,453 மாணவர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் மிகவும் தரமான உணவு வகைகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கென உறைவிடமும் சுகாதாரமான முறையில் பாராமரிக்கப்படுகிறது. தொடர் தணிக்கை செய்து விடுதிகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட வகை செய்வதோடு, முதல்-அமைச்சரே விடுதிகளை தணிக்கை செய்கிறார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் எவரேனும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் குடும்பத்தாருக்கு அவர்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமலிருக்க அரசால் உடனடியாக தீருதவி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு காகித வடிவில் வழங்கப்பட்டு வந்த வீட்டுமனைப்பட்டாக்கள் அனைத்தும் கணினி பட்டாவாக மாற்றம் செய்து கணினி பட்டா வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் சீரிய முயற்சியில் தமிழகம் ழுமுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தையல் எந்திரம் இயக்க தெரிந்த சான்று பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன பெண்களுக்கு அரசு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை நமது மாவட்டத்தில் பல நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆறுமுகம் இசைராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை-திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் அரியபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இசைராஜ்(வயது 27).

    தற்கொலை

    இவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டைக்கு அவரது உறவினர்கள் விரைந்து சென்றனர்.

    அப்போது அவர்கள் ஆறுமுகம் இசைராஜை சிலர் தற்கொலைக்கு தூண்டி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ், வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்றது.
    • கலெக்டர் செந்தில்ராஜ் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 32-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, சென்ற ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, தலைமை உரையாற்றினார்.

    பள்ளி தாளாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் டேவிட் நன்றி கூறினார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ×