search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிபொருள்"

    சென்னையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 15 காசுகளாகவும், டீசல் விலையை 31 காசுகளாகவும் எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. #FuelPrice
     சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது. இதற்கிடையே, கலால் வரியை குறைத்துக் கொள்வதன் மூலம் 2.50 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 

    இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 84.89 ரூபாயாகவும், டீசல் விலை 77.42 ரூபாயாகவும் விற்பனையானது.
    இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

    அதன்படி, பெட்ரோல் விலையில் 15 காசுகள் உயர்த்தி 85.04 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்த்தி 77.73 ரூபாய்க்கும் எண்ணை நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

    பெட்ரோல்-டீசல் விலையின் இந்த தொடர் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPrice
    இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் அடிப்படை பணிகளை பிரதமர் மோடியும் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர். #Modiinaugurate #FriendshipPipeline
    புதுடெல்லி:

    வங்காளதேசத்திற்கு டீசல், மற்றும் இயற்கை எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய்களை இந்தியா அமைக்க உள்ளது.

    மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் இருந்து வங்காளதேசத்தின் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பர்பத்திப்பூர் பகுதி வரையில் 131 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் குழாய் அமைக்கப்படுகிறது. இந்தக் குழாய் வழியாக டீசல் கொண்டு செல்லப்படும்.

    அடுத்ததாக, மேற்கு வங்காளத்தின் தாத்தபுலிய பகுதியில் இருந்து, வங்காளதேசத்தின் குல்னா பகுதி வரை இரண்டாவது குழாய் அமைக்கப்படுகிறது. இந்தக் குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும்.

    மேலும், வங்கதேசத்தில் திரவ வடிவ இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா தீர்மானித்துள்ளது.

    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது வங்கதேசத்துக்கு அடுத்த 15 ஆண்டுகள் டீசல் வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா  கையெழுத்திட்டது. இதன்படி, முதலில் ரெயில்கள் மூலம் டீசல் வங்கதேசத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பின்னர், குழாய்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வழியாக டீசல் அனுப்பப்படும் என ஒப்பந்தம்  செய்யப்பட்டிருந்தது.



    இந்நிலையில், பர்பத்திப்பூர்  வரையில் 131 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் குழாய் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை பிரதமர் மோடியும் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.

    மேலும், வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து டோங்கி வரையிலும், டோங்கியில் இருந்து ஜாய்தேவ்பூர் வரையிலுமான இரட்டை வழித்தட ரெயில் பாதகளை அமைக்கும் பணிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

    டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த தொடக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

    டாக்காவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷேக் ஹசீனா, நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த மோடி, வரும் 28-ம் தேதி பிறந்தநாள் காணும்  ஷேக் ஹசீனாவுக்கு வங்காள மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். #Modiinaugurate  #FriendshipPipeline 
    சுற்றுச்சூழலை பாதிக்காத பயோ டீசல் மும்பையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்சமயம் பயன்படுத்தப்படும் டீசலுக்கு மாற்றாக அமைந்துள்ளது. #biotech #diesel



    சுற்றுச்சூழலை பாதிக்காத பயோ டீசலை மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த மை எகோ எனர்ஜி (எம்.இ.இ.) எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. புனே-மும்பை நெடுஞ்சாலையில் இதற்கான விற்பனையகத்தையும் அமைத்துள்ளது. இந்நிறுவனம் பயோ டீசல் விற்பனைக்காக அமைக்கும் இரண்டாவது விற்பனையகம் இதுவாகும்.

    தாவர எண்ணெய், வேளாண் கழிவுகள், உணவில் பயன்படுத்த முடியாத எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை மூலம் இந்த பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. இது அனைத்து டீசல் என்ஜின் வாகனங்களுக்கும் ஏற்றது.

    வழக்கமாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலுக்கான தர அளவீட்டின்படி இ.என். 590 தரத்தைக் கொண்டதாக இந்த பயோ டீசல் உள்ளது. இதனால் டீசல் என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யத் தேவையில்லை என்று எம்.இ.இ. நிறுவனத்தின் இணை நிறுவனர் சந்தோஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

    ‘இண்ட்-டீசல்’ என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த பயோ டீசல் ஒரு லிட்டர் 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருவதால் ஜி.எஸ்.டி.யில் பதிவுபெற்ற சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் இண்ட்-டீசலை பயன்படுத்தினால் லிட்டருக்கு ரூ.8 வரை சலுகை பெறலாம்.

    இண்ட்-டீசலை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறையும். ஏனெனில் இதில் வழக்கமான டீசலில் உள்ளதைப் போன்ற கந்தக அளவு கிடையாது. இது அதிக அளவில் புழக்கத்திற்கு வரும்போது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் கணிசமாகக் குறையும்.
    கோவை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் வரிச்சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    கோவை:

    கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது-

    வரலாற்று சிறப்பு மிக்க போலீஸ் அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதிகாலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை உள்ள பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்ப வரிச்சலுகை தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    ×